பக்கம் எண் :

40மலரும் உள்ளம்

பட்டம்

பறந்து மேலே சென்றிடும்
       பட்டம் பார்,பார் தம்பியே.
பருந்து கூட இதனைப்போல்
       பறக்கு மோநீ சொல்லுவாய்.

வாலும் உள்ள பட்டமாம்;
       வாலில் லாத பட்டமாம்;
மேலும், மேலும் செல்லுதே.
       "விர்வி" ரென்று கத்துதே.

பச்சை, நீல வர்ணமும்
       பட்டம் தன்னில் காணுதே.
உச்சி மீது வானத்தை
       ஓட்டை செய்யப் பார்க்குதே!

காற்ற டிக்கும் திக்கிலே, 
       கையும் சேர்த்தி ழுக்குதே !
பார்ப்போம் என்றே மேகத்துள்
       பார்,பார், தம்பி ஒளியுதே !