பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்


பல்வகைப் பாடல்கள்

கவிதா தேவி அருள் வேண்டல்


வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே.
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

5

எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவன் னாட்களிற்
பூம்பொழில் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்றன் வாள்விழி யொப்ப
10

நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்; குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள்போல் தண்ணிய
நீருடைத் தறிகிலேன்; நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.
15

வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகந் தொடுமுள்
வீழ்த்திடைத் தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
20

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை.
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்துபின் வந்து காண்பொழுது, ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்.
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்
25

புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பான்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன். பதகிநீ என்னைப்
பிரிந்துமற் றகன்றனை. பேசொணா நின்னருள்
30

இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்.
சின்னாள் கழிந்தபின் -- யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்
35

தன்மக னிடை ‘என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடல்
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!
40

தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன்றியா முடிந்தபின் மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்கு இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.
45

வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்.
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்: “ஏடா! நிற்க!
நிற்க! நிற்க! முன்னர்யா நினைந்தவாறு
அறத்துணை துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை.
50

காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனைய பல்லின்பம் இதன்கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்” பீழையோ டிவ்வுரை
செவியுறீஇ முடிசாய்த் திளையவன் சென்றனன்.
55

திங்கள்பல போயபின், முனிமகன் சென்று
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருந்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
“எந்தாய்! எந்தாய்! யாதரோ மற்றிது!
60

வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?”
எனப்பல கூறி இரங்கினன்; பின்னர்
வாள்கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைத் துரைக்கும்;
65

“செல்லடா; செல்கத் தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்:
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்துநீ மடிக”
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
70

இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்:
“ஆவா! மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெருமரு கின்றிலர். சிலபகல் கழிந்தபின்
75

புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்தில ரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்.”
திமிங்கில வுடலும் சிறிய புன்மதியும்
80

ஒரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை