பக்கம் எண் :

இசையமுது
(இரண்டாம் பகுதி)

காதல்

இங்கே உண்டு்
எடுப்பு
   போய்க் கொண்டிருந்தார்கள்-மேலும்
   போய்க் கொண்டிருந்தார்கள்!
உடனெடுப்பு
   மாய்க்கு கொடுங்கதிர் மேற்குப் புறத்தினில்
   போய்க் கொண்டிருக்கையில் பொன்னனும்
   பொன்னியும் போய்க் கொண்டிருந்தார்கள்.


( 5 )
அடி

"காய்க்கும் பலாவிலும் கள்ளி மிலாரிலும்
பொன்னொளி காணும என்றாள்-அவன்,
"கேட்டதைப் பெற்றபின் இன்னுமத் தொல்லையைக்
கெஞ்சிற்று வஞ்சி" என்றான்! பின்னும்
                 போய்க் கொண்டிருந்தார்கள்.

"நல்லிதழ்த் தாமரைத் தேனுக்கு, வண்டுகள்
நாடுதல் பாரும என்றாள்-அவன்,
"செல்வரின் வீடு திறந்ததடீ பசி
தீரும் வரைக்கும என்றான்! பின்னும்
                 போய்க் கொண்டிருந்தார்கள்.

"செவ்வலரிக் கொரு தீமையுண்டா? கண்
சிவந்தது பாரும என்றாள்-அவன்,
"அவ்விடம் முல்லை சிரிப்பதும், தன் நொச்சி
ஆடலும் நோக்கி" என்றான்! பின்னும்
                 போய்க் கொண்டிருந்தார்கள்.

"வாழுதல் எண்ணிஇவ் வையம் வெறுத்தவர்
வந்தனர் பாரும என்றாள்-அவன்,
கீழுலகத் துள இன்ப மெலாம் இவர்
கேட்டதும் இல்லை என்றான்! பின்னும்
                 போய்க் கொண்டிருந்தார்கள்.











( 10 )






( 15 )









( 20 )
                     ஆடவந்தாள்

அவன் :
      ஆடற் கலைக்கழகு தேடப்பிறந்தவள்
      ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்;
            என்னோ டாட வந்தாள்;
            மகிழ்ந் தாட வந்தாள்! (ஆ)
வாடாத தாமரைக்கை வானில் ஒளி தெறிக்க
மங்காத செங்காந்தள் விரல்கள் பொருள் குறிக்க    (ஆ)

ஓடுபிளந்தசெம் மாதுளைபோல் உதட்டில்
உள்ளம் விளைத்தநகை மின்னவும்-கா
தோரத்து வண்டுவிழி ஓடைமலர் முகத்தில்
ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும்
காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை
காற்றோடு காற்றாகப் பின்னவும்
காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து
கடிதில் இடைதுவள ஆடியதோ என்னவும்    (ஆ)





( 25 )





( 30 )
அவள் :
பொன்மேனி காட்டிஎனை இன்பத்தில் ஆழ்த்தினான்
  பூரிப்பிலே எனையும் ஆடவைத்தான்
     தன்னோட பாட வைத்தான்
     மகிழ்ந் தாட வைத்தான்                    (பொ)

  தென்றல்வரும் சந்தனப் பொதிகைமேல் அருவிபோல்
  தேனான செந்தமிழ்ச் சிந்தொன்று பாடினான்.          (பொ)

புன்னைமலர்க் காம்பு போன்றதோர் சிற்றடிப்,பு
றாவும் மயிலும் களிஊன்றவே-அவை
பூணும் அசைவுகளிற் காணும் அழகினின்று
புதிய எண்ணம் ஒன்று தோன்றவே
அன்ன ஆடற்கலை உலகுக்களித்த தமிழ்
அரசர்பெருங் குடியைச் சேர்ந்தவன்
ஆடினேன் அவனோ டாடினேன் உற
வாடினேன் மகிழ்ந்து கூடினேன்.         (பொ)

( 35 )





( 40 )





( 45 )
திருமண வாழ்த்து

            ஒருமன தாயினர் தோழி-இந்தத்
            திருமண மக்கள் என்றும் வாழி!
            பெருமன தாகி இல்லறம் காக்கவும்
            பேறெனப் படும்பதி னாறையும் சேர்க்கவும்
                    ஒருமன தாயினர்   தோழி!

            மருமலர்த் தார்புனை மார்ப னோடும்
            மழைபோற் கூந்தல் அழகன்னப் பேடும்
            வருவார் என அந்தப் பஞ்சனை தேடும்!
            வந்து வரைவார் இன்ப இலக்கிய ஏடும்!
               ஒருமன தாயினர்       தோழி!

