பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்


தோத்திரப் பாடல்கள்

நவராத்திரிப் பாட்டு


உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி


(உஜ்ஜயினீ!)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸவதீ ஸ்ரீஸ மாதா சா.


(உஜ்ஜயினீ!)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம்.


(உஜ்ஜயினீ!)

சத்ய யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி


(உஜ்ஜயினீ!)