பக்கம் எண் :

தேசிய உபாத்தியாயர்

பிள்ளைகளே கேளீர் உமக்கோர் பெருஞ்சேதி!
வெள்ளைக்காரக் துரைகள் வெள்ளையரின் நாட்டினின்று
பாரதத்தில் ஏன்வந்தார்? என்றால் பலபொருளைப்
பாரதத்தில் விற்கவந்தார். இவ்விடத்தில் பாரதத்தார்
ஒத்து மறுத்துவிட்டால் தொல்லை ஒழிந்துவிடும்
பத்துநாள் போதும் இந்தப் பாரதத்தை நன்றாக்க,
''ஆங்கிலரின் சாமான்கள் அத்தனையும் நீக்குங்கள்
வாங்காதீர்'' என்று மகாமன்றும் சொன்னதுண்டு.
உங்கள் தகப்பன்மார் இதனை உணராமல்
மங்க உரைத்தால் மறுத்துரைப்பீர் மாணவரே.
நானுரைக்கச் சொல்லுவதை நன்றாய்உரைத்திடுங்கள்
ஏனப்பா நீங்கள் இறந்தபின் உங்களைப்போல்
வெள்கி ''அடிமைசெய வேண்டுமா?'' உங்களைப்போல்
பிள்ளைகளும் பின்னாளிற் சாகப் பிரியமுண்டோ?
சொத்தெமக்கு வைப்பதாய்ச் சொல்லுவது சொத்தன்று
சொத்தெமக்கு நல்ல சுதந்தரந்தான் என்று உரைப்பீர்.
பிள்ளைகளே வீரர்க்குப் போர்களே ''உம் உரிமை''
நொள்ளைகள் போல் விட்டுவிட்டு நோயால் வருந்துவது
தந்தைமார் செய்கின்ற தப்பன்றோ? ஆதலால்
வெந்துயரைத் தீருங்கள் வெற்றிபெறப் பாரதத்தை
மீட்டுக் கொடுங்கள் எனத்தினமும் தந்தையரைக்
கேட்டுக் கொள்ளுங்கள் இனி.

*மகாமன்று - காங்கிரஸ்.




( 5 )





( 10 )



( 15 )




( 20 )
தேசீய தாலாட்டுக்கள்

ஆண் குழந்தையைத் தாலாட்டல்.

   சர்வ சாதாரணமாகப் பெண்டிர் தாலாட்டுப்பாடும் மெட்டு. ஆராரோ - ஆரரிரோ        ஆராரோ ஆரரிரோ வீரமகனே வேலவனே,        விண்ணவர்கள் கோரும் உரிமை கொடுக்கவரும் ஆணழகே! நீலவிழிகள்!                 நிலவுமுகம்! தாமரை வாய்! கோலும் உதடு              கொட்டுதமிழின் அரும்பு வேளைக்கு வேளை         விறல்வளரும் பாரதனே, நாளைய வெற்றி            இன்றலரும் நாட்டானே! அமுதமுகைகுப் பாரதத்தாய் அன்பெல்லாம் சமர்விளைக்க வந்த          தமிழா இளங்குமரா, இன்பம் உனக்குப்           பாரதப்போர் ஏற்பதிலே, அன்று முடிபூண்ட          ஆரியனே வேல் *மறவா பொம்மை உனக்குப் பொன்விழுங்கும் பூதங்கள் வெம்மைக் பகையுனது       வேலுக்கிலக்கியமாம். நல்ல இமயமலை நாடிவரும் கங்கைநதி; வெல்லத் தமிழ்பிறந்த         மேன்மைப் பொதியமலை, வைகை, யமுனை,         வளங்கொழிக்கும் பெண்ணை நதி பொய்கை, மலர்ச்சோலை      பூணுகின்ற பாரதனே, வில்மறவர், வேல்மறவர்,      *வெற்பொத்ததோள் மறவர். பன்னு தமிழ்நாட்டுப் பலவீரர் பார்த்திருக்கச் செல்வம் பறிபோதல்         எண்ணிச் சிரித்தாயே! ''வெல்வம'' என்று நீதான்      விழிதுயில்வாய் பாரதனே வீரியத்தைக் காட்டும்         புலி்போல் விழிதுயில்வாய் ஆரியர்கள் நாட்டின்         அனலே விழி துயில்வாய் *மறவன் - விரன்

பெண்குழந்தையைத் தாலாட்டுதல்


தீராத ஆசையெல்லாம் தீர்க்கவந்த பெண்ணரசி! வாராத செல்வமெல்லாம்           வந்துதரும் தெய்வீகமே! தாமரையின் வாய்திறந்தால்          சாதிசனம் வாய்திறக்கும் சாமத்திலும் பிரியாத்               தாய்நாடு வாய்திறக்கும் ஒத்திருக்கும் உன்சமுகம்           ஊமையரென் றெண்ணாதே. மொய்த்திருக்கும் உன்சமுகம் முப்பத்து முக்கோடி-! ஏதோ உனதுகுறை                ஏந்திவரும் கட்டழகே! போதேநீ கண்ணுறங்கு             பொன்னான தொட்டிலிலே அங்கம் பதைத்தே                அசத்தியத்தைக் கொன்றிடுவார் வங்கத்து வீரருன்றன்               வாழ்க்கையிலே சம்பந்தி, தேசத் துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார் மீசைத் தெலுங்கர்களும்             வில்லர்களும் மைத்துனர்களும் அமிழ்தக் கவிகள்                அம்புலிக்குச் சொல்லிவைத்த தமிழ்நாட்டு வீரரெலாம்              சண்பகமே, சொந்த்தார். நாட்டுக்கு நூலிழைக்கும்             நங்கையருன் அக்கையர்கள், வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மாக்கள், கன்னியா குமரிமுதல்               கங்கைஇமயம் வரைக்கும் உன்னிரத்தம் சேர்ந்த                உடம்புடையார் பாரதத்தார் ஆசைதவிர்த்ததுண்டோ              ஆரியத்துப் பெண்ணுனக்கு நேசம் குறைந்ததுண்டோ             நீதரெலாம் வாழ்நாட்டில். கூட்டத்தில் வாழும் மயில் கோலம் குறைந்ததுண்டே? நாட்டின் குலவிளக்கே               நாயகமே கண்ணுறங்கு. தேச முனக்குத்                  திரவியங்கள் உன்னுடைமை யாசகமாய் வந்தவரைப்              ''போ'' என்றால் ஏனிருப்பார? சந்தனக் காடு                     தவமலைகள் உன்னுடைமை சிந்துநதி கங்கைநதி தித்திக்கும் பாற்குளங்கள் யாவும் உனக்கே                   இளைய பெருமாட்டி! தாவும் பொடிவாசச்                 சோலைகளும் உன்னுடைமை. பாடப் பழங்கவிகள்                 பல்கோடி உன்னருகே தேடிப்பிடிப்ப தில்லை               சிந்தைமகிழ் காவியங்கள் நாலு மறைகள், நவில் ஆறு, சாத்திரங்கள் மூல தருமம்,                      முடிவில்லாக் கைத்தொழில்கள் உடைமை சிறந்ததுண்டாம்             உன்னுடைய பாரதத்தில் படையிற் சிறந்தவராம்                பாரதத்தாய் பெற்றமக்கள் கோயில், மணிவீடு,                  கொடட்டிகள், சத்திரங்கள், வாயிலிலே பொன்சிந்தும் மாளிகைகள் கோடியுண்டு நெல்லும் மணிவகையும்              நின் நாட்டில் வேண்டுமட்டும் வெல்ல கரும்பும் விளைவதுண்டாம் உன்நாட்டில் எத்தாற் குனறச்சல்                  எவ்விதத்தால் தாழ்வுனக்கு? தித்திக்கும் கற்கண்டே                தேசமுத்தே கண்வளராய்.

 





( 35)




( 40)




( 45)





( 50)




( 55)




( 60)





( 75)




( 80)




( 85)




( 90)




( 95)





(100)








( 105)
 
பாரதத்தாய் மாணவர்க்குக் கூறுவது

கண்ணிகள்


என்னாருயிராக யான்பெற்றேன் உம்மையெல்லாம்
அன்னையென் றென்னை அறியீரோ மாணவரே?

அடிமையுற்ற அன்னை அரசுபெற உங்களது
கடமைஇன்ன தென்றுதான் கருதினிரோ மாணவரே?
அன்னைக்குப் புத்துயிரும் ஆக்கமும் கீர்த்தியும் நீர்
*இன்னே தரநினைத்தால் யார் தடுப்பார் மாணவரே?
புத்தறிவும் தெய்வப் பொதுநோக்கும் வாடாது
மொய்த்த இளம்பருவம் முனைகருகி போகாதீர்,
மாசற்ற நெஞ்சும் மகிழும் இளமாண்பும்
தேசத்துக் கன்றிச் சிதடருக்கோ மாணவரே?
விழிக்குங்கால் உங்கள் வெறுந்தேசம் கண்டீரே
பழக்கிவரும் கல்வியிலே பாரதத்துக் காவதுண்டோ?
சாங்கால மட்டும் சலித்துப் புடைத்தாலும்
ஆங்கிலத்தில் உம்நிலைமை அறிவதுண்டோ மாணவரே?
வெள்ளைநிறம் என்செல்வம் வேட்டையிட நீங்களதை
அள்ளிச் செப்பம் செயவோ அக்கலையைக் கற்றீர்கள்!
அயலார் வெறும் பாஷை அறிவதால் உங்கள் சாண்
வயிறுநிறையும் என்ற வார்த்தையில்தான் உண்மை உண்டா?
தட்டிக் கொடுத்துப்பின் தம்பாஷைக் குட்படுத்திப்
பட்டப் பரிசுதரும் பான்மையிலே ஏதுகண்டீர்?
முப்பதுகோடிப் பெயர்கள் முழுவதும் பிறர்பாடம்
ஓப்பித்தாலன்றி உணவின்றிச் சாவீரோ?
செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு
வந்தவரின் ஆங்கிலத்தால் வயிறு வளர்த்தானா?
கழற்று மணிமுடிநான் காணப் பிறர்பாஷை
சுழற்றி எறிந்து சொந்தத் தேசத்தை வாழ்க என்பீர்

*இன்னே - இப்போதே







( 110 )




( 115 )




( 120 )





( 125 )
விடுதலைக்குச் செல்லும் கப்பல்

ஏலப்பா
ட்டு மெட்டு

பொன்னைப் பெருக்கும் சுரங்கத்தை ஒக்கும்
போகத்திலே அந்த வானை நிகர்க்கும்!
மன்னிச் சிறக்கின்ற புகழ்கொண்ட நாடு
வளமைக்கும் அழகுக்கும் இணையற்ற நாடு
பன்னக் கிடக்கின்ற சம்பத்து வாய்ந்த
பாரதத் திருநாடு பழமைபெறு நாடாம்.
என்னைப் பிறப்பித்த எழில்நாடு தன்னை,
யாத்திரைக் கப்பலாய்ச் செய்யவந் தேனே.
சீரான இமயமலை வடகோடி முதலாய்த்
தெற்குமுனை கன்னியா குமரிவரை நீளம்!
நேரான தொடர்மலைகள் இருபக்கம் உண்டு;
நெடிதாய் இருக்குதே எங்களது கப்பல்.
பாராய் கொடிக்கம்பம் இம்மலைச் சிகரம்!
பார்வைக்கும் எட்டாத அக்கம்ப மீது,
வார்கொண்ட மேகக் கொடிச்சீலை கட்டி,
வானிற் பறக்கக் கிளம்புதே கப்பல்!

''உறுதி'' என்னும்பாயை விரியவிடாமலே
''உணர்'' வென்ற சுக்கானை நேரேபிடிப்பாய்.
முறையாய் நடக்கையில் ''பேதமாம்'' காற்று
மோதாத விதமாகப் பாரதத் தாரை
நிறையாக ஏற்றடா ஒற்றுமை ஆக்கி
நேராக ஓட்டடா பாரதக் கப்பல்!
இறைவிமா சத்தியே துணைநிற்க வேண்டும்
எதிரே சுதந்தரப் பொன்னாடு காண.

