பக்கம் எண் :

புகழ் மலர்கள்

அவ்வை துரைசாமி

அவ்வை துரைசாமிப்
   பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப்
   பிள்ளையன்றோ -- இவ்வையம்
எக்களிக்கத் தந்தான்
   இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து!

புறத்தின் உரைகள்
   புலனைத் திறமை
வரலாறு பேசும்
   மகிழ உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம்
   பண்பாட்டுச் சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை. புறம் ... புறநானூறு

நாலுக்கு நூலருமை
   காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை
   வேர்ப்பலாத் தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும்
   உண்மை உழைப்பாளன்,
அள்ளக் குறையாத ஆறு.

இரவுபகல் தானறியான்
   இன்தமிழைவைத்து
வரவு செலவறியான்
   வாழ்வின் உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு
   மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு.

கல்லாத் துறையில்லை
   கற்றதைச் சொல்லிபகை
வெல்லாத் துறையில்லை
   வெற்றிமிகும் எல்லாத்
துறைக்குமவன் தொல்லறிவும்
   துய்ப்பதறிவும் தூய்அக்
கறைக்குரிய நல்ல கரை.

முத்தமிழ் மாநாட்டில்
   மூண்டெழும் கோளரிமுன்
எத்தமிழன் ஈடும்
   இணையானான் எத்திசையும்
பார்ப்பனர்கள் செத்தார்
   பழந்தமிழ்ச் சான்றுகளால்
வேர்த்தனர் வீச்சறிவினால்.

சைவத்தில் பற்றுடையான்
   சார்ந்த உரை நூலில்
கைவைத்து நூலைக்
   கறைசெய்யான் -- பொய்வைத்த
பார்ப்பனச் சாமிநாத
   பார்ப்பின் பதிப்புகளை
நேர்படுத்து வான்நடு நின்று.
மின்னாள் உரையா
   சிரியர் முளைக்கவிட்ட
இந்நாள் களைகள்
   எடுத்தெறிவான் -- பன்னாள்
பழகியது போல் தமிழைப்
   பாருக் களிப்பான்
அழகியது அன்னோன் அறிவு.

பள்ளிமுதல் பல்கலைச்
   சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யுக்
   கொடைமழை வெள்ளத்தேன்
பாயாத ஊருண்டா
   உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்!




( 5 )




( 10 )






( 15 )




( 20 )





( 25 )





( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )
பொன்னம்பலனார்

முன்னை பழகுதமிழ்
   மூட்டியவர் பாரதியே,
பின்னை அழகுத்தமிழ்
   ஊட்டியவர் -- கொன்னை
வடசொற் கலப்பின்றி
   வண்டமிழ் இன்பம்
இடச்செய்தார் பொன்னம்பலம்.

திரைப்படத் தேவைக்கு
   சேலம்சென் றால் அக்
கறைதொண்டு காணுங்கா
   லத்தில் நுரைபடப்
பால்பொங்கல் போலே
   தனித்தமிழ்ப் பற்றை என்
பால் பொங்கும் பொன்னம்பலம்

தூய மறைமலையார்
   தொண்டறிவேன்; ஆனாலும்
ஏயதன் மான
   இயக்கத்தின் தாயாகக்
கொங்குநாட் டெல்லையிலே
   கொள்கையுடன் கூடிஎனில்
பங்குறுவார் பொன்னம்பலம்

விற்கத் தமிழ்கற்கா
   வீரர், விழைகல்வி
கற்கவரும் மாணவர்க்குக்
   கண்ணாவார் -- கற்கத்
கனித்தமிழ்ப் பாலடைகன்
   தாம்தருவார், எற்கும்
பனிமலர்ந்தேன் பொன்னம்பலம்.

தென்னறிவி னாலே
   தெளிவிப்பார் யாவரையும்
வெள்ளறிவைப் பேசி
   விரட்டிடுவார்! உள்ளறிவைத்
தேனாக்கி வைப்பார்
   செழுந்தமிழை என்னுயிர்
ஊனாக்கி வைப்பார் உவந்து.

மகிழ்வித்தே என்னை
   மணக்குமலர்த் தென்சொல்
அகழ்வித்தே ஆன்ற
   தமிழ்ச்சொல் முகிழ்வித்தே
இங்கடடா இஃதே
   தமிழ்ப்பாட் டெனப்புகழ்வார்
பொங்குற்றே பொன்னம்பலம்!

