பக்கம் எண் :

மலரும் உள்ளம்83

உழவர் வாழ்க!

உண்ண உணவு தந்திடும்
       உழவர் வாழ்க, வாழ்கவே,
மண்ணை உழுது பயிர்களை
       வளர்க்கும் உழவர் வாழ்கவே.

ஒன்றை நூறு நெற்களாய்
       உண்டு பண்ணித் தருபவர்;
நன்கு உழுது வியர்வையால்
       நனைந்து போக உழைப்பவர்;

கண்ணைப் போலப் பயிர்களைக்
       காத்து உயிர்கள் காப்பவர்
உண்ண உணவு இன்றியே
       உடல் வருந்தல் நீதியோ?

பாடு பட்டு உழுபவர்,
       பலனும் கண்டு தருபவர்,
நாடு வளர வாழ்பவர்,
       நன்கு வாழ்க, வாழ்கவே !