பக்கம் எண் :

நாள் மலர்கள்

மருத்துவர் வீட்டில் அமைச்சர்

மருத்துவர்: வாங்க வாங்க நீங்க ஆரு

அமைச்சர்: கல்வி அமைச்சன் நான்! கண்ணா தெரியலே

மருத்துவர்: வாங்க வாங்க நீங்க தானா?
        என்ன சேதிங்க?

அமைச்சர்; இன்ன நோயின்னே இன்னும் புரியலே
         கையைப் பாருங்க கருத்தா!
         (மருத்துவர் நாடியைப் பார்க்கிறார்)

மருத்துவர்; தானே வந்த நோய் அல்ல. தேடி நீங்க சேத்த
         நோய் தானுங்க.

அமைச்சர்; இந்த நோய்க்குப் பேர் இன்னதினனில்லையா?

மருத்துவர்; இருக்கிற குறிப்பே எடுத்துச் சொல்றேன்;
         நாக்கிலே துடுக்கு, நடையிலே பதறல், மூக்கிலே
         எரிச்சல், முன்தொண்டை நடுக்கம், கண்ணிலே
         கொஞ்சம் கசப்பான தோற்றம். இருக்குதா,
         இல்லியா?

அமைச்சர்; இருக்குதே இருக்குதே! என்ன பண்லாங்க!

மருத்துவர்; இலேசாத் தீந்திடும், இந்த நோய் ஓர்
         வாகைக் காரகத்தாலே கண்டது.
         சீரகத்தாலே தீரணும் அமைச்சரே!







( 5 )






( 10 )





( 15 )


அமைச்சருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு

நாட்டவரை ஆதரிப்பீர்
   என்றுரைக்க, நம் அமைச்சர்
கேட்டவரை நோக்கியே
   கேளுங்கள் -- நாட்டவரை
கூட்டுக்கும் நன்று;
   குழம்புக்கும் நன்றென்றார்
மாட்டுக்கா வாய்க்கும்
   தமிழ்?
( 20 )




( 25 )
நாட்டின் முதலமைச்சர் கோட்டை குப்பத்தில்

சீரார் சென்னை முதல மைச்சரே!
பாரோர் போற்றும் பண்புடை யோரே!
தென்னார்க் காட்டைச் சேர்ந்த பீர்க்கா
கோட்டைக் குப்பம் வாழும் குடிகள்யாம்
தங்கள் வருகையை எங்கள் பேறென
எண்ணி வரவேற் கின்றோம் இந்நாள்,
தங்கள் மனமுவந்து யாங்கள் வாழ்விடம்
வருகை தந்ததே மகிழ்ச்சிக் குரியது
நன்றியும் வணக்கமும் நவிலு கின்றோம்.

நாட்டுக்கு மீட்சி வந்த நாள்முதல்
இந்நாள் வரைக்கும் எங்கள் ஊர்நிலை
இன்னதென்று யாரும் நினைக்கிலர்.

பொன்விளை புழுதியைப் புனலால் நனைக்க
மின்சார வசதி வேண்டும் அன்றோ!
இன்று வரைக்கும் இம்மியும் இல்லை.

வெயிலில் கிடக்கும் குயிலாப் பாளையம்
தண்ணீர் வசதி இன்றித் தவித்தது,
பாதை வசதி ஏதும் இல்லை.

சின்னக் கோட்டைக் குப்பம் சிறிதும்
பாதையின்றிப் பள்ள மாகின்றது.
எழில்சேர் நன்செய் நிலங்கள் இருந்தும்
குழாய்க் கிணறு இல்லாக் குறையால் ஏதும்
உழாத நிலைமை உடையன ஆயின.
செந்தமிழ் நாட்டுக்குத் தந்தை யாரே
இங்குயாம் இரங்கிக் கேட்டவை எல்லாம்
எங்கட்கு இன்றி யமையாதனவே,
ஆவன செய்ய வேண்டும் ஐயா;
நீவீர் நீண்ட நாள்முத லமைச்சராய்
இருக்கவேண்டும் என்பது எம் அவா.
நீடூழி வாழ வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் நன்றே!

