பக்கம் எண் :

இந்தி எதிர்ப்புப் பாட்டு

இந்தி எதிர்த்திட வாரீர்

{ இராகம்-நாதநாமகிரியை தாளம் ஆதி. }  

    { ஆனந்தக் களிப்பு மெட்டு }

இந்தி எதிர்த்திட வாரீர் -- நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி)

முந்திய காலத்து மன்னர் நம்
முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்
வந்தவட மொழிதன்னை -- விட்டு
வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி)

செந்தமிழ் தன்னில் இல்லாத -- பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?
எந்த நலம்செய்யும் இந்தி -- எமக்கு
இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.         (இந்தி)

தென்னாடு தான்எங்கள் நாடு -- நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை -- எங்கள்
பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம். (இந்தி)

இன்னலை ஏற்றிட மாட்டோம் -- கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் -- வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.    (இந்தி)
( 5 )

( 10 )


( 15 )இந்தியா கட்டாயம்?

{ இராகம்-சகானா   தாளம்-திஸ்ரகதி. }
       
           கண்ணிகள்


தமிழ்,
அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் --  இந்தி
அனைக்குத் தீனியும் கட்டாயமாம்
சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் --  இந்தத்
தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம்.

கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே --  இந்திக்
கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்.
இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் -- இந்தி
இருட்டில் வீழ்வது கட்டாயமாம்.

அம்மா எனத்தாவும் கைக்குழந்தை --      இந்தி
அம்மியில் முட்டுதல் காட்டாயமாம்.
இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் --       இவ்வா
றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை.

தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் -- பெறத்
தக்கதொர் கட்டாயம் ஆக்கிவிட்டால்
போய்விடும் கல்லாமை! இங்கதன்பின் -- பிற
புன்மொழிகள்வந்து சேரட்டுமே.

( 20 )

( 25 )

( 30 )

( 35 )
இந்தி எதிர்ப்பு முரசு

{ இராகம்-இங்கிலீஷ்டியூன்.  தாளம்-திஸ்ரகதி }

29 மேளம் திரசங்கராபரண ஜன்யம்

ஸ்ப ஸா ஸா நிதபமா கம நா தா ப ம க ம பா
பெருநாவற் றீ வினிலே இரு நாடுண் டவைகளிலே
ம க ம க ரீ ப ம க ம பா மா கா ரீ ஸா;
திருநாடாம் தமிழ்நாடே எந்தாய்நா டாம்
ம க ம க மா நா ம க ரீ ம தா தீ ஸ்ரரிஸ்ஸா
வருமொழியாம் இந்தியையும் வடநாட்டார் ஆட்சியையும்
க ம தா தா மா நா நீ தநிஸ்ரஸ்ர ஸ்ரீஸ்ர;
நாளும் ஒப்போமென்றதிராயோ முரசே
பெருநாவை தீவினிலே
இருநாடுண்டவைகளிலே
திருநாடாம் தமிழ்நாடே
எந்தாய்நாடாம்.
வருமொழியாம் இந்தியையும்
வடநாட்டார் ஆட்சியையும்
ஒருநாளும் ஒப்போமென்று
அதிராயோ முரசே!

சேரர்பாண்டியர்சோழர்
பேரர்க்குப் பேரரெனில்
வேரஞ்சிப் போம்வடவர்
நாடஞ்சிப்போம்
ஓரிந்திக்கோ வடவரின்
ஒப்பந்தக்காரர்க்கோ
ஒருபோதும் தாழோமென்று
அதிராயோ முரசே.

அல்லற்கஞ்சோம் கடுமொழி
சொல்லற்கஞ்சோம் ஒருசிறை
செல்லற்கஞ்சோம், அஞ்சோம்!
தூக்குக்கு அஞ்சோம்
இல்லுக்கோர் தமிழ்மறவன்
ஈட்டுக்கோர் நாட்டுப்பெண்
தொல்லைதரும் இந்தியினைக்
கொல்லோமோ முரசே

குண்டுக்கஞ்சோம் வடவர்கள்
கூட்டுக்கஞ்சோம் பலபல
குண்டர்க்காம் செய்தித்தாள்
கூற்றுக்கஞ்சோம்
அண்டிற்றா இந்நாட்டில்
அயலானின் இந்திமொழி?
மண்டைப்புழு மாய்ந்திடுமென்று
அதிராயோ முரசே!
( 40 )
( 45 )
( 50 )

