பக்கம் எண் :

190மலரும் உள்ளம்

நிலைத்த ஆலமரம்

சாலைவ ழியிலோர் ஆலமரம் - அது
    தங்க நிழலினைத் தந்தமரம்.
சாலைவ ழியாகச் செல்பவர்க்கு - அது
    தளர்வு மாற்றியே நின்றமரம்.

களைத்து வருந்தியே வந்திடுவார் - அங்குக்
    கால்வலி தீர அமர்ந்திடுவார்.
இளைத்த அவர்க்குமே இன்பம்தரும் - அன்றி
    இன்னலும் தீர்த்து வழியனுப்பும்.

பள்ளிச் சிறுவர்கள் ஓடிவந்தே - அங்குப்
    பற்பல ஆட்டங்கள் ஆடிடுவார்.
அள்ளியே சுள்ளிகள் சேர்த்திடுவார் - நல்ல
    அந்தணர் வேள்வி நடத்திடவே.

காலைப் பொழுதிலே பல்துலக்க - அது
    கனிவுடன் குச்சிகள் தந்திடுமே.
மாலைப் பொழுதினைப் போலதுவும் - என்றும்
    மனங்கு ளிர்ந்திடச் செய்திடுமே.