பாடுபடா துள்ளுணர்வைப்
   பச்சைக் களிமண்ணாய்
ஓடுபடச் செய்தல்
   ஒழுங்கன்று -- சூடுபடா
மண்பானை மாயும்
   தனித்தமிழ் மாண்பீந்தார்.
பொன்பானை பொன்னம்பலம்!

( 65 )



( 70 )





( 75 )





( 80 )





( 85 )




( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )
செகவீர பாண்டியனார்

செகவீர பாண்டியனார்
      என்னும் வேந்தர்
தென்பாண்டித் தமிழ்க்குரிய
       சிறப்பு மிக்கார்


அகமார முப்பாலின்
       குறள்களுக்கே
அணியணியாய்க் கதைகூறி
       மேற்கோள் கூட்டி


மிசு மாறுதல்காட்டி
       மேலை நாட்டார்
மெய்ப்பொருளை. சிந்தனையை
       வெல்லுமாறு

பகலேறு ஞாயிறுபோல்
       பொருள் விளக்கும்
பாண்டியனார் பெரும்புலமைப்
       பயனைக் கொள்க.

முத்தமிழில் ஒருதமிழும்
       முறையாய்க் கல்லா
மூடரெலாம் தமிழ்த்துறைக்கு
       முன்னே நின்று

சத்தமுடன் ஏதோதோ
       பிதற்றுவார்கள்
தப்பில்லா தொரு தொடரை
       எழுதார் பேசார்

இத்தகைய இழிஞரிடை
       ஈடில்லாத
இலக்கியநூல் இலக்கணநூல்
       எல்லாம் கற்ற
வித்தகன்போல் அடக்கமுடன்
       விளைசெய்வார் யார்?

எழுத்தெல்லாம் பாட்டாக
       இசை மணக்கும்
எண்ண எண்ணத் தித்திக்கும்
       இனிமை பொங்கும்!
முழுப்புலமை முச்சங்க
       முதிர்ச்சி காட்டும்.

பொழிப்புலமை வேர்ப்பலாவாய்த்
       தேனைக் கொட்டும்
அழிக்காறிலா அறிஞன்
       ஆரியர்க்கோ
அண்டமுடி யாநெருப்பு
       தமிழ் மக்கட்கு
விழுமருவித் தென்றலிசை
       விருந்தை ஒப்பார்!

செய்யும் நூல் ஓவ்வொறும்
       செந்தமிழர் வாழ்ந்திருக்கப்
பெய்யும் பெருவான் அமிழ்து!



( 115 )





( 120 )






( 125 )






( 130 )





( 135 )





( 140 )





( 145 )





( 150 )




( 155 )



கா. அப்பாதுரை

எப்பாத் துறைக்கும்
        இவனோர் பழம்புலவன்
அப்பாத் துரையறிஞன்
        ஆழ்ந்தகன்ற -- முப்பால்லேபா
நூலறிவு! நூறு
        புலவர்கள் சேரினிவன்
காலறிவு காணார் கனிந்து. (

ஆங்கிலத்தை அண்டை
        மொழிகளினைப் பண்டைநாள்
பாங்குற வாழ்ந்த
        பலமொழியை ஈங்கிவனே
செந்தமிழ்க்குச் சேர்க்கும்
        குருதியெனச் சேர்க்கின்றான்
சிந்நனையில் யாவும் செரித்து,

விருந்தெனும் நூலை
        வெளிநாட் டமிழ்தை
அருந்தெனத் தந்தான்
        அருந்திச் செருக்குற்றேன்
எத்தனை எத்தனை
        எண்ணித் தொகுத்தீந்தான்
அத்தனையும் முத்தமிழ்க்குச் சொத்து!

சின்னஞ் சிறுவர்முதல்
        சிந்தனையில் தோய்ந்தாயும்
பென்னம் பெரியவர்க்கும்
        பித்தாக்கும் வண்ணம்
அருநூல்கள் ஈவான்
        கலைக்களஞ்சி யம்போல்
வருநூலைப் பார்த்துவப்பேன் நான்!

ஆங்கிலத்தில் என்பாட்டை
        ஆரும் வியக்குவணம்
பாங்குறச் செய்தான்
        படித்தவர் பாராட்டி
வைய இலக்கியத்தில்
        வாழும்என் பேரென்றார்
ஐயமிலை அப்பாத் துரை!