''அடிமை'' என்னுங்கடல் நெளியுதே பாராய்!
அதுகிழிய ஒடுதே பாரதக் கப்பல்!
கொடிதான வறுமையாம் கூட்டச் சுறாக்கள்
கொட்டம் குறைந்தது கப்பல் வேகத்தில்.
தடையொன்று தோன்றுதே இதுவென்ன பாராய்!
தன்வாய் திறக்குதே கடல்மீ திருந்தே
திடமுண்டு நெஞ்சிலே உமிழடா காறிச்
சிறையாம் திமிங்கிலம் நமையென்ன செய்யும்?

மலையொன்று தோன்றுதே கடலுக்கு நடுவே!
வழியை மறிக்குதே ''அயலார்சரக்கு''
''விலைகொண்டு பிறர்பொருள் வாங்கிட்டோம்''என்ற
மேலான மந்திரம் வாய்கொண்ட மட்டும்
நிலையாக ஓதடா ஓதடா ஓது!
நீசத்தடங்கலை மோதடா மோது?
தொலையாத கடலைத் தொலைக்குதே கப்பல்!
சுதந்தரப் பொன்னாட்டை எட்டுதே கப்பல்
''தீண்டாமை'' என்கிற பாவப் பிசாசு
திரளாக வந்தன யாமென்ன செய்வோம்?
மாண்டாலும் மேலடா! கருநிறப் பேய்கள்
வாயைத் திறந்தால் நடுங்குதே உள்ளம்!
வேண்டாம் எனும்போதும் ஐந்தாறுகோடி
விழுங்கப் பறந்தன நாமின்று தீர்ந்தோம்,
தீண்டாமை நீக்கினோம் தீண்டுவோம் என்று
செப்புவீர்; செப்பப் பறக்குமே பேய்கள்
கடல்கிழிய ஓடுதே எங்களது கப்பல்!

காதவழி போகின்றதேயோர் நொடிக்குள்!
விடுதலைப் பொன்னகரம் உயிருக்கும் இனிது!
விழிகொண்ட ஆசையோ கடலினும் பெரிது
கெடுதலைகொள் அடிமையோ நரகினுந் தீது!
கீழான அடிமையைப் புழுவும் ஒப்பாது!
விடுதலைகொள் விடுதலைகொள் என்றதே உள்ளம்
விழியென்று காணும் அவ்வாநந்த வெள்ளம்?

விண்ணின்று சூரியன் வீழ்ந்ததே மேற்கில்
விழுங்குதே எருமைக் கடாப்போல் இருட்டு
கண்ணற்ற இருளிலே வழிதோன்ற வில்லை
கப்பலும் ஓடுதே நொள்ளைகளை நம்பி.
எண்ணமும் தேகமும் கப்பலின் மேலே
எங்கும் விழாததேன் இருள்செய்த நனமை
பண்ணான தமிழற்ற தமிழ்மக்கள் போலே
பார்வை இல்லைநமக்கு இருவிழிகள் உண்டு.

ஒளியொன்று தோன்றுதே! வாழ்த்தடா தாயை
ஒளிதான் துரத்துதே இருளென்ற பேயைக்
களியுண்டு நெஞ்சிலே இனியேது தொல்லை?
கடல்மீது பாயுதே கிரணங்கள் மெல்ல,
வெளிவந்த சூரிய வாணவேடிக்கை!
விடுகிறான் புவியெலாம் கிரணங்கள் தூவி!
துளிஇல்லை சந்தேகம் இனியேது தாபம்?
சுதந்தரப் பொன்னாடு மிகவும்ச மீபம்
தீவொன்று தோன்றுதே கொஞ்ச தூரத்தில்
சீக்கிரம் போவோம் செலுத்தடா கப்பல்
காவலர் மாளிகை, கொடி, அதோ பாராய்
கப்பல் நிறுத்தினோம் வந்திறங் கிட்டோம்,
''வா, வா'', எனச் சொல்லி நமையழைக் கின்றார்
வயித்தியச் சோதனை பார்க்கிறோம் என்றார்
நோவில்லை ஆனால் அனுப்புவோம் என்றார்
நுண்மையாய்ச் சோதனை பார்த்தபடி நின்றார்.

