பக்கம் எண் :

பாரதிதாசன் ஆத்திசூடி

(உரை)
(பாயிரம்)   நவில் இனப்பற்றும், நாட்டுப் பற்றும்
   வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
   இல்லையாயின் இன்றிவ் வுலகில
   தொல்லை அணுகுண்டு, தொகு கொலைக் கருவி
   பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
   அகற்றல் எப்படி? அமைதி யாங்ஙனம்?
   உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
   நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல
 
 ஆத்திச்சூடி போறலின்
 ஆத்திச்சூடிஎன்றடைந்தது பெயரே

   உரை : நவில்-சிறப்பித்துச் சொல்லுகின்ற, இனப்
பற்றும்-தன் இனப்பற்றும், நாட்டுப்பற்றும்-தன் நாட்டின
மேல் உண்டாக்கிய பற்றும், வையப்பற்றை-உலகின் மேல்
வைக்கும் பற்றை வளர்க்கும் நோக்கத்தன-வளர்க்கும் நோக்க
முடையவை, இல்லை ஆயின்-இல்லாவிட்டால், இன்று இவ்
வுலகில்-இந்நாளில் இந்த உலகில், தொல்லை அணுக்குண்டு-
தொல்லைதரும் அணுக்குண்டும், தொகுகொலைக்கருவி-
சேர்க்கின்ற துப்பாக்கி முதலிய ஆயுதங்களும், பொல்லா
நச்சுப் புகைச்சல்-பொல்லாதன ஆகிய நச்சுப் புகையும்,
இவற்றை-ஆகிய இவற்றை, அகற்றல் எப்படி-உலகை விட்டு
ஒழிப்பது எப்படி முடியும்? அமைதியாங்ஙனம்-உலக அமைதி
எவ்வாறேற்படும்? உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று-
உலகில் ஒரு தனிப் பொதுவான ஆட்சி, நிலவுதல் கருதி-நிலை
பெறவேண்டும் என்பதை எண்ணி, நிகழ்த்திய இந்நூல்-
சொல்லியதான இந்த நூல், ஆத்திச்சூடி போறலின்-ஒளவை,
ஆத்திச்சூடி போன்று இருந்ததலால், ஆத்திச்சூடி என்று-
ஆத்திச்சூடி என, அடைந்தது பெயரே-பெயர் அடைந்தது.

   கருத்துரை : உலகுக்கு ஒரேயொரு தனியாட்சி ஏற்பட
வேண்டும் என்ற கருத்தில் இயற்றிய இந்த நூல், ஒளவை
ஆத்திச்சூடி போல் இருந்தலால் ஆத்திச்சூடி என்னும்
பெயரை அடைந்தது.

   ஆய்வுரை : பெயரே-ஏ ஈற்றசை, இந்நூல்-எழுவாய்,
அடைந்தது-பயனிலை, பெயர்-செயப்படுபொருள்.
( 5 )
( 10 )

( 15 )
( 20 )
( 25 )

( 30 )


1. அனைவரும் உறவினர்


   உரை : அனைவரும் - உலகிலுள்ள எல்லோரும்,
உறவினர்-உறவினராவார்:

   கருத்துரை : உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர்.

   ஆய்வுரை : அனைவரும்-எழுவாய், உறவினர்-பயனிலை.
இதில் செயப்படுபொருள் இல்லை.
( 35 )2. ஆட்சியை பொதுமை செய்

   உரை : ஆட்சியை-பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள
ஆட்சி அனைத்தையும், பொதுமை செய்-பொதுவான ஒரே
ஆட்சி ஆக்கு.

   கருத்துரை : உலகுக்கு ஒரே ஆட்சி வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா - எழுவாய் செய்-பயனிலை
ஆட்சி-செய்ப்படு பொருள்.
( 40 )


( 45 )


3. இசை மொழி மேலதே

   உரை : இசை-இசை (இராகம்) மொழி-அது வரும்
மொழியினால், மேலதே-மேன்னை யடைவது.

   கருத்துரை : இசையானது அது பெற்று வரும், சொற்
களினால்தான் மேன்மையடையும்.

