பக்கம் எண் :

கடல்மேற் குமிழிகள்

காட்சி 31

இடம்; அரண்மனை.

நேரம்; காலை

உறுப்பினர்; ஆளும்சாதி அதிகாரிகள், அரசன்.

அகவல்

ஆளும் சாதியார் அதிகாரத்தினர்
வாளும் கையுமாய் வந்து மன்னனை.
''நாலாஞ் சாதியும் மேலாஞ் சாதியும்
ஆலும் விழுதும் ஆனார் இதனை
நாமறி வோமே. அறிந்தும்இத்
தீமை புரிந்தது தீமை'' என்றாரே!

அறுசீர் விருத்தம்

''நேர்ந்திட்ட நிலைமை தன்னை
நிகழ்த்துவேன் உறவி னோரே
சார்ந்திட்ட ஆண்டாள் என்னும்
பூக்காரி தன்பெண் ணாளைத்
தேர்ந்திட்டான் மணமே செய்யத்
திருமகன்'' என்றான் மன்னன்!
ஆர்ந்தது விழியிற் செந்தீ;
''ஐயையோ'' என்றார் வந்தோர்.

''அன்றியும் என்கொ ழுந்தி்
செம்மறித் திறலை அண்டி
நின்றனள். சிறையில் வைத்தேன்;
நிலைகெட்ட செம்ம றிக்கும்
பன்முறை சொன்னேன்; கேளான்.
படுசிறை என்றேன். மேலும்
என்பிள்ளை என்றும் பாரேன்
சிறையினில் இருக்கச்செய்தேன்.

பணியாளர் தோழி மார்கள்
இதையெல்லாம் பார்த்தி ருந்தார்;
அணியணி யாகச் சென்றார்
அரண்மனை வேலை விட்டே!
துணிவுடன் நகரைக் கூட்டித்
தூற்றினார் மேல்வகுப்பை!
பணிவுடன் பணிகள் செய்து
பார்ப்பனர் உதவு கின்றார்.

''அரண்மனை பின்பு றத்தே
அம்மறித் திறலும், பொன்னி!
ஒருத்தியோ டுள்ளான் என்றன்
உயர்மைந்தன் பணிப்பெண் ணாளைத்
திருமணம் புரிய வேண்டி்
ஆவன செய்கின்றானாம்.
அருஞ்சிறைக் காவல் இல்லை
அனைவரும் இவ்வாறானார்''

என்றனன் மன்னன்; இந்த
இழிவினைக் கேட்டி ருந்த்
மன்னரின் மரபி னோர்கள்
வாளொடு கிளம்பி னார்கள்
''புன்றொழில் புரிந்துளாரைப்
புதைக்கின்றோம்'' எனக்கொ தித்தார்.
சென்றனர், சாதி வாழ்க்
தீயர்கள் வீழ்க'' என்றே.

போயினார் அரண்ம னைக்குப்
புறக்கட்டில், அவர்கள் இல்லை.
''தீயவர்கள் மறைந்தார்'' என்று
செப்பினார். அரசன் கேட்டு
''நாயினை ஒப்பாரோடு
நகரினிற் கலகம் செய்யப்
போயினார் போவீர்'' என்றான்
அஞ்சினர் பொய்கை யாள்வார்.












( 5 )







( 10 )





( 15 )




( 20 )





( 25 )




( 30 )





( 35 )





( 40 )




( 45 )





( 50 )
காட்சி 32

இடம்; திறல் நாட்டு நகர்

நேரம்; காலை

உறுப்பினர்; ஒற்றர் படைத் தலைவன், பெருமக்கள்

அகவல்

''பெருநாட் டுப்படை, திருநாடு தன்னை
முற்றுகை யிட்டதே முற்றுகை யிட்டதே''
என்று கூவினர் எங்கணும் மக்கள்!
தீமை குறித்தது செழுநகர்ப் பெருமணி!
அரசன், படையை அழைத்தான் விரைவில்!
படையின் தலைவன் பரபரப் புற்றான.
தேர்ப்படை ஒன்று சேர்ப்பீர் என்றான்!
பரிப்படை எழுக என்று பகர்ந்தான்;
யானைப் படையும் எழுக என்றான்;

