| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 377 |
Untitled Document | 1730 | | ஈசன் அருளைப் பெறுவதிலும் இடையே தரகர்க்கு இடமுண்டோ? பேசின், இவர்செய் சூதுலகில் பெரிய சூதென் றறியாயோ? பூசு நீறும், கண்டிகையும் புரிமுந் நூலும் பூண்டதலால், காசு பணத்தின் ஆசையவர் கடந்த தில்லை இல்லையடா! | 61 |
| 1731 | | தேடும் ஈசன் திருவடியிற் சேர வழியொன் றுண்டு, அதனை, நீடு வழியாய்ச் சிறுவழியாய் நிகழச் செய்வோன் நீயேயாம்; நாடுங் கோயில் மடங்களெலாம், நம்பன் அடியார் அவ்வழியில் கூடித் தங்கும் நீழல்களாம்; குடிக்கும் தண்ணீர்ப் பந்தல்களாம். | 62 |
| 1732 | | மண்ணை மண்ணில் உதறிவிட்டு, மாசு மறுவொன் றில்லாமல், விண்ணிற் செல்ல வல்லதெனில், விளங்கும் ஆன்மா, இப்புவியில் நண்ணி இந்த நாள்வரையும் நலிந்து சிறையில் இருந்ததனை எண்ணி வெட்கம் அடையாதோ? இதன்மேல் வெட்கம் வேறுண்டோ? | 63 |
| 1733 | | காசு பணத்தைக் கண்டவர்ஆர்? கண்டு கறங்கிச் சுழல்பவர் ஆர்? பூசை பலவும் புரிபவர் ஆர்? புரிந்து பிழைகள் செய்பவர் ஆர்? நாச நரகை வகுத்தவர் ஆர்? நரகை எண்ணி நலிபவர்ஆர்? ஈச னருளை அறியாத ஏழை மனித! நீயலவோ? | 64 | |
|
|