   ஆய்வுரை : ஏ-ஈற்றசை; இசை-எழுவாய்; மேலது-
பயனிலை; மொழி-மூன்றாம் வேற்றுமைத் தொகை.

   சிலர் குழல் யாழ் முதலியவைகளின் இசையில் மொழி
யில்லாவிடினும் அவ்விசையே தனியாக மக்கட்கு இன்பந்தர
வில்லையா என்று கேட்பார்கள். முதலில் சொல்லொடு
தோன்றிச் செல்வாக்குப் பெற்றதால்தான், பின்னர்
அவ்விசை மட்டும் குழலின் வெளிவந்து முன்பெற்ற
சொற்களை நினை வுறுத்தி இனிமை செய்கிறது.

   இசை தனியே இனிமை பயக்கும் எனில், இசைத்
தட்டில் கேட்கப்படும் சீனர் இசை நமக்கேன் இனிமை
செய்யவில்லை அது சொல்லை நமக்கு நினைவு
படுத்தவில்லை யாதலால் தானே.


( 50 )

( 55 )

( 60 )


4. ஈதல் இன்பம்


   உரை : ஈதல்-(பொருளையே உழைப்பையோ) பிறர்க்குக்
கொடுப்பது, இன்பம் ஈந்தோர்க்கு இன்பமாகும்.

   கருத்துரை : பொருளையோ உழைப்பையோ பிறர்க்குக்
கொடுத்தல் இன்பம்.

   ஆய்வுரை : ஈதல்-எழுவாய், இன்பம்-பயனிலை, செயப்
படுபொருள் இல்லை.

   "ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல என்றார்
வள்ளுவர்.


( 65 )
5. உடைமை பொதுவே

   உரை : உடைமை-உலகின் நிலையியல் பொருள்,இயங்கியல்
பொருள், மக்கள் உழைப்பின் பயன் ஆகிய உடைமை
அனைத்தும், பொதுவே-உலக மக்கட்குப் பொதுவே.

   கருத்துரை : உலகப் பொருளும் உலக மக்களின் உழைப்
பின் பயனும் எல்லார்க்கும் பொதுவாக்கப்படுதல் முறை.

   ஆய்வுரை : ஏ-தேற்றம், உடைமை எழுவாய்; பொது-
பயனிலை. நூறுபேருள்ளார் நூறு காணி உண்டு. அந்நிலத்தில்
நூறு வீடுகள் மக்கள் உழைப்பின் பயனாய் ஏற்பட்டவை,
நூறு கலம் நெல் விளைவுண்டு. எனவே, ஒருவனுக்கு ஒரு
வீடும் ஒரு கலம் நெல்லும் உட்பட ஒரு காணி நிலம்
விழுக்காடு பெற உரிமையுண்டு.

( 70 )


( 75 )6. ஊன்றுளம் ஊறும்

   உரை : ஊற்று-தான் பெற்ற கல்வியிலேனும் தனக்குள்ள
அறிவிலேனும் ஊன்றுகின்ற, உளம்-உள்ளமானது, ஊறும்-
கருத்துக்களைப் பொழியும்.

   கருத்துரை : ஊன்றி நினை; கருத்துக்கள் தோன்றும்.

   ஆய்வுரை : உளம்-எழுவாய், ஊறும்-பயனிலை, செயப்
படுபொருள் இல்லை, ஊன்று உளம்-வினைத்தொகை.
( 80 )


( 85 )


7. எழுது புதுநூல்


   உரை : புதிய நூல்-கருத்திலே புதியதான நூற்களை,
எழுது-நீயாக எழுது.

   கருத்துரை : இருக்கும் வைணவம், சைவம், முதலியவை
பற்றி நூற்களின் கருத்தை அமைத்தே நூல் இயற்றுவது
பயனற்றவேலை.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், இதில் நீ என்ற
சொல் தோன்றியிருக்கவில்லையல்லவா? எழுது-பயனிலை,
நூல்-செயப்படு பொருள் எழுது புதிய நூல் என்பதைப் புதிய
நூல் எழுது என்று பொருள் சொல்லும் போது மாற்றிச்
சொல்வது, "மொழிமாற்றுப் பொருள் கோள எனப்படும்.

