பக்கம் எண் :

கடல்மேற் குமிழிகள்

காட்சி 11

இடம்: அரண்மனை

நேரம்: மறுநாட்காலை

உறுப்பினர்: புலித்திறல், பிச்சன்.

அகவல்

ஏந்தலைப் பிச்சன் எதிர்பார்த் தபடி
அரண்மனைத் தனியிடத் தமர்ந்தி ருந்தான்.
புலித்திறல் ஏந்தல் புறப்பட்டு கதிர்போல்
வந்தான் பிச்சன் மழைநாட் குருவிபோல்
ஆவலோடு வணங்கி அமர அமர்ந்தான்
'என்மகன் வேறோர் எழிலுறு பாவைபால்
தன்உளம் போக்கினான்' என்றான் மன்னன்
'அவள்யார்' என்றான் கவலையோடு பிச்சன்.
'பல்கலைப் பெண்' என்று மன்னன்
சொல்ல, அமைச்சன் சொல்வான் எழுந்தே.

கண்ணிகள்

"வையத் திறல்மொழி பொய்யே -- அவன்
மணம் வெறுத்திடவில்லை
தையல் ஒருத்தியை மைந்தன் -- உள்ளம்
தாவியிருப்பது மெய்ம்மை
துய்யவ னாம்பெரு நாட்டான் -- பெற்ற
தோகை மணத்தை விலக்கப்
பொய்யுரைத் தான்!கலைமீது -- நெஞ்சு
போனதென் றான்! அது பொய்யே!
காளை முகத்தினிற் கண்டேன் -- உயிர்
காதல் வருத்தத்தின் வீச்சு
மீளவும் மைந்தனி டத்தே -- மண
மேன்மையைச் சொல்லுக" என்றான்
"காளை யுரைத்தது மெய்யே -- அவன்
கருத்தில் ஐயுறவில்லை
மீளவும் மைந்தனிடத்தே -- சொல்லல்
வீணென்று மன்னவன் -- சொன்னான்
"மலையன் எம்பகை மன்னன் -- அவன்
மகளைக் கட்டுவதால்உன்
நிலையுயர்ந்திடும் என்றே -- நீ
நினைத்திருக்கவும் கூடும்;
பலபல நினையாதே -- எம்
பாவையை ஒப்புக" என்றான்.
"கலை பயில்க என் மைந்தன்' -- என்று
கழறினன் புலித்திறலே.
          (அமைச்சன் சென்றான்)













( 5 )




( 10 )







( 15 )




( 20 )




( 25 )




( 30 )
காட்சி 12

இடம்: திறல்நாட்டின் வயல்வெளி

நேரம்: காலை

உறுப்பினர்: காருடை பூண்ட செம்மறித்திறல்,
          வயலுழுவோர்.

அகவல்

மேழி பிடித்த "கை" மேலாம் இடது "கை"
தாழாக் கோல் "கை" வலது "கை" யாக
முழங்கால் சேற்றில் முழுக, வாய்திறந்து
பழந்தமிழ் பாடினர் வயலில் உழுவோர்.
அவ்வழி அணுகிய செம்மறித் திறலின்
விழிகள் அணுகிய செம்மறித் திறலின்
விழிகள் தொழிற்படும் உழவர்பால் விரைந்தன
கருத்தோ கடலுலகு நிலைமையில் ஆழ்ந்தது!
செம்மறித்திறல் பாடுவான்
அம்முழுதுழைப்போர் அகத்தை நோக்கியே.

பாட்டு

எடுப்பு

ஆளுவோர் என்றே சிலரை
அமைத்ததுண்டோ நீ உலகே?

உடனெடுப்பு

மீளுமா றின்றி மிகுபெரு மக்களைக்
கருவினில் விளைத்ததும் உண்டோ?

