பக்கம் எண் :

இளைஞர் இலக்கியம்

தாலாட்டும் துயிலெழுப்பும்

1. தாலாட்டு
(ஆண்)


யானைக் கன்றே தூங்கு-நீ
யாதும் பெற்றாய் தூங்கு
தேனே தமிழே தூங்கு-என்
செங்குட்டு வனே தூங்கு
வானவ ரம்பா நீயே-மிக
வளைத்துப் பார்க்கின் றாயே
ஆனஉன் விழியை வைத்தே-உன்
அழகிய இமையால் சாத்து.




( 5 )



  2. தாலாட்டு
 (பெண்)


பட்டுப் பாப்பா தூங்கு-நீ
பாலும் குடித்தாய் தூங்கு
மொட்டில் மணக்கும் முல்லை-என்
முத்தே என்ன தொல்லை
சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்
பிட்டும் தருவேன் தூங்கு-என்
பெண்ணே கண்ணே தூங்கு!


( 10 )




( 15 )

3. தாலாட்டு
(பொது)

தொட்டிலில் ஆடும் கிளியே-என்
தூய தமிழின் ஒளியே
கட்டிக்கரும்பே தூங்கு-முக்
கனியின் சாறே தூங்கு
தட்டிற் பாலும் சோறும்-நான்
தந்தே னேநாள் தோறும்
சுட்டப் பத்துடன் வருவேன்-நீ
தூங்கி எழுந்தால் தருவேன்.



( 20 )


 4. பள்ளி எழுச்சி
(பெண்)
    இன்னந் தூக்கமா? பாப்பா
    இன்னந் தூக்கமா?

பொன்னைப் போல வெய்யிலும் வந்தது
பூத்த பூவும் நிறம்கு றைந்தது
உன்னால் தோசை ஆறிப் போனதே
ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே

    இன்னந் தூக்கமா? பாப்பா
    இன்னந் தூக்கமா?

காலைக் கடனை முடிக்க வேண்டும்
கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்
நீலக் கூந்தல் வார வேண்டும்
நினைத்தது போல் உடுத்த வேண்டும்

    இன்னந் தூக்கமா? பாப்பா
    இன்னந் தூக்கமா?

நேரத் தோடு போகின்றார்
நிறையப் பெண்கள் தெருவில் பார்
காரியத்தில் கண்ணாயிரு
கைகாரப்பெண்ணாயிரு

    இன்னந் தூக்கமா? பாப்பா
    இன்னந் தூக்கமா?

( 25 )





( 30 )






( 35 )





( 40 )


5. கை வீசல்

கைவீ சம்மா கைவீசு
கடலை வாங்கலம் கைவீசு
நெய் உருண்டை கைவீசு
நிறைய வாங்கலாம் கைவீசு
பொய்யா சொல்வேன் கைவீசு
போளி வாங்கலாம் கைவீசு
வெய்யில் போகும் கைவீசு
வெளியில் போகலாம் கைவீசு

( 45 )




( 50 )

6. தட்டாங்கி

தட்டாங்கி    
தலைமேலே  
பட்டாலே    
பஞ்சாலே    
செட்டாக    
சீராக       
தட்டுநீ      
தட்டாங்கி    

தட்டாங்கி
தாழம்பூ
சட்டை
சல்லடம்
அணிந்து
முந்தி
தட்டு
தட்டாங்கி


( 55 )





( 60 )

 7. பள்ளி எழுச்சி
  (பெண்)


இன்னந் தூங்கு தம்பி-நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.

சின்னக் குளத்தில் மட்டை போல
செற்றிப் போட்ட கட்டை போலத்
தன்னை மறந்து தலைய ணைமேல்
ஒட்டிக் கொண்ட அட்டைபோல

இன்னந் தூங்கு தம்பி-நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.

எழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்
என்னைச் சட்டை பண்ண வேண்டாம்
பழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்

இன்னந் தூங்கு தம்பி-நீட்டி
இழுத்த இரும்புக் கம்பி.



 

( 65 )





( 70 )