“கண்ணே!” என்று அருகில் சென்று
கட்டிக் கொண்டனர்.
“காயம் உண்டோ?” என்று உடலைத்
தடவிப் பார்த்தனர்.
“ஒன்று மில்லை, என்றன் குதிரை
வந்து சேர்ந்ததா?”
என்று கேட்டுக் கொண்டே ஜவஹர்
வீடு வந்தனர்.
குதிரை மீது ஜவஹ ருக்குக்
கோபம் வந்ததா?
கொஞ்சம் கூடக் கோபமில்லை;
அன்பி ருந்தது!
அதிக மான வீரத் தோடு
குதிரை ஏறியே
அடுத்த நாளும் சுற்ற லானார்
வழக்கம் போலவே!
|