அடிகள்

வாளொடு பெற்ற துண்டோ சிலரை?
வடுவொடு பெற்றாயோ பலரை?
நாளும் உழைப்பவர் தமைப்பெற்ற தாயே,
நயவஞ்சகரைப் பெற்று ளாயோ?
மேலவர் என்றொரு சாதியையும்
வீழ்ந்தவர் என்றொரு சாதியையும்
தோலில் குருதியில் அமைந்திடுமாறு
தோற்றுவித் தாயோ கூறு!

அகவல்

உழைப்பவர் என்றே ஓரினம் உண்டோ,
பழிப்பிலா துலகின் பயனை நுகரும்
ஓரினம் உண்டோ பிறவியில்? என்றே
ஏரும் நிறுத்தி எண்ணினர் உழுநரே!
(செம்மறித்திறல் செல்கிறான்)










( 35 )




( 40 )









( 45 )










( 50 )




( 55 )







( 60 )
காட்சி 13

இடம்: மின்னொளி வீட்டின் எதிரிலுள்ள தோட்டம்.

நேரம்: இரவு உண்டபின்.

உறுப்பினர்: அழகன், மின்னொளி, வையத்திறல், கிழவன்.

அகவல்

பழத்தோட்டத்தைக் கிழவன் நண்ணினான்
அழகன், மின்னொளி அருகரு கமர்ந்தே,
அரசன் மகன்தான் அனுப்பிய பண்ணியம்
அருந்து கின்றனர். அழகன் அருந்த
மின்னொளி விரும்பி, வேண்டுவாள் அவனை,
அதனை மின்னொளிக் களிப்பான் அழகன்.
உற்றதந் தைக்கென ஒருபங்கு வைத்து
மற்றவை இருவர் அருந்தினர்.
தெற்றென வந்தான் அரசன் சேயே.

கண்ணிகள

"பெருநாட்டு மன்னவன் பெண்ணை -- நான்
பெற்றிட வேண்டுமென் றார்கள்
ஒருநாட்டு மன்னவன் பெண்ணும் -- எனக்
குண்மையில் வேண்டுவ தில்லை
திருநாட்டி லேயொரு பாவை -- அவள்
செல்வத்தின் மேற்பகை யாவாள்
இருநாட்டம் அன்னவள் மேலே -- நான்
இட்டுவிட்டேன்என்று சொன்னேன்.

இவ்வாறு நான்சொன்ன தாலே -- எனை
ஈன்றவர் ஒப்பிட லானார்;
அவ்விடத் தேபெரு நாட்டின் -- ஓர்
அமைச்ச னிடத்திலும் சொன்னார்.
வெவ்வுளத் தோடவன் சென்றான் -- இந்த
வேடிக்கை எப்படி?" என்றே
மைவிழி மின்னொளி தன்பால் -- எழில்
வையத்திறல்வந்து சொன்னான்.

"இத்திரு நாட்டினிற் பாவை -- அவள்
யார்?" என்று கேட்டனள் வஞ்சி.
"முத்தமிழ என்றனன் செம்மல்! -- இதை
மொய்குழல் கேட்டு வியந்தாள்.
"தித்திக்கப் பேசும் திறந்தான் -- பெருஞ்
செல்வர்கட் கேவரக்கூடும்!
மெத்த வியப்புறும் பேச்சும் -- நல்ல
வேந்தருக்கே வரக்கூடும்!

ஏழையர் கற்றது மில்லை -- கல்வி
எய்திட வும்வழி இல்லை.
கூழை அருந்திக் கிடப்பார் -- தம்
கூரையில் தூங்கி எழுந்தே
பாழும் உழைப்பினில் ஆழ்வார் -- நல்ல
பாங்கினில் பேசுதல் எங்கே?
வீழும் நிலைகொண்ட மக்கள் -- எந்நாள்
மீளுவர்?" என்றனள் பாவை.

"இன்புறப் பேசி இருப்போம் -- என
எண்ணி இங்கேவரும் போதில்
துன்புறும் பேச்சுக்கள் பேசி -- எனைத்
துன்பத்தில் ஆழ்த்திடுகின்றாய்!
தன்னலக் காரரை எண்ணி -- மிகத்
தாழ்ந்தவர் தம்நிலை எண்ணி
மின்னொளியே எனை நொந்தாய் -- இது
வீண்செயல, என்றனன் செம்மல்.

மேலும் வையத்திறல் சொல்வான்: -- நீ
வேண்டிய நற்பண்ணி யங்கள்
சால அனுப்பிவைத் தேனே -- அவை
தக்கனவோஎனக் கேட்டான்.
"ஏலுமட் டும்புசித் தேன்நான் -- அவை
ஏழையர் அத்தனை பேர்க்கும்
ஞாலத்தில் எந்நாள் கிடைக்கும்,' -- என
நங்கை உரைத்தனள் ஆங்கே!

மாம்பழம் கொண்டுவந்திட்டான் -- அம்
மங்கையின் தந்தை; விரைவில்
கூம்பும் முகத்தோடு செம்மல் -- பழங்
கொண்டுசென்றான்பரி யேறி
ஆம்பல் நிகர்த்திடும் வாயாள் -- அங்
கழகனை நோக்கிப் புகழ்வாள்:
"பாம்பு கிடந்திடும் பாதை -- நன்று
பார்த்துச் செல என்றனள்: சென்றான்.













( 65 )




( 70 )







( 75 )





( 80 )




( 85 )





( 90 )





( 95 )




( 100 )





( 105 )




( 110 )





( 115 )





( 120 )




( 125 )
காட்சி 14

இடம்: பெருநாடு, ஆய்வு மன்றம்;

நேரம்: காலை

உறுப்பினர்: பெருநாட்டு மன்னன், அமைச்சானான பிச்சன்,
படைத்தலைவன்.

அகவல்

"வையத் திறல்என் மகளை மறுத்தான்,
பெருநாட்டுப் பெருமையைத் திறல்நாடு மறுத்தது!
இதனை ஆய்க" என்று
பதறினான் மன்னன் பாங்குளார் இடத்தே

ஆனந்தக் களிப்பு (எடுப்பு)

"திறல்நாடும், மலைநாடும் சேர்ந்தே -- நம்
திருநாட்டை மாய்த்திட ஒருநாட்டம் வைத்தான்!
நறுமலர்க் கூந்தலி னாளை -- நல்ல
நம்பெண்ணைப் பின்ஏன் மணக்க மறுத்தான்!
திறலற்ற மலையவன் பெண்ணை -- அவன்
திருமணம் செய்திடவேநினைக் கின்றான்.
இறையே படையெடுப்போம்நாம -- என்ன
இயம்பினன் ஆங்கே படைத்தலை வன்தான்.

"அந்தத் திறல்நாட்டு மன்னன் -- நம்
ஆயிழை தன்னை மறுத்தது மெய்தான்!
மந்தி மலையவன் பெண்ணை -- அந்த
வையத் திறல்மணம் செய்ய நினைத்தல்
எந்த வகைஅறிந் தாய்நீ -- அதை
எப்படி நம்புவ" தென்றனன் மன்னன்;
குந்தியிருந்த அமைச்சன் -- தன்
கோவை வணங்கி உரைத்திட லானான்;

"தேர்ந்தநல் ஒற்றர்கள் வேண்டும் -- அத்
திறல்நாட்டி லேஅவர் தங்குதல் வேண்டும்
தேர்ந்த நிகழ்ச்சிகள் யாவும் -- அங்கு
நேரில் உணர்ந்து நிகழ்த்துதல் வேண்டும்.
சேர்ந்து மலையவன் பெண்ணை -- அவன்
திருமணம் செய்திடல் மெய்யெனக் கண்டால்,
ஆர்ந்த பெரும்படை கூட்டி -- அவன்
ஆட்சியைக் கைப்பற்றலாம என்று சொன்னான்.