( 90 )

( 95)


8. ஏடு பெருக்கு


   உரை : ஏடு-நாள், கிழமை, திங்கள்தோறும் வரும்
செய்தி, கட்டுரைத் தாள்களை, பெருக்கு-மிகுதியாக்கு.

   கருத்துரை : வெளிவரும் ஏடுகள் மிகுதியடையவேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், பெருக்கு-பயனிலை,
ஏடு-செயப்படுபொருள்.


( 100 )

9. ஐந்தொழிற்கிறை நீ

   உரை : நீ-நீதான், ஐந்தொழிற்கு-இயற்கையில் அமைந்த
வற்றைக் கொண்டு இயற்றப்படும் ஆக்கல், காத்தல்,
இயற்றல், மாற்றல், அருளல் ஆகிய ஐந்து
தொழில்கட்கும், இறை-உடையவன்.

   கருத்துரை : ஆவதும் அழிவதும் உன்னால் ஆம்.

   ஆய்வுரை : நீ-எழுவாய்; இறை-பயனிலை, செயப்படு
பொருள் இல்லை.

   ஆக்கல் முதலிய ஐந்தும், ஆக்கல், காத்தல்,
அழித்தல் ஆகிய மூன்றில் அடக்கலும் உண்டு. ஆக்கல்
-தாயின் துணையால் தாய் மக்களை ஆக்கலும்
தந்தையின் துணையால் தாய் மக்களை ஆக்கலும்,
பொருள் ஆக்கலும் ஆம்.

   காத்தல்-மக்களை ஓம்புதலும்; பொருளைக் கெடாதிருத்த
லும், அழித்தல்-அனைவரும் உறவினர், ஆட்சியைப்
பொதுமை செய் முதலியவற்றிற்கு அப்பாலாகிய
கொள்கைகளை அறிவுரையால் இயலாது செய்வது.

( 105 )


( 110 )

( 115 )

10. ஒற்றுமை அமைதி

   உரை : ஒற்றுமை-உலக மக்களிடம் ஏற்படும் மன
வொற்றுமைதான், அமைதி-அமைதி எனப்படும்.

   கருத்துரை : மனவொற்றுமைதான் உலக அமைதியாகும்.

   ஆய்வுரை : ஒன்றுமை-எழுவாய், அமைதி-பயனிலை.

11. ஓவியம் பயில்

   உரை : ஓவியம்-ஓவியத் தொழில், பயில்-நீ பயின்று
கொள்.

   கருத்துரை : ஓவியப் பயிற்சி பெறு.

   ஆய்வுரை : ஓவியம்-சித்திரம், நீ-தோன்றா எழுவாய்;
பயில்-செயப்படுபொருள்.( 120 )

12. ஒளவியம் பெருநோய்

   உரை : ஒளவியம் - ஒகுவனுக்குள்ள பொறாமை, பெரு
நோய் - அவனுக்குத் தொழுநோய் போல் துன்பந் தருவது.

   கருத்துரை : பொறாமை துன்பந் தருவதாகும்.

   ஆய்வுரை : ஒளவியம் - எழுவாய், பெருநோய்- பய
னிலை, பெருநோய் - குட்டநோய்.( 120 )
13. கல்லார் நலிவர்

   உரை : கல்லார் - படிக்காதவர், நலிவர் - நலிவடை
வார்கள்

   கருத்துரை : கல்வி வேண்டும்.

   ஆய்வுரை : கல்லார்-எழுவாய், நலிவர்-பயனிலை. படிப்
பதால் மடமைபோம். மடமை போகவே நல்லதன் நலமும்
தீயதன் தீமையும், உலகின் உண்மையும் ஏற்படும்.( 130 )


( 135 )

14. காற்றினைத் தூய்மை செய்

   உரை : காற்றினை - உன்னை அணுகும் காற்றை,
தூய்மை செய்-நீ தூய்மையாக்கிக் கொள்.

   கருத்துரை : காற்றைத் தூய்மைப்படுத்து.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், தூய்மை செய்-பய
னிலை, காற்று-செயப்படுபொருள். காற்றைத் தூய்மை
செய்வதாவது, தான் வாழும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக
அழு யவை. கழிவடை சேராது காத்தல்.