காலாட் படையும் காண்க என்றான்;
நாலாஞ் சாதியார் நாமாட்டோம் என்றனர்.
மூன்றாஞ் சாதியார் முணுமு ணுத்தார்
இரண்டாம் சாதியார் இருநூறு பேர்கள்
திரண்டெ ழுந்தனர் மருண்ட நெஞ்சோடு
முதன்மைச் சாதியார் மூக்கைப் பிடிக்க
அரண்மனைச் சோற்றை அருந்துவ தன்றிப்
போரை யணுகாமே ''நமோ
நாராயணா'' என்று நவின்றுசென்றனரே.









( 55 )




( 60 )





( 65 )




( 70 )
காட்சி 33

இடம்; கடல்மேற் குமிழிகள்

நேரம்; இரவு

உறுப்பினர்; வையத்திறல், செம்மறித்திறல், பெருமக்கள்.

அகவல்

''நொட்டுமக் கட்கு நல்வழி காட்டச்
சேய்வை யத்திறல், செம்ம றித்திறல்
சொற்பெருக் காற்றுவார் என்று
நற்பெரு மக்கள் நண்ணினார் ஆங்கே.

எண்சீர் விருத்தம்

மேடையின்மேல் ஏறிநின்றான் மன்னன் மைந்தன்:
விருப்பத்தால் நகரமக்கள் 'வாழ்க' என்றார்.
வாடா மலர்முகத்தான் வணக்கம் கூறி
''மாண்புடையீர் திறல்நாட்டு மக்காள், கேளீர்!
பீடுடைய, நம்திறல்நாடதனை நோக்கிப்
பெருநாட்டான் பெரும்படையைக் கூட்டி வந்தான:
வாடிடநாம் முற்றுகையும் போட்டு விட்டான்:
மன்னரின் அதிர்வெடியில் மருந்தே யில்லை.

பிரமன்உடல் தனில் நான்கு வகையாம் மக்கள்
பிறந்தாராம், பார்த்தானாம் என்றன் தந்தை,
பிரமன்முகந் தனிற்பார்ப்பார் பிறந்திட்டாராம்;
பிரமன்தோள் பெற்றுதுவாம் மன்னர் தம்மைப்
பிரமனிடை தனிற்பிறந்தார் வாணி கர்கள்
பிரமனடி தனிற்பிறந்தார் உலகி லுள்ள்
பெருமக்கள் இதுமனுநூல் ஆரியர் சொல்
பிழைக்கவந்த ஏமாற்றுக் காரர் சூழ்ச்சி.

அரசன்மகன் உங்களினப் பெண்ணை நத்தல்
அடுக்காதாம் அதற்கென்னைச் சிறையில் வைத்தான்;
அரசன்எழிற் கொழுந்தியார் என்சிற்றன்னை
அகம்பறித்தார் செம்மறியார் அதுவும் குற்றம்
பெருஞ்சிறையில் மூவருமே அடைக்கப் பட்டோம்;
பெருமக்கள் இதையறிந்தீர்; தன்மா னத்தால்
வருந்துகின்றீர்; ஆள்வோர் பால்ஒத்து ழைக்க்
மறுத்துவிட்டீர்; வாழ்கநீர் வாழ்க வாழ்க!