[31-8-1960 சென்னை முதலமைச்சர் காமராசர்
அவர்கள் புதுவைக் கோட்டைக்குப்பம் வருகை தந்த
போது அவரை அன்புடன் வரவேற்றுப் படித்தளித்த
வரவேற்பு வாழ்த்திதழ்].


( 30 )



( 35 )






( 40 )





( 45 )





( 50 )




( 55 )
வாழ்த்திதழ்

செந்தமிழ் நாடு செய்த தவத்தால்
வந்த வாய்மைசேர் முதலமைச்சரே,
தாய்மை மிக்க காமராசரே,
வருக தங்கள் வருகை நன்றாக!
மட்டிலாக் காரியம் மலிந்திருக் கையிலும் எம்
முட்டறாம் பட்டில் முகந்திருப் பியதை
நாங்கள் மறவோம்! செய்த நன்றியை
என்றும் நினைப்போம் வணக்கம் ஏற்க.
முதுவிழுப் புரத்து முட்றாம் பட்டு
மண்ணுள் ஓடும் தண்ணீர் எடுக்கும்
மின்சார வசதி இல்லை! விளைச்சல்
மங்கி வறுமை மிகுதியாயிற்றே!
அழகு விக்கிற வாண்டி அணையினின்று
எம்முட்டறாம்பட்டின் ஏரி வரைக்கும்
ஏறத் தாழ பதினாறேரிகள்.
ஆயினும், அங்குள மெயின் வாய்க் காலே
முப்ப தாண்டுகள் முடிந்தும் இன்றுவரை
வெட்டப் பட்டதே இல்லை மெய்இது!
சூழ்ந்துள்ள நிலங்கள் வாழ்வ தெப்படி?
உரைக்கும் இப்பிர்க்கா ஓரூரின்றே
ஓரூர் செல்ல பாதைகள் உண்டா?
இல்லவே இல்லை. இன்னல் அடைகின்றோம்
எங்கள் முதல்வராய் நீங்கள் இருக்கையில்
இக்குறை தீர்க்கப் படாவிடில் இனியாம்
திக்கிலாது திகைக்க வேண்டும்.
வாய்மை சேர் காமராசரே வாழ்க!
தூய்மை யுள்ளத் தோழரே வாழ்க!
உங்கள் பெரும்புகழ் உயர்க!
எங்கள் தந்தையே வாழ்கஎந் நாளுமே!

( 60 )




( 65 )




( 70 )




( 75 )




( 80 )




( 85 )


காமராசர்க்கு அஞ்சல்
காமராசரே! ஒரு காமாட்டி
உங்களிடத்தில் ஒவ்வொரு நாளும்
வந்து மக்கட்குச் சிபார்சு கேட்பான்;
அதற்கு அவரிடத்தில் ஐந்நூறு ஆயிரம்
வாங்கிக் கொள்வான். அது மட்டுமன்று!
பெரியார் கேட்பதாய்ப் பெரிய தொகையும்
உங்களைக் கேட்பான். ஒரு தொகை கொடுத்தால்
அவனே, அவுக் கென்று வாயிற்போட்டுக்
கொள்வான். அப்பயல் பெரிய கள்வன்!

எப்படியாவது போகட்டும் என்றால்
பெரியார் கட்சிக்குப் பெரிய தீமை
ஏற்படு கின்றதே! எப்படி என்றால்,
அவனுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு
செல்வாக் கினையும் தீய வழியில்
செலவிடு கின்றான்! கலகக்காரன்.

இயக்கந் தன்னில் இருக்கும் பொறுக்கிப்
பசங்களை யெல்லாம் தன்பக்கத்திற்கு
இழுத்துக்கொண்டே இருக்கின்றானே!
வேறு கட்சியை அமைக்க விரும்பினான்?
அன்றொரு குள்ளன் எப்படி? அப்படி!

