தமிழ்மொழிக்
குதவும் செல்வம்
தானாக வளர்தல் போலும்
கமழ்நறு மணத்தைக் பூக்கள்
கருவிலே பெற்றார் போலும்
இமிழ்கடல் வயிற்றின் வெள்ளம்
இயற்கையாய்ப் பெருகும். வானின்
அமிழ்தமாம் மழைநீர்க் கெல்லாம்
அடிப்படை கடல்நீர்அன்றோ?
அலைவளர் கடலே ஆழம்
அலைகளே அதன் கைத் தாளம்!
கலம்பக் கடலின் செல்வம்
கைவிரல் தொகைப்போல் ஐந்தே!
மலைபடு பொருள்கள் யாவும்
மலர்போன்று மணத்தை வீசும்.
ஒலிகடல் வழங்கும் செல்வம்
ஓங்கிய ஒளியை வீசும்;
ஆதிநீ ரான முந்நீர்,
அச்சத்தை கொடுக்கும் தண்ணீர்,
பாதிநீர், காற்றை மோதும்
பாதிநீர் கரையை மோதும்,
சீதநீர்த் துளிகள் எல்லாம்
சிறியகண் ணாடி மீதில்
ஊதிடும் ஆவி போன்று
மறைந்திடும் உலர்ந்த மண்ணில்