'நன்றிது' என்றனன் மன்னன் -- உடன்
நால்வர்நல் ஒற்றர்கள் தம்மைய ழைத்தான்
"இன்று திறல்நாடு சென்றே -- அங்
கியலும் நிலைமைகள் யாவையும் இங்கே
அன்றன் றுரைத்திட வேண்டும் -- இடை
அஞ்சற் படுத்திடும் ஆட்களினோடு
சென்றிடு வீ" ரென்று சொன்னான் -- உடன்
சென்றனர் ஒற்றர்கள், கோவை வணங்கி.











( 130 )







( 135 )





( 140 )




( 145 )





( 150 )




( 155 )





( 160 )
காட்சி 15

இடம்: திறல்நாட்டின் புறநகரான வெண்ணகர்.

நேரம்: மாலை

உறுப்பினர்: புலித்திறல் மன்னன், நகரமக்கள்,
          செம்மறித் திறல்.

அகவல்

திறல்நாடு சார்ந்த வெண்ணகர் சென்று
அறநிலை யங்களை, பிறநிறு வனங்களை
வழக்குத் தீர்ப்பார் ஒழுக்க மதனைச்
செழிப்பினை ஆய்ந்து, திருநகர் மக்கள்

விரும்பிய வண்ணம் வீற்றிருக் கின்றான்
பெருமணி மன்றில் அரும்புலித் திறல்தான்
ஆங்கே ஒருகுரல் எழுந்தது!
மாங்குயில் அன்றது மக்கள் பாட்டே!

கண்ணிகள்


குரல்:


மாந்தரில் நான்கு வகுப்புகள் என்பதும்இல்லை-இல்லை
மன்னவனாகப் பிறந்தவன் யாவனுமில்லை!

புலித்திறல்:

மாந்தரில்நான்கு வகுப்புகள்உண்டெனல்மெய்யே-மெய்யே!
மன்னவனாகப் பிறந்தவன் நான்எனல் மெய்யே!

குரல்:

நால்வகுப்பென்பது நூல்வகுப்பா தமிழ் நாட்டில்
நற்றமிழ் மக்கள் ஒரேவகுப்பேதமிழ் ஏட்டில்

புலித்திறல்:

நால்வகுப் பென்பது நன்மனுவே சொன்னதாகும்-அது
நற்றமிழ் மக்கள் எவர்க்கும் பொருந்துவதாகும்

குரல்:

மேல்வர எண்ணிய ஆரியர் நூல்கள் நமக்கோ-மிகு
வீழ்ச்சியும் தாழ்ச்சியும் செந்தமிழ் மக்கள் தமக்கோ?

புலித்திறல்:

கோல்கைக்கொண்டுள மன்னவன்நான்என்றன்ஆணை-அக்
கொள்கையைப் பின்பற்ற ஒப்பாதவர் நிலை கோணை?

குரல்:

கோலை எடுத்தவன் மேலெனக் கூறுதல் குற்றம்--பெருங்
குற்றமன்றோமக்கள் தாழ்வென்று கூறுதல் முற்றும்?

புலித்திறல்:

நூலை மறுத்துநம் கோலை எதிர்ப்பவர் தம்மை-நாம்
நோவ ஒறுத்திடில் யார் தடுப்பார் இங்கு நம்மை?

குரல்:

ஆள்பவர் சிற்சிலர்! ஆட்பட்டிருப்பவர் பல்லோர்-எனில்
அல்லல் அடைபவர் அப்படியே என்றும் நில்லார்.

புலித்திறல்;

வாளுண்டு கையினில்இன்றைக்கும் நாளைக்கும்உண்டு-நிலை
மாற்ற நினைப்பவர் வந்திட லாமா?

அகவல்

செம்ம றித்திறல் அரையடி செப்பவும்
புலித்திறல் அரையடி புகலவும் ஆக
அங்குள குடிகள், அனைத்தும் அறிந்தார்
இங்கிது கண்ட புலித்திறல்,
எங்கே செம்மறி என்றெழுந்தானே!