நாக்கிலே பிறர்கல்வி தீர்ந்ததா? என்றார்,
நாசிதான் பிறர்வாசம் நத்துமோ? என்றார்
நோக்கிலே சமநோக்கு வந்ததா? என்றார்.
நுண்செவியில் அயல்சூழ்ச்சி நுழையுமோ? என்றார்
தாக்கும் புயத்திலே சக்தியெங் கென்றார்.
தடக்கைகள் தன்கோல் சுமக்குமோ? என்றார்
போர்க்குத் திரும்பாத மார்பு காட்டென்றார்
பொங்கும் சுடர்முகம் காட்டென்று கேட்டார்.

இடையினிற் சொந்தநூலாடை எங்கென்றார்.
இட்டவயிறு அயலுணவு தொட்டதோ என்றார்.
உடம்பிலே தன்னொழுக்கம் காட்டுகென்றார்,
உயிரிலே தன்னுரிமை ஒளிகாட்டு கென்றார்.
தொடுகின்ற இடமெல்லாம் பரதர்மம் இன்றிச்,
சுதர்மே உள்ளத்தில் உள்ளதா என்றார்.
அடைவுடன் சோதித்த இவரெலாம் யாவர்?
அடடா சுதந்தரப் பொன்னகர்த் தேவர்.

தாய்நாடு விடுதலைப் பொன்னாடு போகத்
தருமென்ற உத்தரவு விரைவாய்க் கொடுப்பார்,
தாய்நாடு வாழ்கென் றேசொல்லி் வாழ்த்து!
தடையான அடிமையை வேல்கொண்டு வீழ்த்து!
தாய்நாடு வெல்கஎன்றே எழுந்தாடு
தமிழான மதுவுண்டு களிகொண்டு பாடு,
தாய்நாடு மேலென்று வானிற் செதுக்கு!
தமிழென்ற முரசத்தை மண்ணில் முழக்கு!



( 130 )




( 135 )




( 140 )





( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )




( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )




( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )




( 230 )
கலியின் கொடுமை

  (கலி பாரத தேவியிடம் சொல்லுகிறான்
  ''ஞாயந்தானோ நீர் சொல்லும்'' என்ற மெட்டு)

         பல்லவி

   பாரடீ கலியின் ஆட்சி - ஏ

         அநுபல்லவி

பாரத தேவியின் மைந்தரைக் கெடுத்தேன்              (பாரத)

        சரணங்கள்

மேற்குத் திசையின்சா          ராயம் - உன்
வீர மைந்தர்க்கதில்            நேயம் - உனைச்
சோற்றுக் கழவைக்கும் உபாயம் - நீ்

சுதந்திரம் கேட்பதென்ன        ஞாயம் - அடி        (பாரத)
வெறித்துக் குடிக்கிறான்         கள்ளை - அடி
விழுந்து முறிக்கிறான்          முள்ளை - வழி
அறிந்து நடக்கக் கண்         நொள்ளை - உனக்கு
அரசு தருமோ இப் பிள்ளை - அடி                  (பாரத)
ஆடை அழுக்குடைய         கந்தை - இந்த
அழகில் அனைவரையும்       நிந்தை - சொல்லிப்
பாடை தனிலுங்கள்           மொந்தை - எண்ணிப்
பறந்தனன் மற்றொருகு         ழந்தை - அடி
ஆசாரம் கெடுமென அஞ்சா - மைந்தர்க்
கமுதமும் சாதமும்            நஞ்சா? - உயிர்
நாசம் புரிந்தே              கஞ்சா - கொடி
நாட்ட உனக்கிரும்பு          நெஞ்சா - அடி        (பாரத)
வீட்டுக்காசிலே              திருட்டு - நல்ல
வீதீ எங்கும்புகை யிருட்டு - மிக
நீட்டிப் பிடித்தனர்           சுருட்டு - நாட்டில்
நீசத்தனம் வளர்க்கும்         பொருட்டு - அடி       (பாரத)
நாவற் பழஉதடு            கூடி - எங்கும்
நாற இருகன்னமும்          வாடி - பின்பும்
சாவுக்கே பிடிப்பர் பீடி - இந்தத்
தறுதலை பாரத            னோடி? - அடி         (பாரத)
மூளை வறண்டுபோம்       படியே - முகம்
முழுதும் சளியொழுகும்     நெடியே - தந்
தாளை ஒழிக்குமிந்தப்       பொடியே - உனை
அழிந்திடுமே அரை நொடியே - அடி               (பாரத)
தேயிலை காப்பியைப்       பிடித்தார் - அவை
தித்திக்குதென்று தினம்       குடித்தார் - பின்பு
கோயிலில் வைத்து        படித்தார் - தேசக்
கொள்கையை வேரோடு     மடித்தார் - அடி         (பாரத)
சுதந்தரத் துவக்கமே சுதர்மம் - அந்தச்
சுதர்மத்தை வீழ்த்துதல்       அதர்மம் - உன்
*சுதன் அறியானிந்த         மர்மம் - உனைத்
தொல்லை செய்தல்கலி வர்மம் - அடி      (பாரத)

