பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


தருமன் மறுத்தல்

தருமனங் கிவைசொல் வான் -- ‘ஐய!
சதியுறு சூதினுக் கெனைஅழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ? -- அறப்
பெற்றிஉண்டோ? மறப் பீடுளதோ?
வரும்நின் மனத்துடை யாய்! -- எங்கள்
வாழ்வினை உகந்திலை எனலறி வேன்;
இருமையுங் கெடுப்பது வாம் -- இந்த
இழிதொழி லாலெமை அழித்தலுற் றாய்.’
167