                      அறுசீர் விருத்தம்

இருக்கைவிட் டெழுந்தான் சீறி
ஏகினான் வெளிப்பு றத்தே!
ஒருத்தனை -- உணர்ச்சி மிக்க
செம்மறித் திறலை நோக்கிப்
"பிரித்தேன் உன் ஆவி" என்றான்
மன்னவன் பிடித்த வாளைச்
சிரித்தசெம்மறித்திறல்வாள்
சிதைத்தது, திகைத்தாள் மன்னன்.

செம்மறி செப்பு கின்றான்
"திறல்நாட்டு மக்கள் தம்பால்
மெய்ம்மையே புகல்வேன்! மக்கள்
மேல்என்றும் மட்டமென்றும்
பொய்ம்மையால் புகலும் ஏட்டை
புகலுவார்தம் ஏற்பாட்டை,
இம்மாநி லத்தில் மாற்ற
ஆவன இயற்றித் தீர்வேன்.

"இதுவேநான் மக்கட் கிந்நாள்
இயற்றிட எண்ணும் தொண்டு
முதியோன் நீஉடன் பிறந்தாய்
உன்னுயிர் முடிப்பதுன்றன்
அதிகாரம், அல்லால் என்கை
அவ்வினை செய்வதில்லை!
பொதுமக்கள் உள்ளம் நோக்கிப்
போகிறேன என்று போனான்.











( 165 )





( 170 )













( 175 )













( 180 )










( 185 )













( 190 )







( 195 )







( 200 )





( 205 )




( 210 )





( 215 )




( 220 )

காட்சி 16

இடம்: திறல் நாட்டின் நகர்ப்புறத்தில் ஒரு குளக்கரை.

நேரம்: காலை

உறுப்பினர்: அழகன், பெருநாட்டின் ஒற்றனான வேலன்.

அகவல்

குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு, பல்
விளக்கும் அழகனை வேலன் அணுகி,
'எவ்வூர் என அவன் 'இவ்வூர்' என்றான்.
'என்ன அலுவல்' என்றான், அழகன்,
'மன்னன் மகனின் துணையாள்'
என்றான். வேலன் 'வணக்கம்' என்றான்!

அறுசீர் விருத்தம்

'பொன்னாற்றூர் முத்துச் செட்டி
புதல்வன்தான் வாணி கத்தில்
பொன்னெலாம் இழந்தேன் என்றன்
புதுமனை யாளும் செத்தாள்
என்னை நீ காக்க வேண்டும்
எளியன்நான்' என்றான் வேலன்.
'என்னநான் செய்யக்கூடும்
என்றந்த அழகன் சொன்னான்.

'அரண்மனை அலுவல் ஒன்று
சின்னநாய் அடைந்தால் போதும்
அரசரின் மகனுக்கோ நீ
அன்பான துணைவன் அன்றோ?
உரைத்தால்நீ. இளங்கோ கேட்பான்
ஒருக்காலும் மறுக்க மாட்டான்
அருள்என்மேல் வைக்க வேண்டும்
அன்பனே' என்றான் வேலன்

'நாளைவா நண்பா' என்றே
அழகனும் நவின்றான். வேலன்
'வேளைநான் தவற மாட்டேன்
வருகின்றேன்' எனவி ளம்பிக்
காளை அவ் வரசன் மைந்தன்
'கடிமணம் எப்போ' தென்றான்.
'கேளாதே அதனை' என்று
கிளத்தினான் அழகன் ஆங்கே!

'கேட்டது குற்ற மானால்
மன்னிப்புக் கேட்கின் றேன்நான்!
நாட்டினில் நானோர் ஏழை
நாளைக்கே அலுவல் ஒன்று
காட்டினால் மிகநன்றாகும்
கைக்கூலி நூறு பொன்னும்
நீட்டுவேன் உனக்கே' என்று
நிகழ்த்திடலானான் வேலன்.