*சுதன்-பிள்ளை















( 235)





( 240)




( 245)




( 250)




( 255)




( 260)




( 265)




( 270)
தேசீய நலங்கு

(மகள் நலங்கு)

(''மாதாட பாரதேனோ'' என்ற மெட்டு)


                 
 பல்லவி


சுப நலங்கு இயற்றுவீரே தோகையர் நீரே      (சுப)     

             
     அநுபல்லவி


தூய நாட்டின் தொண்டுக்குத்
தோன்றிய கற்கண்டுக்குச்                 (சுப)

               
   சரணம்


அபசார மின்றித் தாய்நாட்டத்தர். கலவை பூசி
உபகாகிக் குநல்லாசி உரைப்பீர்கள் மலர் வீசிச் (சுப)

நொந்தேமா பண்டைவாழ்வில் நுழையோமா என்று நாவில்
வந்தேமா தரம் பாடும் மணிக்குக் கதம்பம் தூவிச் (சுப)

கருமம் சுமந்த வீரர் கட்டடி மையைச் சாடத்
தருமம் சுமந்த தோளில் தையல்நல் வாரம்சூடச் (சுப)

வாதை பெறும் நாட்டுக்கு மாவீர மக்கள் மற்றிக்
கோதைபெறுவாள் என்று குழவியெடுத்துச் சுற்றிச் (சுப)

கோலிழைக்கும் குற்றத்தால் கொள்ளைபடும் நாட்டுக்கு
நூலிழைக்கும் நோன்பு நோற்கும் சீ மாட்டிக்குச் (சுப)

பதரான மேல்நாட்டார் பழிவாங்கும் ஆடைநீக்கிக்
கதராடை பூண்டஎங்கள் கண்மணிக் காலம் தூக்கிச் (சுப)

மதிநாறிப் பாரதத்து மண்ணை மதித்தோர் கள்ள
விதிநாறும் படிபேறு பதினாறும் மகள் கொள்ளச் (சுப)

தாழ்வென்று தமைற்றோர் சகத்திற்சொல் வதைவீழ்த்தி
வாழ்வென்ற ''சுதந்திரம்'' வாயந்திட்டதெனவாழ்த்திச் (சுப)

                  (மகன் நலங்கு)
''ஆருக்குப் பொன்னம்பல கிருபை இருக்குதோ அவனே
பெரியவனாம்'' என்ற மெட்டு

                   பல்லவி
   பாருக்குள் விடுதலைப் போருக்கு வந்த சேய்க்குப்
   பரிந்து நலங்கிடுவீர்

                   அநுபல்லவி

   காருக்கு மகிழ்கின்ற மயிலினமே - மலர்க்
   காட்டில் இசைக்கின்ற குயிலினமே! நீவிர் (பா)

வாள் வைத்த தோளுக்குத்தன் மாதா உரிமை மீட்க
நாள் வைத்திருக்கும் சேய்க்குத்
தூள் பட அடிமையைத் தொலைத்துநீ நாட்டினை
''ஆள்மகனே'' என ஆசி சொல்வீரே (பா)

