Untitled Document | | தத்தம் மக்களும் தாமுமே என்றும் பெற்றுப் பெருகிப் பெருங்குடி யாகி வாழக் கருதுவர்; வகுத்திட லென்? அவர் வாயிற் படியில் வாடி வணங்கி வயிற்றிற் கின்றிநா வறண்டு, 'தண்ணீர் தண்ணீர்' என்று தவித்துத் தவித்து, வாணா ளெல்லாம் வருந்தி நொந்தேன். குடிக்க நீரும் கொடுத்திலர் பாவிகள். விண்ணி லிருப்பினும் மண்ணில் யான்படும் வருத்தமும் வாட்டமும் கண்ட அவ் வானம் அளித்த தமுதம்; ஆர வுண்டனன்; விசும்பில் துளிகள் வீழி னல்லால் பசம்புல் தலையிப் பாரிற் காணுமோ? மனிதரும் போற்ற வாழ்வமோ யாமும்? கேளீர் கதைஇனும்; கிடைத்த நீரை அருந்திப் பலநாள் அயர்வும் நீங்கித் தெளிந்து நிமிர்ந்தேன். சிறிதென் உடலில் பச்சையும் பிடித்தது; பார்த்தனர் பாவிகள். தரிக்கிலர் உள்ளம்; தழைக்கும் தலையைக் காலால் மித்தனர்; கழுத்தையும் அறுத்தனர்; ஆட்டையும் மாட்டையும் அடித்து மேய்த்தனர். படர்ந்த இடமெலாம் பாழே யாக்கினர். இருந்த இடமும் இல்லா தியற்றினர். உயிரும் உடலும் குறுகி ஒருசிறு வேராய்த் தலையுள் வெகு நாளாக ஒளித்திருந்தேன். அவ் வுறைவிடந் தேடி வான்மழைத் தோழன் வந்தெனனக் கண்டு, 'மனிதன் செயலால் வலியிழந் தனையோ? என்துணை யிருக்க இடர்உனக் குண்டோ? அறிவிலி போலும்நீ! அஞ்சேல், அஞ்சேல்; யாவையும் காப்பவன் ஈசன்' என்றெலாம் தேற்றிய மொழிஎனக்கு ஊற்றமும் உறுதியும் பெரிதும் அளித்தது. பெயர்த்தும் மெலமெலத் | |
|
|