பக்கம் எண் :

தேசிய கீதங்கள

தேசிய இயக்கப் பாடல்கள்

நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்


[
நநதனார் சரித்திரத்திலே சேரிப் பறையர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து நந்தனாரையும் அவரது கட்சியாரையும்
பழிக்கின்றார்கள். சேரியில் மாட்டிறைச்சி யுண்டு
புலைவாழ்வு வாழ்ந்துகொண்டு ஆண்டைப் பார்ப்பானுக்கு அடிமை செய்வதே ஸ்வர்க்க மென்றறியாமல்,
சிதம்பரப் பயித்தியங்கொண்டலையும் நந்தனாராலும், அவருடைய சீடர்களாலும் பெரிய கேடுகள் விளையக
கூடுமென்று வருத்தங்கொண்டு “நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப் பூமியில்லாத புதுமையைக் கண்டோம்”
என்று யோசிக்கிறார்கள். அந்தப் பாட்டின் கருத்தையும் வர்ண மெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல்
எழுதப்பட்டிருக்கின்றது. மேத்தா கோகலே முதலிய
நிதானஸ்தர்கள் நமது தேச விமோசன மென்னுஞ்
சிதம்பரத்தை எண்ணி ஆசைகொண்டு பரவச நிலையிலிருக்கும் திலக முனிவராலும், அவரது கட்சியாராலும் நாட்டிற்குக் கெடுதி விளையுமென்று பேசும் விஷயங்கள் அமைக்கப்
பட்டிருக்கின்றன.]

[ ராகம் -- புன்னாகவராளி ] [தாளம் -- ரூபகம்]

பல்லவி

நாமென்ன செய்வோம், துணைவரே -- இந்தப்

பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம்.
(நாம்) 1

சரணங்கள்

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு.
(நாம்) 2

\பு{[குறிப்பு]: ‘நிதானக் கட்சியார் கூட்டம்’ என்பது ‘ஜன்ம பூமி’ தலைப்பு.}

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லி விட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்.
(நாம்) 3

பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்காரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை.
(நாம்) 4

சீமைத் துணியென்றால் உள்ளங் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாமெத்தையோ “வந்தே” யென்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார்.
(நாம்) 5