          இந்தநாள் போல எந்தநூற் றாண்டும்
          இன்பம் எனவே ஒவ்வொர் இமைப்போதும் தாண்டும்!
          செந்தமிழ் நாட்டிடைத் தொண்டுகள் யாண்டும்
          செயத்தக்க மக்களை இவர்பெற வேண்டும்
               ஒருமன தாயினர்      தோழி!



( 50 )








( 55 )







( 60 )

                 சோலைக் காட்சி

தலைவன்
தழுவின மலர்களை வண்டு பாராய்
தழுவின பறவைஇ ரண்டு மாதே.

தலைவி
அழகிய கொடிகள்து வண்டு மேலே
அணைவன கிளைகளை வந்து நேராய்
தலைவன்
மணமொடு பழகிய தென்றால் பாராய்
மகிழ்வன நமதிரு நெஞ்சம் மாதே

( 65 )
தலைவி
அணைவன குளிரினை அந்தி மாலை
அதிவிரை வினிலும் "தன்பு தேவை"
தலைவன்
புதியதோர் சுவையினை இன்று நாமே
"பொழுதொடு நுகர்வது நன்று நாதா"




தலைவியின் நினைவு

அன்றலர் செந்தாமரை-இவ்
வகிலமே புகழ்ந்திடும் அன்னவன் முகம்          (அன்)

   நின்றிருந்தேன் பின்புறமாய்
       வந்து சடையை இழுத்தான்-என்
   கன்னத்தையும் கிள்ளியே தன்
       கைக்கு முத்தம் கொடுத்தான்            (அன்)

  (என்) மனம் எனப்படும் மணி மேடையில்
       குடியேறித மன்னன்-என்
   வாழ்வெனப்படும் புறம் போக்கை
       வளமே புரிவானோ!
   கனி எனப்படும் என் தேனிதழ்
       இனிதே சுவைப்பானோ!
 அவன்-கலகல வெனத் தமிழ் பேசிட
       வருவானோ அன்னவன் முகம்          (அன்)

       கோடையிற் புனல் ஓடையைப் போல்
           குளிரக் குளிரத் தழுவி-இக்
       கோதை படும் வாதை எலாம்
           குணமே புரி வானோ

   வீடு தோறும் மாத ரெலாம்
       விளக் கேற்றிடும் மாலை
   வித வித விதக் கல்வி செய்ய
       வாரானோ அன்னவன் முகம்          (அன்)





( 75 )





( 80 )



( 85 )





( 90 )

                  வண்டும் மலரும்

அவள்

செழுமலர் இதழ் கடை திறந்தது
தேன்விலை கொள்ள ஏன் வரவில்லை
             வண்டே வண்டே
( 95 )
அவன்
எழும் பலபல எண்ணம் என்னும்
சூறைக் காற்று மோது கின்றதே
             பூவே பூவே



அவன்
எழும் பலபல எண்ணம் என்னும்
சூறைக் காற்று மோது கின்றதே
             பூவே பூவே
அவள்
கடலில் கலக்கும் காட்டு வெள்ளத்தை
காற்று மறிக்கும் ஆற்றல் உண்டே
             வண்டே வண்டே
அவன்
விடு நினைவை விளை பயனில்லை
வீணா சைகள் ஏனோ இனி
             பூவே பூவே
அவள்
இளமை குறைந்து போனதோ எதிர்
கால நம்பிக்கை ஏனிழந்தாய்
             வண்டே வண்டே

அவன்
களர் நிலத்தினில் விளைச்சலை எதிர்
காலம் கொடுக்க ஏலுமோ என்
பூலே பூவே

குறிப்பு : இது தலைவியை மலடி என்று தலைவன் வெறுத்துக்
கூறியதும், அவள் அமைவு கூறிக் கொஞ்சுவதும் ஆகும்.
( 105 )

ஏந்திழை
                  எடுப்பு

இன்பம் இன்பம் அடடா-அவ்
வேந்திழையைக் காணுந்தோறும்



                உடனெடுப்பு

அன்னம் நடக்கும் நடையும்-அருகே
அன்னாள் அழகிய நடையும்          (இ)

( 110 )
                  அடி


வஞ்சிக் கொடியும் அசையும்-அருகே
மங்கை சிற்றிடை அசையும்
நெஞ்சந் தன்னில் அதுதான்-காதல்
நெருப்பை இடடுப் பிசையும்        (இ)