'பெருநாட்டான் படையெடுப்பைத் தகர்க்க வேண்டும்
பெருமறவர் கூட்டமே வாரீர்' என்று
திருநாடாம் திறல்நாட்டின் மன்னர் சென்று
திருமுழங்காற் படியிட்டுக் கெஞ்ச லானார்;
வரமாட்டோம் எனமறவர் மறுத்து விட்டார்
வாழ்கநனி வாழ்கஅவர் வாழ்க வாழ்க!
இருசாதி தான்மீதி, மன்னர் கையில்
இவர்சாதி ஒன்றுமற்றொன்றினாம்தார் கூட்டம்.
அரண்மனையின் அறைக்குள்ளே வாள்சு ழற்ற
அட்டியில்லை என்றததோ அரசச் சாதி!
பிரமனார் திருமுகத்துப் பெருங்கா யங்கள்
பெண்டாட்டி பிள்ளையுடன் அரண்ம னைக்குள்
பெருநாட்டான் அருள்பெற்று விபீஷ ணன்தான்
பெற்றபயன் பெறுவோமா எனக்க யிற்றை
அருணாச லப்பெரும்புராணம் சாத்தி
அவனடியே உய்யும்வழி என்கின்றார்கள்.

மேற்சாதி யார்நிலைமை இவ்வா றாக
மேலும்நாம் செயத்தக்க தின்ன தென்று
சேற்கருங்கண் பொன்னியார்க் கன்ப ரான்
செம்மறியார் என்னருமைச் சிறிய தந்தை
தன்னுரையை முடித்தமர்ந்தான் மன்னன் மைந்தன்
மாற்றுயர்ந்த பொன்போன்ற திறல்நாட் டாரே
வணங்குகின்றேன் என்றுரைத்து மறிபுகல்வான்;

''திறல்நாட்டின் மேல்வந்த பெருநாட் டானைச்
சிதறடிக்க வேண்டுமெனச் செப்பு கின்றீர்.
பொறுத்திருங்கள் பெருநாட்டான் வரட்டும் உள்ளே
போடட்டும் தன்கொடியை! மகிழ்ந்தி டட்டும்
வெறுக்காதீர் படைமறவர் விளையாடட்டும்
வெற்றிவிழாக் கொண்டாட்டம் நடந்தே றட்டும்
திறல்நாட்டின் தம்மறவர் தமக்கும் இந்தத்
திட்டத்தை நன்றாகச் சொல்லி வைப்பீர்.

தனித்தனியே பகைமறவர் தம்மைக் கண்டு
தாழ்சாதி எனநம்மேல் உயர்ந்தோர் வைத்த
மனப்போக்கை அவர்மனத்தில் ஏற்ற வேண்டும்
மற்றவற்றை யாமுரைப்போம் அவ்வப் போதில்.
இனத்தோடு இனம்சேரும்! ஆளும் சாதி
இங்குள்ள ஆளுஞ்சாதி யையே சேரும்
அனைத்துள்ள கோல்கொண்டார் நூல் கொண் டாரை
ஆட்கொள்ள வேண்டியவர் நாமே'' என்றான்,
                        [கூட்டம் முடிந்தது]










( 75 )







( 80 )





( 85 )




( 90 )





( 95 )




( 100 )





( 105 )





( 110 )




( 115 )





( 120 )





( 125 )




( 130 )





( 135 )




காட்சி 34

இடம்:     திறல்நாட்டு நகர்.

காலம்:     காலை.

உறுப்பினர்:  பெருநாட்டு மன்னன், பெருநாட்டுப் படைகள்,
          திறல்நாட்டு மக்கள்.