நிசியினும் பகலினும் நெடுநிலம் காத்திடும் வில்
விசயனின் வழிதோன்றல்
காளை உளங்குளிரக் கவிழ்ப்பீரே (பா)

ஊமையும் எதிர்த்திடும் வீரச் சிவாஜி என்னும்
வாழையின் கீழ்க்கன்று
ஏழ்கடல் புவிதன்னில் ஈதற்ற பாரத நாடு
ஈன்ற மகனுக்கின்பம் தோன்ற மிகவே என்று (பா)

( 275 )












( 280 )





( 285 )






( 290 )







( 295 )










( 300 )





( 305 )





( 310 )
தேசீய மங்களம்

( ''கோருங்கள் கோருங்கள் கோருங்கள் என்ற மெட்டு
'' )

                 பல்லவி

        மங்களம் மங்களம் மஙகளமே - சுப
        மங்களம் மங்களம் மங்களமே.

                 அநுபல்லவி

        துங்க முறும் நாட்டினுக்குத்
        தொண்டு செய்யும் தம்பதிக்கு (மங்)

                 சரணம்

சிங்கம் சுமந்திடும் ஆசன மேலே
செங்கோல் கொள்ளும் ஆதி மன்னர்கள் போலே
''எங்கள் நிலத்திற் பிறர்க்கென்ன வேலை''

   எங்கள் கொள்கை நன்று துள்ள
   இல்லறம் செய் நல்லவர்க்கு (மங்)

பாரத நாட்டிற் பரதர்மம் நீக்கிப்
பச்சைச் சுதர்மத்தை எங்கணும் ஆக்கிக்
கோரும் சுதந்தர நற்கொடி தூக்கிக்

   குண மிக்க வாழ்வு பெறும்
   மண மக்க ளாம்இவர்க்கு (மங்)

வைதிகர் நல்ல துருக்கர்கள் கூடி
வாழ விரும்புதல் போல் இவர் நாடி
மெய்யும் உயிருமாய் இன்பங்கள் கோடி

   மேவும்படி மனம் அன்பிற்
   றாவும்படி ஆனவர்க்கு (மங்)

தேசக் கதர் நெய்யும் சீரிய வழக்கம்
செய்வன யாவினும் வைதீக ஒழுக்கம்
நீசத்த னத்தினி லேமனப் புழுக்கம்

   நிறையகொண் டார்கற்பின்
   முறையைக்கொண் டோரிவர்க்கு (ம)

பாரத வாசியைக் கீழென மதிக்கும்
பாவி இருக்கக் கண்டாலுளம் கொதிக்கும்
சீரது வாய்ந்த சிறந்த தம் பதிக்கும்

   செஞ்சொற்கிளி இனமே! வளம்
   மிஞ்சப் புகல்வீர் மங்களம். (மங்)








( 320 )







( 325 )






( 330 )







( 335 )






( 340 )




தேசிய சோபனம்

( ''கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை என்ற மெட்டு )


சோபனம் சோபனம் சோபனமே - சுப
சோபனம் சோபனம் சோபனமே         (சோ)

பூபனும் அழகிய புனிதையும் ஆகிய
புதுமண மக்களுக்குச் சோபனமே
ஏ பாவைகாள் உரைப்பரே! - நல்ல
இந்துஸ்தான் விடுதலை சிந்திப்பவர்க்கே சுப   (சோ)

கண்ணிமை போலே நாட்டினைக் காத்திடும்
காந்திய டிகள்போல் கஸ்தூரி பாய்போல்
நண்ணிச் சமதர்மத்தினை நடத்திடு வார்க்கு
நாட்டினில் உரிமைப்போர் தொடுத்திடு வார்க்குப்

   பண்ணிற் குழைத்த தமிழால் - நன்கு
   பாடுகநீர் பாடுகநீர் பாடிடுகவே சுப      (சோ)

ராட்டின மங்கையும் நாட்டினர் செங்கையும்
கூட்டிய காதலில் குளித்திடும் பயன்போல்
தீட்டிய வாள்போல் செருகிடும் உறைபோல்
தீரா இன்பத்தில் ஓருயிர் போலே

