பக்கம் எண் :

6மலரும் உள்ளம்

ரொட்டி

ரொட்டி, ரொட்டி, ரொட்டியாம்!
வெட்டி, வெட்டி, வெண்ணெய்யில்,
தொட்டுத் தொட்டு வாயிலே,
பிட்டுப் பிட்டுப் போடலாம்.

ரொட்டி என்று சொன்னதும்
மட்டில் லாத ஆசைதான்.
சொட்டு தம்மா எச்சிலும்.
துட்டுக் கெங்கே போவது?

கிட்ட உள்ள கடையிலே 
ரொட்டி கூட விற்குது.
துட்டில் லாமல் கிடைக்குமோ?
தட்டி டாமல் தந்திடு.