அகவல்

'கோட்டைமேல் வெள்ளைக் கொடிபறந்தது
பேட்டையில் பெருநாட்டுப் படைகள் நுழைந்தன,
பெரும்படை பின்வர ஒருமணித் நேரில்
பெருநாட்டு மன்னன் திருநகர் புகுங்கால்,
நேற்றுப் புலித்திறல் சோற்றை உண்ட்
சிறுமதிப் பார்ப்பனர் நிறைநீர்க் குடத்தொடும்
நறுமலர்த் தாரொடு நன்றெதிர் கொண்டு
'வருக பெருநாட்டு மன்னரே வருக!
திருமால் பிறப்பெனும் செம்மலே வருக!
புலித்திறல் மன்னனால் பட்டது போதும்
மனுநூல் தன்னை மன்னரே காக்க!
இனிமேல் எங்கள் தனிநலந் தன்னை
நாடுக நாடுக நன்றே வாழ்க!
சூடுக மாலை' என்று சூட்டி
நல்வர வேற்பு நடத்திய அளவில்,
அரசனும் வணங்கி, 'அறம்பிச காமல்
பெருமை மனுநூல் பிழைபடாமல்
பார்ப்பனர் நன்மை பழுதுபடாமல்
காப்போம்' என்று கதறி முடித்தான்.
நாற்படை முழக்கொடு நகர்மேற்சென்றன்
தேன்கூட்டில் ஈக்கள் செறிந்தன போல
வானுயர் வீடுதொறும் வாயிலில் மக்கள்
தலைவைத் திருந்தார் தம்முளம் மறைத்தே.
பெருநாட்டுப் பிறைக்கொடி திறல்நாடு பெற்றது
பெருநாட்டு மன்னனும் பெரும்படை மறவரும்
திறல்நாட் டரண்மனை சேர்ந்தனர் உடனே.

புலித்திறல் சிறையில் புகுத்தப் பட்டான்;
பிரமன் தோளிற் பிறந்த பெட்டைகள்
மரியா தையாகப் பெருஞ்சிறை சொன்றனர்

மருமக னாகும் வையத் திறலை
விரைவில் தேட விடுத்தான் ஆட்களை.

பெருநாட் டான் தன் பெரும்படை மறவர்க்கு
விடுமுறை தந்தான். வேண்டிப் பார்ப்பனர்
அரண்மனை அரிசியில் விருந்துண்பித்தார்.

முரசறை வோனை அரசன் அழைத்தே,
'அரசியல் திட்டம் அமைப்பதற்கும்

வையத் திறலை என் மகளுக் காகத்
திருமண உறுதி செய்வ தற்கும்
நாளைக் காலை நாட்டு மக்கள்
மாளிகை வரும்படி மணிமுர சறைக்
என்றான். யானு வள்ளுவன்
நன்றெனப் பணிந்து நடந்தான் ஆங்கே.










( 140 )




( 145 )




( 150 )




( 155 )




( 160 )




( 165 )





( 170 )






( 175 )





( 180 )
காட்சி 35

இடம்:     திறல் நாட்டு மாளிகை.

நேரம்:     காலை.

உறுப்பினர்: அனைவரும்.