அப்பாத் துரைகொண்டே
ஆயிரம்நூல் செய்க
தப்பா துயரும் தமிழ்!

( 160 )




( 165 )





170 )





( 175 )




( 180 )





( 185 )





( 190 )





( 195 )

மயிலை-சீனி வேங்கடசாமி

தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்க்கெட லாற்றா அண்ணல்
வேங்கட சாமி என்பேன்
விரிபொரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டேன்
வீங்கிடமாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான்.

தமிழுக்குத் தொண்டு செய்வோர்
தலைச்சங்க முதலாய் இன்றும்
தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
தலைத்தொண்டன்; அடிமை அல்லன்
குமிழ்பகுத் தறிவியக்கம்
கொள்கையில் அசைக் கொணாத
இமயமும் தோற்கும் அண்ணல்
ஈடிலாத் திறமை ஆற்றல்!

ஒன்றினும் திரியாதுள்ளம்
ஒண்டமிழ்க் குழைப்பதொன்றே
நன்றினும் நன்று என்று
துறவினை நயந்த மேலோன்.
நன்றிகெட் டதிகாரத்தை
நாடும் எவ்வரசும் அன்னார்
குன்றினும் மிகுந்த சீர்த்தி
கொண்டுயர் வளித்தார் இல்லை.

தமிழையே வணிகமாக்கித்
தன் வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ்முத லாக்கிக் கொண்டே
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச்சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்,


அஞ்சுதல் அறியா நெஞ்சன்
அகல்வரலாறு அனைத்தும்
மிஞ்சுதல் இன்றிக் கற்றோன்.
மேம்படும் நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத்துலக்க;
கேண்மையோ டுயர்வு செய்வான்.
எஞ்சுவது உமக்கொன்றுண்டோ
இவனை நீர் மறந்து விட்டால்?



( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )






( 230 )




( 235 )

பாரி செல்லப்பன்

வாரி வழங்குகின்ற
       வள்ளன்மை பண்டைய
பாரிக்கு மட்டுமே
       பண்பன்று நேரிலே
பாரி நிலையப்
       பழகுதமிழ்ச் செல்லப்பன்
கோரிப் பெறாதீவான் கொண்டு.

என்னுடைய நூற்களினை
       விற்கின்ற போதெல்லாம்
தன்னுடை தாய்தமிழ்
       வைத்தில்முன்னடையும்
ஆக்கமே பார்ப்பான்
       அரும்பொருள் எண்ணிடான்
ஊக்கமே ஆனால் உரு.

பெண்ணீர்மை தோற்கும்
       பிறைச்சிரிப்பு; அன்புள்ளம்;
தண்ணீர்மை தோற்கும்
       தலைப்பணிவு! கண்ணீர்மை
காட்சியிலே கொண்ட
       சினமடங்கும்; கற்றவரின்
மாட்சியிலே கொள்வான் மகிழ்வு

பிணக்குவியல் ஊடும்
       பிழித்துப் பிடுங்கிப்
பணக்குவியல் தேடும்
       பதராய் -- கணக்கெழுதும்
கொல்லப்பன் அல்லன்,
       குழந்தைமன நல்லப்பன்
செல்லப்பன் செந்தமிழின் சொத்து.



( 240 )





( 245 )




( 250 )





( 255 )





( 260 )




( 265 )
துணைவேந்தர் மணவாளரையே சென்னை மணக்க!

அண்ணா மலைப்பல் கலைக்கழ கத்தின்
துணைவேந் தராக இருக்கையில் தூய
மாணவ மகளிர்க்கு வாய்ந்த கற்பைச்
சுவர்வைத்துக் காத்தாம் அவர்யார் சொல்லுக?
பல்கலை பலவகை மாண வர்க்கும்
நல்கலை நன்று ணர்ந்த நல்லார்;
மணவாள ராமாநுசரே என்க.

தமிழறம் ஒழுக்கம் கமழா வாழ்க்கை
நமதன்றேநமதன்றே என்னும்
மணவாளரைச் சென்னை
மணக்க வேண்டும் வையம் மகிழவே.





( 270 )





( 275 )
திரு மணவாளராமானுசர் வேண்டும்

சென்னைப் பல்கலைக் கழகம் சிறக்க
என்னை உடைய எழிற்றமிழ் சிறக்கத்
துணைவேந்தர் நல்லராய்த் தோன்றுதல் வேண்டும்
மணவாள ராமாநுசர்போல்
குணவாளர் உண்டோ கூறுக குயிலே.




