திருவிழா
திருவி ழாவாம் திருவிழா!
தேரி ழுக்கும் திருவிழா!
ஒருமு கமாய் மக்களெல்லாம்
ஒத்துக் கூடும் திருவிழா.
பட்டு ஆடை உடுத்தலாம்;
பாட்டி கையைப் பிடிக்கலாம்;
கொட்டு மேளம் கேட்டதும்
"குடுகு" டென்று ஓடலாம்.
ஆனை, குதிரை பார்க்கலாம்;
அதிர் வேட்டுக் கேட்கலாம்.
சேனை போல யாவரும்
திரண்டு கூடிச் செல்லலாம்.
|