அகவல்

மென்பட்டு மெத்தை விரித்த பெருந்தரை,
நன்முறை ஓவிய நாற்பு றச்சுவர்
கற்றச்சர் கைத்திறம் காட்டும் ஆயிரங்கால்,
பொற்கட்டில் பன்மணி புதைத்த மேன்மூட்டு
வருகெனப் பொற்பாவை வரவேற்கும் முன்வாயில்
பெருமக்கள் மகிழ்ந்துபோம் பின்புறப் பெருவாயில், --
நறுந்தென்றல் வார்க்கும் நாற்சுவர்ச் சன்னல்கள்
நிறந்தரு பவழம், நீலம், மாணிக்கம்,
சுடர்விடு முத்துத் தொங்கல்கள் இடையிடை,
அடைசுவர் சேர அங்குக் கலைப்பொருள்
ஆன மாளிகைநடு அடலேறு சுமப்பதோர்
வானில வெறித்த மணிக்குடை இருக்கையில்
வென்ற பெருநாட் டான்வீற் றிருந்தான்.
அன்னோன் அமைச்சன் அருகினில் இருந்தான;
படையின் தலைவனும் பாங்கில் அமர்ந்தான்.
முரசு முழங்கும் முன்புற வாயிலால்
வரும்பெரு மக்கள் மலைப்புரள் அருவி
திறல்நாட்டு மறவரும் செம்மறித் திறலும்
வையத் திறலும் தம்முரு மாற்றி
நீறு பூத்த நெருப்பென இருந்தனர்.
ஆண்டாள் ஒருபுறம் அவள்மகள் ஒருபுறம்
ஈண்டிழைப் பொன்னி ஒருபுறம் இருந்தனர்.
தொலைவிலோர் மூலையில் தோன்றா வண்ணம்
அழகன் இருந்தான் அச்சத் தோடே,
பழந்திறல் நாட்டினர் பல்லா யிரவர்,
பெருநாட்டு மறவர் ஒருசில நூற்றுவர்
ஆங்கே கலந்தபடி அமர்ந்தி ருந்தனர்.
பெருநாட்டு மன்னன் பேசத் தொடங்குமுன்
"வையத் திறலோன் வந்துவிட் டானா?"
என்று பன்முறை கேட்டான்? 'இல்லை' என்று
சொன்னார். சொற்பொழிவு தொடங்கினான்:
"திறல்நாட்டு மக்களே, செப்புதல் கேட்பீர்:
இத்திறல் நாடோ, என்பகை யான்
மலைநாட் டோடு கலந்து கொள்ள
இருப்பதால் நான்படை எடுக்க நேர்ந்தது,
வென்றேன் சிறையில்உம் வேந்தரை அடைத்தேன்.
திறல்நாடு தனில்என் பிறைக்கொடி ஏற்றினேன்.
இவ்வா றிருக்க, இனிஇந் நாட்டின்
ஆட்சிமுறை எவ்வாறமைய வேண்டும்?
என்பது பற்றி இயம்பு கின்றேன்:
என்றன் உறவினன், மன்னர் மரபினன்
ஆன ஒருவனே இந்நாட்டரசன்.
வரும் அவ் வரசன் பெருநாட்டுக்குப்
போர்த்துணை நாளும் புரிய வேண்டும்.
மேலும் அந்த வேந்தன், பார்ப்பனர்
மறைநூ லுக்கு மதிப்பீய வேண்டும்.
இத்தனை கருதி இந்நாட்டு மன்னரின்
மகனுக் கேஎம் மகளைத் தரவும்
விரும்பினேன். அவனும் விரும்புவ தாக
அறிந்தேன்; மகிழ்ந்தேன். ஆதலால் இந்தத்
திறல்நாட்டை யாள்வோன் திறல்நாட்டினனே!
வையத் திறல்என் மகளை மணப்பதாய்
இன்றே உறுதி இயம்பினால், நாளையே

மணமுடித்து மணிமுடி பெறலாம்!
வையத் திறலோன் வராமை யாலே
அன்னோன் சார்பில் இந்நாட் டார்கள்
உறுதி கூறினும் ஒப்புக் கொள்வேன
என்று மன்னன் இயம்பிய அளவில்,
கூனும் கோலும் குள்ளமும் வெள்ளைத்
தாடியும் மீசையும் தள்ளா உடலுமாய்
எழுந்து நின்றான் ஒரு
கிழவன்: அரசனைக் கேட்டான் ஆங்கே:

இணைக்குறள் ஆசிரியப்பா

"உங்கள் உறவுதான் ஊராள வேண்டுமோ?
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?
என்று கிழவன் கேட்டான்.
"கேட்பீர் கேட்பீர என்று
முன்னுள்ள மக்கள் முழக்கஞ் செய்தனர்!
"எங்கள் உறவுதான் ஆளஏற்றவன்:
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டும
என்றான் வேந்தன்.
"எங்களில் ஒருவன் ஏன் ஆளக் கூடாது?
சொல்க" என்றான் கிழவன்.
"நாடாள்வ தன்று நாலாஞ் சாதி"
என்றான் மன்னன்.
"சாதி ஒழிக சாதி ஒழிக"
என்று முழங்கினர் எதிரில் மக்கள்!
"எங்கள் நாட்டுக் கினிவரும் மன்னன்
உங்கட்குப் போரில் உதவ வேண்டுமோ?
பாரோர் நாட்டைநீர் பறிக்க நினைத்தால்
சீராம் திறல்நாடு சேர வேண்டுமோ?"
என்று கேட்டான் முதியோன்.
"நன்று கேட்டீர் நன்று கேட்டீர
என்றனர் மக்கள்.
"ஆம்ஆம்!" என்றே அதிர்ந்தான் மன்னன்.
"பார்ப்பனர் மறையைப் பைந்தமிழ் மக்கள்
மாய்ப்பது தீதோ வளர்ப்பது கடனோ?"
என்றான் முதியோன்.
"ஆம்!" என்று மன்னன் தீமுகம் காட்டினான்.
"பார்ப்பனர் பொய்ம்மறை பாழ்பட" என்று
கூப்பாடு போட்டனர் மக்கள்.
"வையத் திறல்உம் மகளை மணக்கும்
எண்ணம் அவனுக் கிருந்த தில்லை;
இருக்கப் போவதும் இல்லை; இதனை
இளங்கோ சார்பில் யானுரைக்கின்றேன
என்றான் முதியோன்.
"ஆம்ஆம என்றே அனைவரும் கூவினர்!
சின்ன முகத்துடன் மன்னன், "கிழவரே!
வையத் திறலை மன்னன் ஒறுத்தது
பொய்யோ!" என்றான்.
"மன்னன் தன்னன்பு மைத்துனர் மகளை
மணக்கச் சொன்னான்; மறுத்தான் வையன்;
அதனால்
ஒறுத்தான என்றான்.
"சிறைமீட்டு வருக புலித்திறலை என்று
பெருநாட்டு மன்னன் உரைத்தான்.
திறல்நாட்டு மன்னன் அவ்விடம் சேர்ந்தான்
"வையத் திறலைச் சிறையில் வைத்தனை
மெய்யாக் காரணம் விளம பெனக் கேட்கப்
புலித்திறல் புகல்வான்:
"உன்மகள் தனையும் என்மகன் மறுத்தான்
என்மைத் துனன்மகள் தன்னையும் மறுத்தான்
வேலைக்காரி மின்னொளி தன்னை
மாலை யிட்டு மன்னர் மரபையே
அழிக்க எண்ணினான்! அடைத்தேன் சிறையில்!"
என்ன,
பெருநாட்டான், வாள் உருவி
"புரட்சியோ! புரட்சியோ! கிழவரே,
உரைப்ப தென்ன?" என்று்
மன்னன் கேட்கக்
கிழவன்," "மன்னா! கிளத்துதல் கேட்க:
சாதி யில்லை!
பார்ப்பன வகுப்பும் பார்ப்பன நூற்களும்
பொய்யே!
மதம்எனல் தமிழ் வையத்தின் பகை!
ஆள்வோர் என்றும் அடங்குவோர்
என்றும் பிறந்தார் என்பது சரடு!
தனிஒரு மனிதன் தன்விருப் பப்படி
இனிநாட்டை ஆள்வ தென்ப தில்லை!
மக்கள் சரிநிகர்!
எல்லாத் துறையிலும் எவரும் நிகரே!
நெடுநாட்டு மக்களின் படியினர் (பிரதிநிதிகள்)
குடியரசு நாட்டல்எம் கொள்கை யாகும
என்று கிழவன் இளைஞனாய் நின்றான்.
மன்னன் வையத் திறலைக் கண்டான்.
கையால் தன்வாள் காட்டி,
"என் மகள் 'பெருந்திரு' என்னும் மங்கையை
மணந்துகொள்: இன்றேல் மன்னன் மைத்துனன்
மகளை மணந்து கொள்! மக்களில் தாழ்ந்த
மின்னொளி தன்னை விரும்புதல் நீக்குக;
என்னொளி வாளுக் கிரையா காதே'!
என்றான்,
"ஏஏ!" என்றனர் இருந்த மக்கள்!
வையத் திறல்தன் வாளை உருவினான்.
"படையின் தலைவனே பற்றுக இவனை"
என்று படைத்தலை வனுக்குக்
கட்டளை யிட்டான் மன்னன்!
எட்டிற்று மறித்திறல் இடிக்குரல் எங்குமே.