அமைச்சரே அவனுக்கு நீங்கள் அளிக்கும்
ஒவ்வொரு சலுகையும் இயக்க உடம்பின்
ஒவ்வோர் உறுப்பையும் அறுப்ப தாகும்.
உலகினர் உள்ளம் எல்லாம் கவர்ந்த

உலகில்சீர் திராவிடர் கழகம் அதனில்
கலகம் புகுத்தக் கருதா நீங்கள்
தீய நாயினைச் சேர்க்க லாகுமா?

இப்படிச் சொல்லும் என்னை நோக்கி
நீங்கள் ஒன்று கேட்க நினைக்கலாம்
"அவன் செயும் தீமையைப் பெரியார் அறிந்தும்
ஏன் வைத்திருந்தார என்று கேட்டால்
வரட்டும் அவன் என்று இருப்பார்,
வருவான் அவன்தன் மனைவி எதிரிலே!



( 90 )



( 95 )





( 100 )





( 105 )





( 110 )






( 115 )




( 120 )
முதலையோடு பார்ப்புகளும் வந்தனர்
கெட்டது பிரஞ்சிந்தியா

பிரஞ்சிந் தியாஎனும் பெயருள குளத்தில்
இருந்த கொடிய முதலையை எடுத்து
யூனியன் ஆற்றில் போட்டனர்! அவ் ஆறு
தீதுறு முதலை போதா தென்று
ஆயிரம் பார்ப்பொடு திரும்பிப்
பாய்ந்து கெடுத்தது பள்ளக் குளத்தையே!




( 125 )
பர்மாத் தமிழர்க்கு நன்றி


இனி தாக அகிலபர் மாத்தமிழர் சங்கம்
ஏழாவ தாண்டுவிழா அடைந்ததெனக் கேட்ட
மனமேநீ மகிழ்ச்சியால் கூத்தாடு கின்றாய்
வாயேநீ வாழ்த்தியே அன்பில்ஆழ் கின்றாய்.

தனித்திங்கே வாழ்கின்ற கண்களே, நீங்கள்
அங்குள்ள தமிழர்களை நேரிற்கா ணுதர்க்கு
நினைக்கின்றீர் உங்கள் அவா இயல்பான தாகும்
நெடுந்தொலையில் வாழுமவர் உடன்பிறந்தார் அன்றோ!

மதமான பேய்பிடித்தும் சாதிவெறி கொண்டும்
மாண்பற்ற கொள்கையினார் கட்சிபல புகன்றும்
இது தமிழர் தம்கொள்கை, இது பகைவர் கொள்கை
என்பனவும் அறியாமல் இங்குள்ள தமிழர்

புதுச்சங்கம் நிறுவுவார் மறுநாளே கலைப்பார்
புகழ்மிக்க பர்மாவின் தமிழரும்அப் படியா?
மதம்சாதி கட்சிவெறி இல்லாமற், சங்கம்
வளர்ப்பார்கள் தம்வாழ்வை வளர்ப்பார்கள் நன்றே!

உடன்பிறந்த தமிழர் அங்கே வாழும்முறை காண
அவாவுகின்ற கண்களே ஒன்றுரைப்பேன் கேளீர்;
கடல்கடந்தார் வேற்றுமையாம் கார்கடலும் கடந்தார்
கைத்தொழில் வாணிகம் அலுவல் எத்துறைதான் எனினும்
தடங்கலின்றிப் பொறாமையும் சச்சரவும் இன்றித்
தாம்தமிழர்! தமிழ்தம்தாய்! எனும்மனம் கோணாமல்
இடம்பெற்றார் -- என்றேன் -- என சொல்லோவி யத்தை
எதிர்காண்பீர். அவர்சங்கம் எதிர்காண்பீர் மகிழ்வீர்!

