பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

கிளிப் பாட்டுதிருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே -- கிளியே
மகிழ்வுற் றிருப்போ மடீ
 1

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியம மென்று
கற்றுத் தெளிந்த பின்னும் -- கிளியே
கவலைப் படலா குமோ?
2

துன்ப நினைவு களும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியு மடீ - கிளியே
அன்புக் கழிவில்லை காண்.
3

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று
ஆயிர மாண் டுலகில் -- கிளியே
அழிவின்றி வாழ்வோ மடீ,
4


தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத் துடன் பணிந்தால் -- கிளியே
நெருங்கித் துயர் வருமோ?

5