நாய்க்குட்டி
தோ... தோ... நாய்க்குட்டி.
துள்ளி வாவா நாய்க்குட்டி.
உன்னைத் தானே நாய்க்குட்டி.
ஓடி வாவா நாய்க்குட்டி.
கோபம் ஏனோ நாய்க்குட்டி ?
குதித்து வாவா நாய்க்குட்டி.
* * *
கழுத்தில் மணியைக்
கட்டுவேன்;
கறியும் சோறும் போடுவேன்.
இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு! |