ஏழாண்டு பெற்ற எழில் அகில பர்மாவில்
வாழ்தமிழர் சங்கம் வளர்ச்சிபெற்று -- வாழியவே
நேயத் தமிழர் நிலையுயர்க! செந்தமிழ்த்
தாயே வளர்க தழைத்து.



( 130 )






( 135 )





( 140 )





( 145 )





( 150 )
துணைவேந்தர்க்கு விண்ணப்பம்

"தமிழ்மொழி ஆயும் தமிழ்ப்புல வர்தாம்
தமிழகம் காக்கும் தகுதி வாய்ந்தவர
என்பது தமிழ்ச்சான்றோரின் எண்ணம்!

அண்ணா மலைப்பல் கலைக்கழகந்தான்
பண்ணிய தவத்தின் பயனே யாகத்
தேவ நேயப் பாவாண னாரும்
வி.மு. சோம சுந்தர னாரும் அமைந்தனர்.

கழக அரசு நிழலில் நேற்றுச்
சோமசுந் தரனார் தூய்மை கண்டேன்.
அன்னார் நாட்டு மக்களின் அன்பர்.
சிறிய பூனை அன்று பெரிய
வேங்கை அவர்எனல் விளக்கம் ஆனதே!

இந்நாள் தமிழர் பசிபசி என்று
தரக்கேட் கின்றனர். சோமசுந்தரனார்
சரக்கு மாளிகை திறக்கத் தக்கது.
மொழிஅறி யாமை மூடத் தக்கது.

தமிழ்மொழி ஆய்வுக் கென்றே தக்க
துறைத்தனம் அமைப்பதால் தொல்லை தொலையும்
துணைவேந் தர்தம் தூய முயற்சியால்
இணைய வேண்டும் இந்த நிறுவனம்
மனம்வைக்க வேண்டும் ஐயா!
இனம்தன் மேன்மை எய்தும் பொருட்டே.
( 155 )





( 160 )





( 165 )





( 170 )





( 175 )
அலுவலாளர் வேலை நிறுத்தம்

அனைத்துநாட் டலுவலர் அலுவல் நிறுத்தம்
பனையளவு இருக்கும் என்றனர்
தினையளவாகச் சிறுத்தது வியப்பே!
சென்னையும் வேலை நிறுத்தமும்

அலுவல் நிறுத்தம் அப்படி இப்படி
என்றனர், சென்னைக் கிளர்ச்சி எலிகளோ
காம ராசர் காணி யாட்சியில்
நெல்லொன்று பல்லொன்று பட்டதும்
இல்லை. வால் அறுந் தோடின அவைகளே.
( 180 )
வெள்ளாட்டில் சிவம் இல்லையா?

மீன்வளர்த் தார் ஆள வந்தார் -- நல்ல
வெள்ளாட்டைக் கொல்ல முனைந்தார்
ஏன் அது? ஏன் இது? நண்பா -- சொல்
இதுவும் அவர்க்குள்ள பண்பா?
ஊன்தந்து காக்கும் வெள்ளாடு -- பால்
உதவி புரியும் அன்போடு
ஆன காந்தி அவர் தலைவர் -- வெள்
ளாட்டுப் பாலருந்தி வாழ்ந்தார்.

சைவம் என்று பெயர் சொல்லிப் -- பல
தவறு செய்துவாழ்கின்றார்;
கை வைத்திருக்கும் இடமெல்லாம் -- மிகு
காமக் கிழத்தியரின் மார்பே!

பொய்யும் புலையும் அவர் வாழ்க்கை -- ஒரு
பொது நலத்தில் மனம்இல்லை
ஐயகோ தம்பிரான்கள் -- வெள்
ளாட்டில் சிவத்தையா காண்பார்?