( 140 )

15. கிழிப்பொறி பெருக்கு

   உரை : கிழி-துணி நெய்யும். பொறி-பொறிகளால் ஆன
ஆலைகளை, பெருக்கு-பெருகச் செய்.

   கருத்துரை : துணி ஆலைகளைப் பெருக்கு.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், பெருக்கு-பயனிலை
பொறி-செயப்படுபொருள்.


( 145 )

16. கீழ்மகன் உயர்வெனும்

   உரை : கீழ்மகன் - அறிவில்லாதவன், உயர்வு எனும்-
தான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்வான்.

   கருத்துரை : பிறப்பில் உயர்வு பேசுவோன் அறிவிலி.

   ஆய்வுரை : எனும்-என்னும் என்பதன் தொகுத்தல்.


( 150 )

17. குள்ள நினைவு தீர்

   உரை : குள்ள நினைவு குறுகிற - நினைவுகளை, தீர்-
நீக்கு

   கருத்துரை : குறுகிய நினைவு வேண்டாம்

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், தீர்-பயனிலை
நினைவு-செயப்படுபொருள், குறுகிய நினைவானது உலகில்
மதம், சாதி வளர்வதற்குரிய தாழ்ந்த கருத்து.
( 155 )

18. கூன் நடை பயிலேல்

   உரை : கூன்-கூனிய, நடைபயிலேல்-நடக்கப் பழகாதே.

   கருத்துரை : நிமிர்ந்து நடக்க வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய். பயிலேல்-பய
னிலை, நடை செயப்படுபொருள்.( 160 )

19. கெடு நினை வசுற்று

    உரை : கெடு-பிறர் கெட்டுப் போவதற்குக் காரணமான,
நினைவு அகற்று-நினைப்பை நீக்கு

    கருத்துரை : பிறரைக் கெடுக்க எண்ண வேண்டாம்.

    ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய். அகற்று-பயனிலை,
கெடுநினைவு-செயப்படுபொருள்.
( 165 )

20. கேட்டு விடை இறு

   உரை : கேட்டு-உன்னிடம் பேசுவோரின் பேச்சை
கொண்டு, விடை இறு-பதில் கூறு.

   கருத்துரை : பிறர் சொல்லை முழுவதும் வாங்கிக்
கொண்டு விடை கூறு

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய். இ்று-பயனிலை.
விடை-செயப்படுபொருள்


( 170 )

21. கைம்மை அகற்று

   உரை : கைம்மை-கொழுநன் இறந்தால் பெண்வேறொரு
வனை மணந்து கொள்ளாமல்வாழ்நாளைக்கழிக்க
வேண்டும் என்ற நிலைமையை, அகற்று-நீ நீக்கி அவள்
மறுமணம் செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்து.

   கருத்துரை : கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளும்
நிலை ஏற்பட வேண்டும்

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், அகற்று-பயனிலை,
கைம்மை-செயப்படுபொருள்.
( 175 )


( 180 )

22. கொடுத்தோன் பறித்தோன்

   உரை : கொடுத்தோன்-தனக்கு உள்ளதுபோக, மிகுதி
யாய் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தவன். பறித்தோன்-
பிறர்க்குரிய பொருளை வாணிகத்தாலும் வஞ்சத்தாலும்
முன்பு பறித்தவனே.

   கருத்துரை : உடையாரின் பெருஞ்செல்வம் இல்லா
ருடையது.

   ஆய்வுரை : கொடுத்தோன்- எழுவாய், பறித்தோன்-பய
னிலை. வாணிகம் என்பது, ஒருவகைச் சுரண்டல்; மக்கள்
நிகர் என்னும் குடியாட்சியில் இது இராது.

( 185 )


( 190 )

23. கோனாட்சி வீழ்த்து

   உரை : கோனாட்சி-ஒருவன் தான் விரும்பியபடி ஆளும்
ஆட்சியை, வீழ்த்து-வீழ்த்தி குடியாட்சியாக்கு.

   கருத்துரை : குடியாட்சி வேண்டும்

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், வீழ்த்து-பயனிலை,
கோனாட்சி-செயப்படுபொருள்.
( 195 )
24. சதுர் பிறர்க்குழைத்தல்

   உரை : பிறர்க்கு உழைத்தல்-பிறர் நலத்திற்கு உழைப்
பது, சதுர்-சதுர்ப்பாடாம்.