பாட்டு

மக்களின் உரிமைக்குத் தூக்குவீர் வாளை
மன்னரின் தனியாட்சி வீழ்க -- நாட்டு
மக்கள் உரிமைக்கு ...

   [திறல் நாட்டு மறவர் மக்களின் வாள்கள்
   சுழலுகின்றன. பெருநாட்டுப் படைத்தலைவனும்,
   அவனைச் சார்ந்த சில மறவர்களும்
   எதிர்க்கிறார்கள்.]

மக்கட் கடலின் மறைக் குமிழிகள்
மறுப்பவர் மாள்க மாள்கவே -- நாட்டு
மக்கள் உரிமைக்கு ...

   [எதிர்த்தோர் இறந்து படுகின்றனர். இரு
   மன்னரும், படைத்தலைவர்களும், ஆளும்
   இனத்தோரும் பிணிக்கப்படுகின்றனர்.]

தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்
சரிநிகர் எல்லோரும் என்றோம்.
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே!

   [பிணிக்கப் பெற்றவர் சிறை சேர்க்கப்
   பெற்றனர்.]











( 185 )




( 190 )




( 195 )




( 200 )




( 205 )




( 210 )




( 215 )




( 220 )




( 225 )




( 230 )




( 235 )





( 240 )







( 245 )




( 250 )




( 255 )




( 260 )




( 265 )




( 270 )




( 275 )




( 280 )




( 285 )




( 290 )




( 295 )




( 300 )




( 305 )




( 310 )




( 315 )




( 320 )




( 325 )








( 330 )










( 335 )

காட்சி 36

இடம்: நகர்கள், சிற்றூர்கள்.

நேரம்; மாலை.

உறுப்பினர்; முரசறைவோன்.
அகவல்

யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து:
"பூனைக்கண் போலும் பொரிக்கறிக் காக
ஆளுக் கிரண்டுகத் தரிக்காய் அடைக.
செங்கை இரண்டளவு சீரகச் சாம்பா
அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்
பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
ஒருகை யளவு பெறுகஒவ் வொருவரும்.
பாகற் புளிக்குழம்பும் பழமிள கின்சாறும்
ஆகத் தக்கன அடைக எவரும்!
ஆழாக் குத்தயிர் அடைக்காய் ஒவ்வொரு
வாழை இலை இவை வழங்குவோர் தெருத்தோறும்
விருந்தே நாளை விடியலில் அனைவரும்
அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே!"
இதுகேட்டுத் தெருத்தோறும் பொதுவில்லம்
எதுவெனக் கேட்டே ஏகினர்
அதுவது பெற்றே அடைந்தனர் வீட்டையே.









( 340 )




( 345 )




( 350 )




( 355 )
காட்சி 37

இடம்; மின்னொளி வீட்டு முன்வெளி,

நேரம்; விடியல்.

உறுப்பினர்; மின்னொளி, ஆண்டாள், விருந்தினர்,
வையத்திறல்

அகவல்

வீட்டெதிர் ஆண்டாள், மின்னொ ளிக்குத்
தலைவாரு கின்றாள். "தையல் மின்னொளியே
மன்னன் மகனை நீ மணந்த பின்னர்
என்னை மறப்பாயோ?" என்றாள் அன்னை.
"ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க,
வாழை இலையில் வார்த்தநெய் ஓடையில்
மிதக்கும் பல்கறிச் சோறு விழுங்கும்
மன்னன் மகனை மணக்கவே மாட்டேன

