பக்கம் எண் :

24மலரும் உள்ளம்

அடைபட்ட சிங்கம்

சிங்கம் எங்கே பார்க்கிறாய் ?
சீறிப் பாய எண்ணமோ ?

கொண்டு வந்து உன்னைத்தான்
கூட்டில் போட்டு விட்டோமே !

வெள்ளி போலத் தலைமயிர்
விரித்து நிற்கும் சிங்கமே,

கொள்ளி போன்ற கண்களால்
"குறுகு" றென்று பார்ப்பதேன் ?

கத்தி போன்ற நகங்களால்
கம்பி யைத்தான் கீறலாம்.

உயிரைக் கொன்று கம்பியின்
உடலைக் கிழிக்க முடியுமோ ?

மிருக ராஜ சிங்கமே,
மிரட்டி ஏனோ பார்க்கிறாய் ?

கூட்டை விட்டு வரவேதான்
பூட்டுப் போட்டி ருக்குதே !