( 280 )
நாமக்கல் இராமலிங்கம்

நாமக்கல் ராமலிங்கம்
        பிள்ளை நலிவின்றி
மாமக்கள் காண
        வரைந்தளித்தான் -- ஆம், அத்
'தமிழன் இதயம்'
        மலைக்கள்ளன்' சங்கத்
தமிழன்பில் உள்ளம்
        தளிர்த்து.

இன்னலுறும் செந்தமிழ்க்கு
        இந்நாள் புரிகின்ற
சின்ன பணியும்
        திருப்பணியாம் என்னில்நம்
நாமக்கல் ராமலிங்கம்
        நறுப்பணியை
நாமிகவும் போற்றுகிறோம்
        நன்று.




( 285 )





( 290 )




( 295 )

கலைவாணர்

எண்ணும் கருத்தினர்க் கெல்லாம் -- தன்
ஏற்ற நடிப்புத் திறத்தால்
நண்ணும் நகைச் சுவையோடு -- பல
நல்ல கருத்துகள் ஈவான்
பண்ணும் குறும்புகள் எல்லாம் -- சொலும்
பகுத்தறி வூற்றைச் சுரக்கும்
பெண்ணும் மதுரநல் பேச்சால் -- இதழ்ப்
பேழை நகைமுத்துதிர்க்கும்.

கோணலை மாணலைக்காட்டி -- வெறும்
கூத்தடிக்கா கலைவாணன்
காணக்கண் கூசும் கதைக்கும் -- நகை
காட்டும் விருந்திசை கூட்டி
வீணட என்று சொலாமல் -- சிறு
வேடத்தும் வெற்றி பொறிப்பான்.
நாணிட வைக்கும் வகையில் -- கதை
நாயகனை விஞ்சும் நடிகன்.

சிரித்த முகத்தில் அழகும் -- இன்பம்
செருக்கோடிருந்திசை பாடும்
அரிப்புகள் நெஞ்சிருந்தோடும் -- நன்று
அன்பின் நெருக்கம் பிறக்கும்
தெரிந்திருந்தான் கலைவாணன் -- தன்
திரைப்பட நாடகத் தெல்லாம்
பரிசுகள் தந்தான் நகைத்தே -- நம்
பகுத்தறிவு எண்ணத்தின் நாற்று!

வகை வகையாய்ச் சுவைகாணும் -- வெறும்
வாய்ச்சுவை மாந்தருக்கெல்லாம்
பகைச்சுவை என்பதில்லாமல் -- வாழப்
பண்ணும் சுவை நலம் காட்டி
நகைச்சுவைமட்டுமா தந்தான் -- வள்ளல்
நாடக மாடியதில்லை.
தொகைதொகையாகக் கொடுத்தான் -- புகழ்த்
தோளுக்குயிரைக் கொடுத்தான்!



( 300 )




( 305 )





( 310 )





( 315 )




( 320 )





( 325 )



தமிழ்வாணன் வாழ்க

நல்லொழுக்கம் நாணயம
        நேர்மை நடுநிலைமை
எல்லா மிருக்கும்
        எழுத்தாளன் -- சொல்வேன்
அமிழ்தான சொல்லிட்டுக்
        கற்கண்டை ஆக்கும்
தமிழ்வாணன்!
        என்ன தடை?

தன்னலமோ வேம்பு!
        தமிழ்நலமே கற்கண்டு!
தன்மானக் கொள்கை
        தழுவுகின்ற -- நண்பன்
தமிழ்வாணன் வாழ்க!
        தமிழ்வாழ்க! தாயாம்
தமிழ்நாடு வாழ்க
        தழைத்து!

( 330 )




( 335 )





( 340 )



( 345 )
ஜி. டி. நாயுடு

கொங்குநாடென்றால் தமிழர்தம் வாழ்வின்
   கொள்கைகள் மேம்படச் செய்த
சிங்கமே என்றன் சிந்தையில் தோன்றும்.
   செய்தொழில் சாலைகள் தோன்றும்,
தங்கமாய் விளங்கும் பொருளியல் அறிஞன்
   சண்முகம் இன்முகம் தோன்றும்,
பொங்குமாங் கடல்மேல் ஞாயிறுபோல
   தோன்றுவார் ஜி.டி. நாயுடுவே.

