அழகும் விடுதலையும்
"என்னை ஏனோ அழகாக
ஈசன் படைக்க வில்லை"யென
எண்ணி, எண்ணி ஒருகாக்கை
ஏங்கிச் சுற்றித் திரிகையிலே,
கூட்டில் அழகிய கிளியொன்றைப்
போட்டு அடைத்து, ஒருபையன்
வாட்டி வதைக்கக் கண்டதுவே
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.
"அழகாய் என்னைப் படைத்திருந்தால்,
அடியே னுக்கும் இக்கதிதான்.
அழகைக் காட்டிலும் விடுதலையை
அளித்தார், ஆண்டவன்" என்றதுவே.
|