காட்டை அழிக்குமாம் ஆடு -- நம்
கையள வுள்ளதா காடு?
பாட்டை ஓரமுள்ள புதர்கள் -- அவர்
பார்வை தன்னிற் பெருங் காடு !
நாட்டை ஆள வந்து விட்டார் -- அவர்
நல்ல செயலில் மனம் ஒட்டார்
மாட்டைக் கட்டி ஏர் உழுவோர் -- வெள்
ளாட்டை எருவுக்குத் தொழுவார்.
( 185 )



( 190 )





( 195 )





( 200 )





( 205 )
கன்னடம் பணிய வேண்டும்
கன்னடர் தம்மூர்க் கவின் விழாவுக்கே
இன்னிசை பாட எம். எஸ். சுப்பு --
இலக்குமி தன்னை இட்டுக் கொண்டு
போயினர். கச்சேரி தொடங்கும் பொது
நாயினம் நடுவில் குலைப்பதுபோலக்
கன்னடர் ஒருபால் கூடி "என்னமாய்த்
தமிழ்மகள் இங்குத் தலை காட்டினாள என்று
கூச்ச லிட்டனர் ஆச்சா போச்சா
என்றனர் -- தமிழை எதிர்த்தனர், தமிழரை
இழிவு செய்து பேசினர். பழிபல
கூறினர், தம்முயர்வு கூறித் துடித்தனர்.
உலகு புகழ் வாய்ப்பாட்டுத் தலைவிமேல்
வெறுப்புக் காட்டினர் கறுப்புக் கொடியும்
காட்டினர். தங்கள் கீழ்மை காட்டினர்.

நான்குகோடி நற்றமிழ் வீரர்
உடன் பிறந்த ஒருகலைச் செல்வி
தலைகுனிந்து தமிழகம் திரும்பினாள்

கன்னடர் அயலர் என்று நாம் என்றும்
கருதிய தில்லை. கன்னடர் தமிழகத்தில்
வாழ்வதை மறுத்த தில்லை. அவர்கள்

தாழ்வு பெறும் வகை தாக்கிய தில்லை.
மதிப்புக் கொடுக்க மறுத்ததும் இல்லை
தமிழகச் செல்வம் தக்கபடி திரட்டினர்
எதிர்த்த தில்லை. இத்தமி ழகத்தின்
கண்ணிகர் ஒருமகள் -- ஒரு நாள் கன்னடம்
சென்று புகழைச் சேர்த்ததை அவர்கள்
பொறுக்க வில்லை. நாம் இதைப் பொறுப்பதா?

கன்னடர் புரிந்த இந்தக் குற்றம்
சின்ன தென்று செப்புதற்கில்லை.
அவர்கள் தமிழரைப் போருக் கழைத்தனர்.
அவர்கள் தமிழைத் தாழ்வு படுத்தினர்
இந்நாள் அவர்களின் இச்செய லுக்குக்
காரணம் எதுவெனக் கருத வேண்டும்,
தமிழர்கள் தமிழகம் பிரிதல் வேண்டும் என்று கூறு கின்றனர். எனவே
தமிழக அண்டைப் பகுதிகள் தம்பால்
நண்பு கொள்வதை நாடினர் தமிழர்;
இன்றைய ஆட்சியாளர் இதனை
வெட்ட நினைப்பதில் வியப்பே இல்லை.
கன்னடர் இன்று காட்டிய கையிருப்பு
ஆட்சி யாளரின் தூண்டலின் விளைவே.
நாமிதை விட்டு வைத்தால் நல்லதா?

கன்னடர் பணிவு காட்டும் வரைக்கும்
மூளட்டும் அறப்போர்! தமிழே
ஆளட்டும் நாவலந் தீவனைத் தையுமே!

( 210 )




( 215 )




( 220 )





( 225 )






( 230 )




( 235 )





( 240 )




( 245 )






( 250 )
வரிசை கெட்ட உருசிய நாடு

உருசிய நாட்டில் ஒரு தொழிலாளி
பொதுவுடை மைத்தாள் ஒன்றில் புகல்வான்;
உருசிய நுண்ணுணர் வுடையவர் இந்நாள்
எழில்நிலவு நோக்கி ஏவு கணைகள்
ஏவு கின்றதால் என்னைப் போன்ற
ஏழைகட்கு என்ன கிடைக்கக் கூடும்
என்றான் உருசியில் ஏழைகள் இல்லை
என்று கூறும் இழிந்த அறிவினர்
இதனை எண்ணி அடங்க வேண்டும்.