'ஏழைநீ நூறு பொன்னும்
எனக்கெவ்வா றீதல் கூடும்?
தோழனே, உன்றன் சொல்லில்
ஐயமே தோன்றச் செய்தாய்
வாழிநீ உண்மை கூறு
மறையேல்' என்றழகன் கூறத்,
'தோழனே நாளைக்கு வந்து
சொல்லுவேன்' என்று போனான்.












( 225 )







( 230 )





( 235 )




( 240 )





( 245 )




( 250 )





( 255 )





( 260 )




( 265 )
காட்சி 17

இடம்:படைவீடு.

நேரம்: உண்டபின்.

உறுப்பினர்: படைமறவர், செம்மறித்திறல்.

அகவல்

படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார்
இடைவானம் ஈந்த அமுதுபோல் ஒருகுரல்
காதிற் புகுந்தது மறவர்
யாதெனக் கருத்தில் ஏற்கலாயினரே.

எண்சீர் விருத்தம்

குரல்

இந்நாடு பொது மக்கள் சிறையே
எவரும் நிகரென்ற பொதுவுரி மைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
போரின் மறவரே உங்களின் துணையினால்!
கந்தை யின்றி உணர்வின்றிப் பொதுவினர்
காலந் தள்ளி வருவது கண்டிரோ
இந்த நாடு பொதுமக்கள் நாடன்றோ?
நீவிரெல்லீரும் இந்நாட்டு மன்னரே!

மன்னராகப் பிறந்திட்டோம் என்கின்றார்
மக்கள் ஆட்படப் பிறந்தவர் என்கின்றார்
இன்னவர்க்கு நுந்துணை இல்லையேல்
மன்னர் எங்கே, பெரும்படை மறவரே?
இந்நிலத்துப் பெருமக்கள் ஓர்கடல்
இடர்செய் மன்னர் அக்கடற் குமிழிகள்,
இன்று கருதுக குடிகளே! மறவரே!
நாளைக்கேகுடியரசினை நாட்டலாம்

தமிழ் மொழிக்குள ஆக்கத்தைப் போக்கினார்
தமிழர் கொள்கையைத் தலைசாய்க்க எண்ணியே!
அமுதை நீக்கியோர் நஞ்சைவார்க் கின்றனர்
அத்தனைக்கும் நும்துணை கேட்கின்றார்;
உமையெலாம் அந்த மன்னவர் கைகளின்
உளிகளாக்கி; நாட்டைப் பிளப்பதோ?
நமது கொள்கை மக்களெலாம் நிகர்
நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே.

அகவல்

படைவீட்டுக் படுக்கையில் இக்குரல் புகுந்து
நடைமுறை தன்னில், நாணிட வைத்தது.
மறவர்கள் தூக்கம் மாய்ந்திட
இறவாப் பெருவிருப் பெய்தினர் ஆங்கே.












( 270 )









( 275 )





( 280 )




( 285 )





( 290 )







( 295 )
காட்சி 18

இடம்: திறல்நாடு. அரண்மனையின் உட்புறம்.

நேரம்: காலை

உறுப்பினர்: ஆண்டாள், மின்னொளி.

அகவல்

அரண்மனை தன்னில் ஆங்காங்குச் சென்று
மின்னொளி தன்தாய் தன்னைத் தேடினாள்;
காவல் அறையில் பொன்னி யோடு
மேவி இருப்பது கண்டுவியந்தாளே!

கண்ணிகள்

''வீட்டை மறந்தாயோ -- எனையும்
வேம்பென விட்டாயோ?
நாட்டில் அரண்மனையே -- உனக்கு
நன்றெனக் கொண்டாயோ?
போட்டது போட்டபடி -- விடுத்தே
போனாள் அரண்மனைக்கே
கேட்டுவா என்றுரைத்தார் -- தந்தையார்''
என்றனள் கிள்ளை மின்னாள்.

