குயிலிசை ஒருநாள் கேட்கவில்லை - எனில் குளிர்செவி யிரண்டும் எரிவதில்லை; மயில்நட மொருநாள் பார்க்கவில்லை - எனில் மணிவிழி யிரண்டும் அழுவதில்லை; பயின்றிட ஒருநாள் செல்லவில்லை - எனில் படிப்பே அத்துடன் முடிவதில்லை; உயிரே! உனைத்தினம் தழுவவில்லை - எனில் உலகே எனக்கு முடிவதுமேன்? ‘தமிழ்நாடு’ 13-5-62 |