மேலும் அன்னவன் விளம்புகின்றான்;
வீட்டு வசதியை ஏவுகணை கூட்டுமா?
உருசிய நாட்டில் உள்ள மக்கள்
மச்சு வீட்டுக்கு வௌவால் அடிப்பதை
எச்சில் இலைகள் அறிய வேண்டும்

அணிபெற இன்னும் அவன் சொல்கின்றான்:
பணிமனைப் பெண்களின் பாதுகாப்பிற்கும்
பறக்கும் நிலவு பண்ணிய தென்ன?
என்று நன்றாய்க் கேட்டான் எளியவன்!
உருசிய நாட்டில் உள்ள பெண் கட்குத்
திருமணம் தேவை இல்லை என்று
கூறிய அவர்களைக் குச்சுக் காரிகள்
ஆக்க ஆடவர் அலையும் கொடுமையை
ஆதரிக்கும் அழகிய தோல்கள்
ஈது கண்டு திருத்தம் எய்துக!

அந்த ஏழை மேலும் அலறினான்;

இந்த நாட்டில் இன்றி அமையாப்
பொருள்கள் எல்லாம் போதிய அளவில்
இல்லா நாளில் குருசேவ் விளம்பர
நாடகம் ஆடுவது நல்லது தானா?
கேடுசெய்யாதா என்று கேட்டான்
ரஷ்யத் தலைவர் சிஷ்யர் உணர்க!

அவனே மேலும் அறிவுறுத்துவான்:
ஏவுகணை ஒன்றை இயற்றுதற்குச்
செலவிடும் பெருந்தொகை இருந்தால்
உலவும் ஏழை மக்களுக் குதவுமே.


( 255 )





( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )




( 285 )



உருசியாவிலும் இந்தியாவிலும்

தாளரிய அரிவாளாம் அந்த உருசி யாவில்
தலையரியும் அரிவாளாம் இந்த இந்தியாவில்! (தாளரிய)

ஆளும் தொழி லாளி சுத்தி
அங்கே இரும் படிக்கும்;
நீளச் சுத்தி இங் கெல்லாம்
பிறர் பெட்டியை உடைக்கும்!         (தாளரிய)

அத்த னையும் பொது வுடைமை
அங் கெல்லாம்! இங்கே? -- ஏ
ழைத் தொழிலாளிக்கு வரும்
இரண்டில் ஒன்று பங்கே!            (தாளரிய)

ஒருவன் மனைவி மற்றவனை
உவப்ப தங்கே தப்பே -- பெருத்
திருக்கும் தலைவன் மனையை இங்கே
இருவர் உவத்தல் கற்பே!            (தாளரிய)

ஆன மட்டும் அங் கெல்லாம்
அறம் செயலே கருமம்!
சீனாவுக்குக் காட்டிக் கொடுத்தல்
இந்த நாட்டின் தருமம்!              (தாளரிய)

அங்கெல்லாம் ஒருவன் தொண்டு
மற்றவனின் பொருட்டே -- கேள்
இங்கெலாம் பொதுத் தொண்டோ
இரும்பு, சிமிட்டி திருட்டே!           (தாளரிய)

( 290 )





( 295 )





( 300 )





( 305 )





( 310 )
பெண்கள் காமம் கழிக்கும் கலையமா?