எண்ணமும் சொல்லும் இரண்டிலா வாழ்க்கை
   எழுதரும் தொழிலியல் அறிவு
உண்மையின் உழைப்பு திண்ணிய பொறுமை
   ஒவ்வொரு நாளுமே உலகம்
ஒண்மைகொள் புதுமை உண்டிடும் பழம்,காய்
   உயர்ச்சிசேர் பயிர்கள் யாவும்
நுண்மைசார் தன்றன் அறிவியல் மக்கள்
   நுகர்ந்திட அளிக்கும் ஓர் அறிஞன்.

செயப்படும் பொருளின் செம்மைகள் புதுமை
   செந்தமிழ் அறிவியல் திறமை
வயப்படும் வண்ணம் வாழ்ந்திடும் ஒருவன்
   வண்டமி ழகத்துளான் என்னே!
வியப்பிது வெற்றி விளைவுகள் எல்லாம்
   விருப்பமாய் மக்களுக்கீந்தால்
பயப்படுமாறு தொல்லைகள் செய்தால்
   பாழ்படும் அல்லவோ நாடு?

உயர்ச்சியை எய்த ஒவ்வொரு நாளும்
   உண்மையின் உழைப்பினால் தேடும்
முயற்சியில் ஆய்வு முன்னிலைப் பொருள்கள்
   முளைவிடும் அறிவியல் விளைவை
அயர்ச்சியால் வீழ்த்தும் அரசும் ஓர் அரசா?
   ஐயகோ பார்ப்பனன் ஒருவன்
பயிற்சியில் காலை வைத்ததும் புகழ்வார்
   பயன்கொளார் தமிழனை ஆள்வோர்.

நமக்கென நாடு வாய்த்திடில் கோவை
   நல்கிய அறிஞனின் திறமை
நமக்கும்இவ்வுலக நாடுகட்காகும்
   நலம்பல எய்துவோம் அன்றோ?
சுமந்திடும் வடக்கின் ஆட்சியை ஒப்பும்
   துப்பிலா அடிமைகள் வீழ
இமைப்பினில் நாட்டை நமக்கென ஆக்கும்
   ஏறுகள் படையுடன் எழுக!





( 350 )





( 355 )




( 360 )





( 365 )





( 370 )




( 375 )





( 380 )




( 385 )
அம்பேத்கார் வாழ்க! அவர் வழிச் செல்க!

ஒருவனால் உலகு பாழ்படும் எனில் அவ்
ஒருவனை ஒழித்தல் உலகின் கடமை!

ஒரு சமயத்தால் ஓரினத்தவரின்
இருட்டெண்ணத்தால் என்றோ வகுத்த
சாதி மதத்தால் தகாவிதி மூறைகளால்
மோதியழியும் இவ்வுலகெனில் அவற்றை
மோதி மிதித்தல் அழித்தல் முதற்கடன்!

நிறத்திமிர் கொண்டு நிலத்தில் புகுந்தவர்
நிறவெறி யாலே கொலைத் திருவிழாவினை
நடத்தியோர் நாகரிக மிலாதஆரியர்,
கடந்த காலக் கதைத்தொடச்சியை
வேற்றுமை உணர்ச்சியை, வெற்றித் திமிரினைக்
காட்ட நினைப்பது கயமைத்தனமே!

சூழ்ச்சியால், மூடநம்பிக் கையை
வீழ்ச்சிக் குரியதாய் வேடதாரிகள்
காலம் காலமாய்க் காட்டிக் கொடுத்தே
இருபதாம் நூற்றாண்டிலும் இனப்போர்க்குரிய
கருத்து நஞ்சினைக் கலப்பதும் விளைப்பதும்
நாட்டை உலகை நலிவிப்பதாகும்.

இரண்டா யிரமாண் டில்லா திருந்த
திரண்ட நாகரிக திராவிடர்க் கிடையில்
பொல்லாங்கனைத்தையும் புகுத்தி வெளியுள
எல்லா நாட்டவரையும் இங்கே
பாய்விரித்தழைத்த ஒரேஒரு பரம்பரை
பார்ப்பனப் பரம்பரை! ஆரியப் பதர்களே!

ஆரியர் என்ன துய்மை யானவரா?
பூரித்துவக்கும் இந்திய ஆரியர்
அனைவரும் திராவிட அணைப்பில் பிறந்தவர்;
தினையளவும் இதில் ஐயம் இல்லை;
மாந்தநூல் இயலார் இதனையே ஒப்புவர்.