  கோவைக் கனியும் சிவக்கும்-அருகே
  கோதை இதழும் சிவக்கும்
  யாவும் அவளுக் கீவேன்-எனநான்
  எண்ணிடும் எண்ணம் உவக்கும்    (இ)

  பச்சைக் கிளியும் கொஞ்சும்-அருகே
  பாவையின் உதடும் கொஞ்சும்
  மெச்சும் போதே அடடா-மங்கை
  மீதினில் மையல் மிஞ்சும்        (இ)

  விண்ணில் நிலவும் ஒளிரும்
  மெல்லியின் முகமும் ஒளிரும்
  கண்ணில், கருத்தில் அதுதான்-காதற்
  கவிதை காட்டி மிளிரும்.













( 120 )




( 125 )
கருத்துரைப்பாட்டு.
                    தலைவி கூற்று

பிரிவிடைமெலிந்த கிழத்தி சொல்லியது
செல்லார் என்றுநான் நினைத்திருந்தேன்-செல்லென்று
சொல்லாள் என்று தாம் நினைத் தகன்றார்       (செ)

   அல்லல் உடையதென் உள்ளம்
   அதுவன்றி மயக்கம் கொள்ளும்
   போல்லாத எங்கள் ஊக்கம் விளைத்தபோர்
   நல்ல பாம்பு கௌவிய தாயிற்றே          (செ)

   (குறுந்தொகை 43, ஒளவையார் பாட்டின் கருத்து)





( 130 )

கருத்துரைப்பாட்டு
.
தோழிக் கூற்று
                   கடிது வருவார் என்று ஆற்றுவித்தது

   அம்மா உனமேல்-அவர்
   அதி விருப்பம் உடையவர்          (அம்)

   செம்மையாய் விரைவில்
   திரும்பினும் திரும்புவார்
   திரும்பி வந்தின்பம்
   நல்கினும் நல்குவர்                 (அம்)

  அகன்றவர் சென்ற வழியில்
  ஆண்யானை, பெண்யானையின் பசியை
  நின்ற யா'மரம் உரித்தூட்டல் காண்பார்
  நின்நிலை எண்ணி இன்றே திருப்புவார்    (அம்)

 (குறுந்-37 பாலைபாடிய பெருங் கடுங்கோ பாடற் கருத்து)





( 135 )





( 140 )

கருத்துரைப்பாட்டு
தலைவி கூற்று
பொருள்வயின் பிரிந்த இடத்துத் தலைவி ஆற்றாமை
         கண்டு தோழி சொன்னது

     நினையாரோ தோழி?
         தினையேனும் எனை
       நினையாரோ தோழி?
     நினைவா ராயின் எனை யாள வருவார்!
     நினைக்கிலார்! இனியேனும்என் நெஞ்சம் களிக்க
    நினையாரோ தோழி?

  தீவேடன் அன்பின் இரும்புமுனை தீட்டும் ஒலிபோல்
  செங்காற் பல்லி துணையினை அழைப்பது கேட்டும்
  ஆய அக் கள்ளிக்காட்டு வழிச்செல்பவர் மீட்டும்
  அணுகாரோ அணுகாவிடில் அதுவென் நெஞ்சை வாட்டும்
         நினையாரோ தோழி?

(குறுந்-16. பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடற் கருத்து



( 145 )




( 150 )




கருத்துரைப்பாட்டு.

தலைவன் கூற்று
இயற்கைப் புணர்ந்தபின் பிரிவர் என்று
        கருதி அஞ்சிய தலைமகட்குத் தலைவன் கூறியது

        என் தாய் யாரோ!
        உன் தாய் யாரோ-பெண்ணே
    என் தந்தை உன் தந்தை உறவினர் அல்லரே

இன்றிங் கேஉனை எவ்வா றடைந்தேன்?
        நீஎன்னை எவ்வா றறிந்தாய்?-நாம்
        செம்மண் நிலமும் பெய்த மழையும்போல்
        சேர்ந்தோம் அடடா இன்பம் ஆர்ந்தோம் (எ)

        இரண்டு நெஞ்சில் வீறிட்ட காதலே
இருவரை யும்சேர்த்த திவ்வையமீதே
        மருண்ட மக்கள் மாப்பிள்ளை பெண்களை
    மணத்தில் கூட்டுவ தாக எண்ணுவார் (எ)

  (குறுந்தொகை 40 செம்புலப்பெயனீரார் பாடற் கருத்து)




( 155 )





( 160 )





( 165 )