   கருத்துரை : பிறர்க்குழைக்கும் ஆற்றல் பெறவேண்டும்.

   ஆய்வுரை : உழைத்தல்-எழுவாய், சதுர்-பயனிலை.( 200 )
25. சாதல் இறுதி

   உரை : சாதல்-உடல் உயிர் பிரிதல், இறுதி-ஒருவனின்
முடிவு.

   கருத்துரை : ஒருவனுயிர் உடல் பிரிந்தபின் அவன்
மற்றும் ஏதோ நிலைமைக்குள்ளாகிறான் எனல் இல்லை.

   ஆய்வுரை : சாதல்-எழுவாய், இறுதி-பயனிலை, மறு
பிறப்பு இல்லை என்பது, இதனால் பெறப்பட்டது.
( 205 )


26. சிறார் நலம் தேடு

   உரை : சிறார் நலம்-ஆண் பெண் ஆகிய குழந்தைகளின்
நன்மையை, தேடு-ஏற்படுத்தும்.

   கருத்துரை : குழந்தைகளின் பிற்கால நன்மையைத் தேடு.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், தேடு-பயனிலை,
நலம் செயப்படுபொருள்.

   சிறார் நலம் தேடுவது, அவர்க்குக் கல்வி நலம்
கிடைக்கச் செய்வதும், பின்னாளில் செல்வம் முதலிய
எவற்றிலும் நிகர் உரிமை இருக்குமாறு உலக நிலையை
மாற்றியமைக்கப் போராடுவதும் ஆகும்.( 210 )( 215 )


27. சீர்பெறல் செயலால்

   உரை : சீர்பெறல்-ஒருவன் சீரடைவது, செயலால்-தன்
செயலால் ஆம்.

   கருத்துரை : ஒருவன் சீர் அடைவதற்கு முற்பிறப்பு
நல்வினையும், தெய்வமும் காரணம் என்ற மடமை ஒழிய
வேண்டும்.

   ஆய்வுரை : சீர்பெறல்-எழுவாய், ஆம் என ஒரு
பயனிலை வருவிக்க.( 220 )( 225 )

28. சுவையுணர் திறங்கொள்

   உரை : சுவை உணர்-சுவை உணர்கின்ற, திறம் கொள்-
திறமை பெறு.

   கருத்துரை : சுவையுண்வு தேவை.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், கொள்-பயனிலை,
உணர்திறம்- செயப்படுபொருள்.

   உலக நிகழ்ச்சியிலும், கவிதையிலும் மேம்பட்டு வரும்
நகை முதலிய ஒன்பது சுவையும் உணர் திறம் இன்றேல்
கற்றதனால் ஆயபயன் என்ன?
( 250 )( 235 )

29. சூழ்நிலை நோக்கு

   உரை : சூழ்நிலை-வினை செய்வதற்கு, அன்றுள்ள நிலை
மையை, நோக்கு-ஆராய்ந்து தொடங்கு.

   கருத்துரை : வினை செய்ய அன்றைய நிலை ஆராயப்பட
வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், நோக்கு-பயனிலை,
சூழ்நிலை-செயப்படுபொருள்.


( 240 )


30. செல்வம் நுண்ணறிவாம்

   உரை : நுண்ணறிவு-நுண்ணறிவால், செல்வம் ஆம்-
செல்வம் தழைக்கும்

   கருத்துரை : நுட்ப அறிவு பெற வேண்டும்

   ஆய்வுரை : செல்வம்-எழுவாய், ஆம்-பயனிலை( 245 )
31. சேய்மை மாற்று

   உரை : சேய்மை விரிந்த உலகில் உனக்கும் பிறர்க்கும்
உள்ள தொலைவை, மாற்று-புதுமை ஊர்தி, தொலையறி
கருவி ஏற்படுத்துவதால் இல்லாமற் செய்.