"மன்னர் கொழுந்தியடி - நிலைமை
மங்கிட லான தடி
கன்னல் மொழியாளை -- மன்னவன்
காவலில் வைத்தானே!
என்னைத் துணையாக -- வைத்தனன்
ஏந்தலின் நன்மகன்தான்!
உன்னை மறக்கவில்லை -- தந்தையை
உளம் மறந்ததில்லை''

என்றனள் ஆண்டாள்தான் -- இந்நிலை
ஏனென்று கேட்டவளாய்
மின்னொளி நின்றிருந்தாள் -- அவள்தாய்
மேலும் உரைக்கின்றாள்;
''மன்னவன் தம்பியினை -- அச், செம்
மறித்திறல்தனையே
பொன்னியும் காதலித்தாள் -- இதனைப்
புலித்திறல் எதிர்த்தான்.

புகலும் செம்மறிதான் -- வேடர்தம்
புலைச்சியின் மகனாம்
இகழத் தக்கவனாம் -- அவனை
இவ்விடம் வைக்காமல்
அகற்றி விட்டார்கள் -- இந்தநல்
அரண்மனைக் குடையார்
மிக இரக்கமடி -- நினைத்தால்
வெந்திடும் உள்ள'' மென்றாள்.

''வேட்டுவ மங்கையிடம் -- மறிதான்
வேந்தனுக்கே பிறந்தான்
நாட்டில் அவன்புலையன் -- எனவே
நவிலல் என்னமுறை?
ஏட்டினில் உள்ளதுவோ -- தமிழர்
இனத்தில் வேற்றுமைதான்?
வேட்டுவர், மக்களன்றோ'' -- எனவே
விண்டனள், மின்னொளிதான்.

''தோட்டத்தில் ஆடியிரு -- மகளே
தூயவையத் திறலைக்
கேட்டுவரு கின்றேன் -- விரைவில்
கிள்ளையே வீட்டுக்'' கென
நாட்டம் உரைத்தாளே -- ஆண்டாளும்
மின்னொளி நன்றென்றே
தோட்டம் புகுந்தாளே--அழகிய
தோகை மயில் கண்டாள்










( 300 )







( 305 )




( 310 )





( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )




( 340 )

 

 

( 345 )




( 350 )

காட்சி 19

இடம்: அரண்மனைத் தோட்டம்.

நேரம்: காலை.

உறுப்பினர்: மின்னொளி, வையத்திறல், ஆண்டாள், மன்னி

அகவல்

பசும்புற் பச்சைப் பட்டு விரித்த
விசும்பு நிகர்த்த விரிதரை தன்னில்
முல்லை படர்ந்துபோய் விளாவை அளாவச்
செல்வச் செழுமலர் கொன்றை திரட்டி
ஆயிரம் கிளைக்கையால் அளித்து நிற்க
வாய டங்காத மணிப்புள் பாடப்
புன்னை மலர்க்கிளை தென்றற் பூரிப்பொடு
மின்னொளி வருகென அழைக்க
அன்ன நடையாள் அணுகினாள் ஆங்கே.

வெண்பா

''வீவளர்ப்பு மயில்தான் மரத்தடியில் ஓடிக்
களித்தாடக் கண்டு களித்தாள் -- கிளிப்பேடு
கெஞ்சியது சேவற் கிளிவந் தருள்புரிய
வஞ்சியது கண்டாள் மகிழ்ந்து:

தனியிருக்கும் தாழ்பலவைக் கண்டாள்பின் வேரில்
கனியிருக்கக் கண்டு வியந்தாள் -- இனியவாம்
'பூ'க் கண்டாள் பூவில் புதியபண் பாடுகின்ற
ஈக்கண்டாள் இன்பங்கண்டாள்.

கோணிக்கொம் பாடியசெங் கொத்தலரிப் பூக்கண்டாள்
மாணிக்கம் கண்டாள் மகிழ்கொண்டாள் -- சேண் நிற்கும்
தென்னையிலே பாளை சிரிக்கச் சிரிக்கின்றாள்
புன்னையிலே போய்க்கண்டாள் முத்து.