   பூட்டாத வில் நுனிக்கு நாண் - கொண்டு
   பூட்டுகின்ற புத்திரர்கள் பூணு பவர்க்கே சுப (சோ)

வாழ்வி லுயர்ந்த எங்கள் பாரதத் தாய்போல்
வாழ்ந்திடும் படியே இந்தப் புவியின்மேல்
   சூழின்பந் தாங்கிச் சுதந்திரம் ஓங்கித்
   தொல்லை தரும் அடிமைப் பிணி நீங்கி
   வாழ்வார்கள் வாழ்வார்கள்!... என்று
   வாய்மலரக் கைம்மலரிற் சோபனம் கொட்டீர் சுப (சோ)





( 350)





( 355)






( 360)







( 365)




( 370)
தேசீய திருமண வாழ்த்து

(''மகாவதி குண மாதேர வேகமாய என்ற மெட்டு
'')

வாழ்க தம்பதிகள் வாழ்கவே வாழ்கவே!
வன்புனம் கங்கையென நன்றெலாம் சூழ்கவே!
ஆழ்கடல், ரவி, மதி வான் உள்ளகாலம்,
ஆயுள் அடைக ! ஓங்க அநுகூலம்
ஆலெனத் தழைந்தும் அறுகென வேரிழிந்தும்
மேலுக்கு மேலின்பம் மிகும் அன்பிற் பிழிந்தும்
வேலைச் சுமக்கும் பிள்ளைமிகும் எழிற்கிள்ளை
காலமெலாம் குடி கனத் தோங்க
அடிமையும், மிடிமையும் ஆண்மையால் மாற்றியே
ஆவியினும் இனிதாய்த் தேசத்தைப் போற்றியே
கடமை நினைந்திரு கையின்மேல் உரிமை
கண்டுயர் வெய்துக இத்தரை மேல்.
வாழ்க தம்பதிகள் வாழ்கநற் சுற்றுமே!
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!
வாழ்க நற்பாரத தேசமும் புவியும்
வாழ்க நற்பரைதாள் மலர் வாழ்க.




( 375)




( 380)




( 385)
தேசீய விடுகவிகளின் விடை

1- வது பாரத தேவி.

2- வது நாட்டைவிட்டவன் நற்பெயர்ந்; முதல் ஐந்து
வரிகளின் தொடக்கம் அதாவது முதலெழுத்துகளைக்
கூட்டிப்பார்க்க. பாரதவாசி என்றாகிறது காண்க.

3- வது இமயமலை, வெள்ளைகாரர்கள் ஏற முயன்று
தொல்லையடைந்தது வெளிப்படை. குதித்துக் குதித்து
இறங்கிடுவர் சில பெண்கள் என்பது மேலிருந்து இறங்கும்
கங்கை, சிந்து முதலிய நதிகள்.

4- வது இராட்டினம்

5- வது ஒன்று என்பது தமிழ் இலக்கியம் அதாவது
க, ஒன்று சேர்ந்த தரை ஆக்க க+தரை = கதரை உற்பத்தி
செய்ய. ஒன்று சேர்ந்தவலை கொண்டார்; கவலை கொண்டார்.
ஒன்று சேர்ந்த படம் அற்றார் கபடம் நீங்கியவர்.
இன்று பாரதம் விடுபட்டால், இரண்டு அதாவது உ. சேர்ந்த
வகைகொள்வார்; உவகை கொள்வார். எட்டுச் சேர்ந்த
வலை அளிப்பேன் (எட்டு அ) அவலை அளிப்பேன். எனவே,
இதில் பிரஸ்தாபிக்கப்படுபவர் மகாத்மா காந்தி.

6- வது தீமை செய்து பாரத்தை சீரழிப்பது; அடிமை,
நாமடைய வேண்டுவது; உரிமை.

7- வது மன உறுதியைக் கெடவைத்துப் பணத்தை
அழித்து அழிவையும் மயங்க வைப்பது புளிகள். புளிக்கக்
கூடிய கள் என்று இதற்கு அர்த்தம்.

                  வந்தேமாதரம்

                    ஃ ஃ ஃ




( 390 )






( 395 )






( 400 )






( 405 )