   கருத்துரை : புதிய ஊர்திகள், தொலையறி கருவிகள்
உண்டாக்க வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், மாற்று-பயனிலை,
சேய்மை-செயப்படுபொருள்.( 250 )


( 255 )

32. சைகையோடு ஆடல்தேர்

   உரை : சைகையோடு-அபிநயத்தோடு கூடிய. ஆடல்-
ஆடற்கலையை, தேர்-பயில்.

   கருத்துரை : அபிநயத்துடன் ஆடல் பயில வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், தேர்-பயனிலை,
ஆடல்-செயப்படுபொருள்.( 260 )

33. சொற்பெருக்காற்றல் கொள்

   உரை : சொற்பெருக்காற்றல் - சொற்பெருக்காற்றும்
ஆற்றலை கொள்-அடை..

   கருத்துரை : சொற் பெருக்காற்றும் திறன் வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், கொள்-பயனிலை,
ஆற்றல், செயப்படுபொருள்.
( 265 )
34. சோர்வு நீக்கு

   உரை : சோர்வு-உன் சொல்லிலும் செயலிலும் பிழை
பாடு, நீக்கு-ஏற்படாமல் விழிப்போடிரு.

   கருத்துரை : சொல்லிலும் செயலிலும் பிழை நேரல்
ஆகாது.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், நீக்கு-பயனிலை.
சோர்வு-செயப்படுபொருள்.( 270 )


( 275 )

35. தளையினைக் களைந்துவாழ்

   உரை : தளையினை-மதம், சாதி, பிறர் ஆட்சி ஆகிய
அடிமைத்தனத்தை, களைந்து-நீக்கி, வாழ்-நல்வாழ்வை
நிலை நிறுத்து.

   கருத்துரை : அடிமை நிலை நீக்க வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், வாழ்-பயனிலை.

( 280 )

36. தாழ்வுஅடிமை நிலை

   உரை : தாழ்வு - மற்றவரைவிடச் செல்வ நிலையில்
உனக்கு ஏற்பட்டுள்ள தாழ்வானது, அடிமை நிலை-உனக்கு
உள்ள அடிமை நிலையேயாம்.

   கருத்துரை : முழுவிடுதலை பெற்றவன் தாழ்வு அடைய
மாட்டான்.

   ஆய்வுரை : தாழ்வு-எழுவாய், அடிமை நிலை-பயனிலை.( 285 )

37. திருஎனல் உழு பயன்

   உரை : திருஎனல்-செல்வம் என்று சொல்லப்படுவது,
உழுபயன்-உழுவதன் விளைவுதான்.

   கருத்துரை : உழவால் பெறும் செல்வமே செல்வம்.

   ஆய்வுரை : எனல் - எழுவாய்; பயன் - பயனிலை,
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்பதறிக.
( 290 )

38. தீங்கனிவகை விளை

   உரை : தீங்கனி-மா, பலா, வாழை ஆகிய முக்கனியும்,
வகை-இனிமையும் பயனும் தருவதில் அவற்றின் இனமாகிய
விளா, கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள் முதலியவும், விளை-
உண்டாக்கு.

   கருத்துரை : பயன் மரங்களை உண்டாக்குதல் வேண்டும்.

   ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய், வினை-பயனிலை,
தீங்கனிவகை-செயப்படுபொருள்.
( 295 )

( 300 )

39. துன்பம் இன்பத்தின் வேர்

   உரை : துன்பம்-கோணிய அரசியல் காரணமாக உனக்
கேற்பட்ட துன்பமே, இன்பத்தின் வேர்-அக்கோணிய
அரசியலை மாற்றி அதனாற் பெறப்போகும் இன்ப
வாழ்வுக்குக் காரணம் ஆகும்.

   கருத்துரை : துன்பம், எழுச்சி தருவதால் அத்துன்பம்
இன்பத்திற்குக் காரணமாகிறது.

   ஆய்வுரை : துன்பம்-எழுவாய், வேர்-பயனிலை.
( 305 )


( 310 )

40. தூய நீராடு

   உரை : தூய-தூய்மையான (அழுக்கற்ற), நீர்-நீரில்,
ஆடு-உடல் தூய்மை செய்.

   கருத்துரை : அழுக்குத் தண்ணீரில் மூழ்குதல் கூடாது.

   ஆய்வுரை : நீ-எழுவாய், ஆடு-பயனிலை.

( 314 )