பக்கம் எண் :

மலரும் உள்ளம்111

ஆண்டு பிறந்தது

ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது.
ஆண்டு பிறந்ததடா!
அன்பும் அறமும் அறிவும் வளர்ந்திட
ஆண்டு பிறந்ததடா!

ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது.
ஆண்டு பிறந்ததடா!
அன்னைநன் னாடும், மொழியும் சிறந்திட
ஆண்டு பிறந்ததடா!

ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது.
ஆண்டு பிறந்ததடா!
வேண்டும் நலங்கள் விரைவில்கை கூடிட
ஆண்டு பிறந்ததடா!

ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது,
ஆண்டு பிறந்ததடா!
அனைவரின் வாழ்விலும் ஆனந்தம் பொங்கிட
ஆண்டு பிறந்ததடா!