கண்ணீர் சொரியும் மான்அதனைக் கண்டார் ஜவஹர். கண்டதுமே, புண்ணாய்ப் போனது அவர்மனமும். கண்ணீர் விட்டார். அக்கணமே, “துப்பாக் கியைநான் இனிமேலே தொடவே மாட்டேன். சத்தியமே” இப்படி உடனே கூறினரே. இதுவரை சொல்லைக் காத்தனரே.