பெண்கள் பற்றி நீபேசும்
பேச்செல்லாம் முடை வீசும்

பெண்கள் காமம் கழிக்கும் கலையமா?
பெண்கள் பற்றி நீபேசும்
பேச்செல்லாம் முடை வீசும்
எண்ணங் கெட்ட உருசியனே?
ஏதுங்கெட்ட உருசியனே! (பெண்கள் பற்றி)

காமம் கழிக்கும் கலையம் என்றாய்
காதற் பெண்கள்! நிலை மறந்தாய்!
தாய்மை என்னும் பண்பு கொன்றாய்!
தலை கொழுத்தே கெடு கின்றாய்! (பெண்கள் பற்றி)

ஒருவனுக் கொருத்தி வேண்டும்;
ஒருத்திக் கொருவன் வேண்டும்;
இருவர்தாமும் ஒன்றுபட்டே
இன்பத்தை அடையவேண்டும். (பெண்கள் பற்றி)

ஆடவன் தனி இருத்தல்;
அது, தான் தனை வருத்தல்!
பேடை அன்னம் இணைபிரித்தல்
பெற்றஉயிர் பிரிதல் அன்றோ? (பெண்கள் பற்றி)

மணவாழ்க்கை வேண்டாம் என்றாய்
மாட்டுவாழ்க்கை வேண்டும் என்றாய்
கணந்தோறும் இருட்டறைக்குக்
கட்டுசோறு கட்டுகின்றாய். (பெண்கள் பற்றி)


( 315 )




( 320 )





( 325 )





( 330 )
ஆளவந்தீர் அழிகின்றீர்;

அழிகின்றீர் அழிகின்றீர் அழிக்க ஒண்ணாத்
திராவிடத்தை அழிக்க எண்ணி
அழிகின்றீர்! ஆளவந்தீர் அழிக்கின்றீர் ஆளுகின்ற
அறிவே இன்றி

அழிகின்றீர்! நல்லொழுக்கம் அணுவளவும் இல்லாமே
அறங்கா ணாமே
அழிகின்றீர்! மக்களிலே அவர் பகைவர் இவர் நமர் என்
றழிகின்றீரே!

அழிகின்றீர்! அழியாத அன்பு நெறி காணாமே
அடாத செய்தே
அழிகின்றீர்! அதிகாரத் திரைமறைவில் தன்னலத்தை
ஆக்கி ஆக்கி
அழிகின்றீர், இப்பெரிய திராவிடத்தின் நன்மையெலாம்
அயலார்க் காக்கி
அழிகின்றீர் திராவிடத்தை ஆரியருக் குகஆட்படுத்தி
அழிகின்றீரே!

அழிக்கின்றீர் ஆட்சியினை உமக்களித்த இந்நாட்டை
அவமதித்தே
அழிகின்றீர்! உணவளித்தே திராவிடத்தை ஆளாமே
அழிக்க எண்ணி
அழிகின்றீர் உடையளித்தே அனைவர்க்கும் மானத்தைக்
காத்திடாமே
அழிகின்றீர்! ஆளவந்தும் பிறராணைக் குகஆட்பட்டே
அழிகின்றீரே!
அறிகின்றீர் தனக்கொன்றும் பிறர்க்கொன்று மாய்நடக்கும்
    அழ நினைப்பால்
அழிகின்றீர் ஆட்சிநிலை அடைந்தபின்னர் புதுமனிதர்
    ஆக மாறி
அழிகின்றீர்! நம் கட்சி அவர்கட்சி இவர் எனவே
    அறம்பிழைத்தே
அழிகின்றீர்! திராவிடர் நாம் எனும் உணர்வே இல்லாமல்
    அழிகின்றீரே!

அழிகின்றீர் தொழிலாளர் அடிவயிற்றுச் சுடு நெருப்பை
    அவித்தலின்றி
அழிகின்றீர்! சாதிமதம் அடிமுட்டாள் வழக்கத்தை
    அகற்றலின்றி
அழிகின்றீர்! செல்வநிலை அனைவர்க்கும் பொதுவென்னும்
    அறிவேயின்றி
அழிகின்றீர் அழியாத வழியிருக்க அழிநிலை கொண்
    டழிகின்றீரே!
( 335 )





( 340 )





( 345 )




( 350 )





( 355 )




( 360 )




( 365 )





( 370 )