மின்னொளி ஆங்கே வெயிலில் உலவுகின்றாள்
மன்னன் மகனோ தொலைவினிலே -- நின்றபடி
கண்டு களிக்கின்றான் கட்டழகைத் தள்னுளத்தால்
உண்டு களிக்கின்றான் உற்று.

மான்கண்டு பூரிக்கும் மங்கையினை மன்னன்மகன்
தான்கண்டு பூரிப்பான்; தையல்நல்லாள் -- வான்கண்ட
செம்மா துளங்கண்டு; செல்விழிபூரிக்கஅவள்
அம்மாது உளங்காண்பான் ஆங்கு!

கோவைக் கனிகண்டு கோவையிதழ் பூரிக்கும்
பாவை எழில்கண்டு பதறுகின்றான் --பூவைதான்
மாங்கனிக்குத் தாவுகின்றாள் மன்னன்மகன் உள்ளம்அத்
தீங்கனிக்குத் தாவும் தெரிந்து.

மின்னிடையும் தானசைய மேலாடையும் பறக்க
அன்னநடை போடும் அழகுகண்டும் -- அன்னவளின்
பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல்
நெஞ்சேற நின்றான் நிலைத்து.

தேசு வெயிலதுதான் தேக்குநிழற் கீழேபொற்
காசு கிடப்பதுபோல் காட்சிதர -- மாசில்லாள்
செங்காந்தட் கைமுகவாய் சேர்த்தாள். இளங்கோவாய்
அங்காந்தான் அண்ணாந்தவாறு.

அன்னோன் நிலையனைத்தும் அங்கவனைத் தேடிவந்த
மன்னி மறைந்திருந்து பார்க்கின்றாள் -- மின்னொளிமேற்
கண்ணானான் பிள்ளை கருத்தழிந்தா னோஎன்று
புண்ணானாள் நெஞ்சு புகைந்து,

"வையத் திறலே, மகனே, திருவமுது
செய்யவா! செந்தீ விளைக்கின்ற -- வெய்யில்
விழிபார்த்தல் தீமை விளைக்கும், அரசர்
வழிபார்த் திருக்கின்றார் வா!"

என்றுரைக்க மன்னி எதிரேதும் சொல்லாமல்
சென்றான் திறலோன் அரண்மனைக்கே -- பின்னர் அங்கே
ஆண்டாளும் வந்தாள் அழைத்திட்டாள் தன்மகளை
மீண்டாள்தன் வீட்டுக்கு மின்.












( 355 )








( 360 )





( 365 )





( 370 )





( 375 )






( 380 )





( 385 )





( 390 )





( 395 )






( 400 )
காட்சி 20

இடம்: அரண்மனைத் தனியறை

நேரம்: காலை

உறுப்பினர்: புலித்திறல், மன்னி.

அகவல்

வேண்டுகோள் விட்டாள் வேந்தன் வந்தான்
''ஈண்டமர்க ஈண்டமர்க" என்றாள் மன்னி!
மன்னன் முகத்தை மலர்க்கையால் ஈர்த்தே
'ஐயம் அடைந்தேன்' என்றாள்.
வையத் திறலின் வகையுரைப்பாளே!


கலிவெண்பா

''பூக்காரியின் மகளைப் பூங்காவில் நம்பிள்ளை
நோக்கிய நோக்கின் நிலையினைநான் -- போய்க் கண்டேன்.
கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள்
தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? வாழ்வில்
தனக்குநிக ரில்லாத் தையல்பால் பிள்ளை
மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் -- எனினும்,
தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை
துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? -- வெடுக்கென்று

வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம்
செய்துவைத்தல் நல்லதெனச செப்பினாள் -- துய்யதென்று
மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச்
சொன்னான்; தொடர்ந்தாள் அம்மாது.










( 405 )







( 410 )




( 415 )




( 420 )