என்றாள் மின்னொளி. அன்னை திடுக்கிட்டு,
"முன்னர் உன்காதல் மொய்த்த தெவன்மேல்?"
என்று கேட்டாள் ஏந்திழை. "அம்மா
ஏழ்மை கண்ட இடமெல்லாம் காதல்
தாழ்மைமேல் என்உளம் தாவுதல் அன்றி
உடல்மிசைக் காதல் உற்றிலேன என்றாள்.
"அழகனை உன்உளம் அண்டிற்றோ" என்
அன்னை மின்னொளி தன்னைக் கேட்டாள்.
"அழகன் ஏழ்மையை அணுகிய தென்னுளம்
என்னுடல் அவனுடற் கில்லை" என்றாள்.
"மின்னொளி என்னுடன் விரைவில் வருக.
அருந்திட வேண்டும் விருநதென் றாள் தாய்.
இருவரும் எழுந்தார் விருந்துக்கு ஏகினார்.

வாகை நீழலில் மறித்திறல், பொன்னி
ஓகை யோடும் உண்டனர் விருந்தே!
அரசின் நீழலில் அழகனும் பிறரும்
அருந்தினர் இனிய விருந்து மகிழ்ந்தே!
வேங்கையின் நீழலில் வேறு பலப்பலர்
தாங்கா மகிழ்ச்சியில் தாம்உண் டிருந்தார்!
மாவின் நீழலில் வையத் திறலோன்
பாவை யைஎதிர் பார்த்திருந்தனன்.

வீட்டினர் யாரும் விருந்துண்ணு நிலை
பார்த்து வந்தாள் பாவை மின்னொளி,
மரத்து நீழலில் வாயார உண்பார்
சரிநிலை கண்டாள் தையல் மின்னொளி.
அரசின் நீழலில் அழகனைக் கண்டாள்
அழகன் வையனை அணுகுநீ என்றான்.
அழகன்பால் ஏழ்மை அறிகிலாள் மின்னொளி!

மாவின் நீழலில் வையனைக் கண்டாள்.
மன்னன் மகனை வையத் திறலிடம்
காணு கில்லாள்! கண்ட வையத்திறல்
அண்டையில் அமர்கென ஆவலில் அழைத்தான்.
கெண்டை விழியாள் கிட்ட அமர்ந்தாள்.
'கத்தரிப் பொரியலும், கரும்பாகற் குழம்பும்.
புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
மிளகின் சாறும், புளியாத தயிரும்
அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி,
உனக்கொன் றதிகம்' என்றுரைத்தான் வையன்,
'என்ன' என்றாள் மின்னொளி
சின்னதோர் முத்தம் தந்தான்.
அன்னதனோடே அருந்தினாள் விருந்தே!














( 360 )





( 365 )




( 370 )




( 375 )





( 380 )





( 385 )




( 390 )





( 395 )




( 400 )
காட்சி 38

இடம்; திறல்நாட்டு அரண்மணை.

நேரம்; மாலை.

உறுப்பினர்; அனைவரும்.

அகவல்

அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்;
செம்மறித் திறல் எழுந்து
கைம்மலர் கூப்பிக் கழறுவான் அங்கே:

எண்சீர் விருத்தம்

நாட்டினிலே குடியரசு நாட்டிவிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே;
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்;
கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே!

ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒழிப்போம்.
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழித்தால்!
திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும், கையில்
செங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந் தோரே!
பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப் பார்கள்
வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்;
வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்' என்றான்.

செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்
திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.
செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்
திறலுக்கும் நடைபெற்ற திருமணம்பா ராட்டி.
நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
நன்னிலையில சேர்ப்பதற்கும் திட்ட மிட்டார் மக்கள்.
'செம்மையுறுந் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்
திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே' என்றார்.









( 405 )







( 410 )




( 415 )





( 420 )




( 425 )




( 430 )