தீண்டாமைக் கொடுமை தீய்த்த பாடெலாம்
ஆண்டாண்டுதோறும் அழுதும் தீராது.
கொடுமையை நினைக்க நெஞ்சம் குமுறும்.

பாரதியார் முதல் பாரதநாட்டின்,
காந்தி அண்ணலார், பெரியார் வரையிலும்
தீண்டாமை நோய் தீண்டா வண்ணம்
பணியாய்க் கொண்டனர் -- பணியில் எவர்க்கும்
அணியில் முன் நின்ற அம்பேத்காரின்
எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும்
விரிவுல கத்தையே விழிப்புறச்செய்தன.

ஆரியக் கொட்டம் அடியோ டழிய
வீரியங் கொண்ட வெஞ்சின வேங்கை முன்
மதத்திமிர் அழிந்தது, சமயம் மடிந்தது,
அதற்கொரு வழி அவர் கண்டார் இந்திய
நாட்டின் உரிமைப் பேரேட்டின் சட்டம்
அமைத்தவர் ஆதலின். சாதி வேற்றுமை
குமையத் தானே குலம்உயர் வென்ற
ஆரியப் பெண்ணை மணந்தார். அதனால்
ஓர் இனம் தனி இனம் ஒட்டோம் என்னும்
தடையுடை படுவதால் உடைமையுடை படுமே.
உடைமையால் அல்லவோ உயர்வும் தாழ்வும்;
அம்பேத்கார்போல் ஆரியப் பெண்களை
நம்மவர் மணக்க நாடுஉருப் படுமே!






( 390 )





( 395 )




( 400 )






( 405 )




( 410 )





( 415 )





( 420 )





( 425 )





( 430 )




( 435 )
மறைமலையடிகளார் நூலகம் வாழ்க!

எல்லா வரம்பெற்ற பார்ப்பனர்கள் எங்களிறை
பல்லா வரத்து மறைமலைநூல் -- கல்லா
வரம்பெற்ற தில்லை, மறைவாகக் கற்பார்
உரம்பெற்ற தில்லை உளத்து!

எவ்வெத் துறைநூல்கள் எங்கே வெளிவரினும்
அவ்வெத் துறைநூலை ஆய்ந்தாய்ந்து செவ்வி
நலங்கொண்டு சேர்த்தநூல் நாலா யிரமும்
வலங்கொண்டு வந்ததமிழ்ச் சொத்து.

நுண்ணிய நூற்பலவும் கற்பதே நோன்பாக
எண்ணிய வாழ்நாள் எலாம்அளித்துப் பண்ணிய
செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை
பைந்தமிழைக் காக்கும் படை.

அடிகளார் பேரால் அமைந்த நூலகத்தால்
விடியலாய் வையம் விழிக்கும்! -- கொடிபறக்கும்!
வாபகையே என்றழைத்து வாகை மலர்சூடும்,
நாமடைவோம் வெற்றி நடை!


( 440 )





( 445 )





( 450 )

நடிகர் திலகம் சிவாசி கணேசனுக்கு வாழ்த்து

அலரி நறு முல்லை ஆம்பல்
   குருக்கத்தி அல்லிஎனும்
மலரி லுயர்ந்த மலர்தா
   மரைஎனல் போலுலகில்
சிலரி லொருவர் சிறந்த
   நடிகர் சிவாசி எனப்
பலரி லொருவன் பகர்ந்தேன்
   தமிழ்த்தாய் மகிழ்ந்தனளே,

எகுபதி யர்க்கு விருந்தாய்
   நடிப்பின் இலக்கணத்தை
மிகுபதி யாரும் வியக்க
   வியக்க விளக்கியவர்
தகுபதி யான சிவாசி
   கணேசர்! தமிழகத்திற்
பகுபதினாயிரம் ஆண்டுக்
   கொருத்தர் பகர்ந்திடிலே.

படிப்பென்று சென்றால் இலக்கம்
   பத்தாயிரம் பார்த்தளிப்பார்
துடிப்பென்று சென்றால் தூய்பசி
   நீக்கி உவப்புறுவார்
நடிப்பென்று சென்றால் அதற்குமே
   நற்புகழ்நம்ம தென்பார்
மடிபொன்றிலாது சிவாசி
   கணேசனார் வாழியவே!

( 455 )




( 460 )





( 465 )




( 470 )





( 475 )