( 55 )

( 60 )
( 65 )

( 70 )
( 75 )
எழுக

        எடுப்பு

குமுறும் தமிழ்க் கடலே -- இந்தி
கொணரும் பகைமேல் எழுவாய்     (குமுறும்)

     உடன் எடுப்பு

நமதே இந்தப் பழமைத் தமிழகம்
நாமில்லை பிறர் அடிமை! உள்      (குமுறும்)

        அடி

அமுதே எனுமோர் தமிழே நாங்கள்
அனைவரும் நுகர்வோம் அல்லால்
இமைநேரத்தும் ஓப்புவதில்லை.
இந்தியை எதிரியின் நஞ்சை!
அமைதி காண்போம் ஆட்சியை நிறுவ
அணிஅணியாய்முன்னேறாய் உள்  (குமுறும்)
( 80 )
( 85 )
எல்லாம் வாருங்கள்!

1938 -- இந்தி எதிர்ப்புப் பாட்டு

இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் -- நீங்கள்
   எல்லாரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழ்க்குத் தீமை வந்தபின்னும் -- இந்தத்
   தேகமிருந்தொருலாபமுண்டோ?

விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி -- அது
   வீரத் தமிழ்மக்கள் ஆவி என்போம்.
இந்திக்குச் சலுகை தந்திடுவார் -- அந்த
   ஈனரைக் காறியுமிழ்ந்திடுவோம்!               (இந்)

இப்புவி தோன்றிய நாள் முதலாய் -- எங்கள்
   இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்.
தப்பிழைத்தாரிங்கு வாழ்ந்ததில்லை -- இந்தத்
   தான்றோன்றிகட்கென்ன ஆணவமோ! (இந்)

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் -- இந்தி
   எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை -- அதன்
   ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்.           (இந்)

எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் -- எங்கள்
   இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் -- எங்கள்
   மாத்தமிழ்க்கீடில்லை என்றுரைப்போம்!          (இந்)
சிங்கமென்றே. இளங் காளைகளே -- மிகத்
   தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே -- உடற்
   பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!               (இந்)

தூங்குதல் போன்றது சாக்காடு -- பின்னர்த்
   தூங்கி விழிப்பது நம் பிறப்புத்
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் -- உயிர்
   தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!           (இந்)

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை -- நமை
   மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே -- உயிர்
   இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!              (இந்)

( 90 )

( 95 )

( 100 )

( 105 )

( 110 )

( 115 )
பார்க்கட்டும்

கண்ணிகள்


{ இராகம் -- சிவரஞ்சனி திஸ்ரகதி -- ஏகதாளம் }
22 வது மேளம் கரஹரப்ரியாவில் ஜன்யம்
{ ஆரோசை -- ஸரிகபதஸ் அவரோசை -- ஸ்தபகல்ஸ் }

   ஸ் த பகரிஸ ரீ க ரி ஸ ஸ
இந்திபுகுந்தது நாட்டி லேஇன்னும்
ரி ஸ ரி ஸ ரி க பாக பா,
என்னசெய் கின்றீர் வீட்டிலே

ப த ஸ் ரி க் க் ப் க் ரி ஸாத
மைந்தர் அன் னைதந்தை யாவரும் ஓடி
   க் ரி ஸ் ரி ஸ் த பா த ஸா,
   வாருங்கள் போர்எல்லை கோட்டிலே,

இந்தி புகுந்தது நாட்டிலே -- இன்னும்
என்னசெய்கின்றீர் வீட்டிலே?
மைந்தர்அன்னைதந்தை யாவரும் -- ஒடி
வாருங்கள் போர்எல்லைக் கோட்டிலே

இன்பத்திராவிட நாட்டினை -- உண்டு
ஏப்ப மிடும்ஏற்பாட்டினைப்
பன்முறை யும்செய்து பார்த்தனர் -- இன்னும்
பார்ப்பாரானால் பார்க்கட்டுமே.

செத்த வடமொழி காட்டியும் -- நம்
செந்தமிழ் மேல்எய்த ஈட்டியும்
பொத்தென வீழ்ந்தது பன்முறை -- இந்திப்
பூச்சாண்டி காட்டினர் இம்முறை.

இந்தும தம்என்ற பேச்சையே -- சொல்லி
இன்பத் தமிழன்னை மூச்சையே
கொந்திடப் பார்த்தனர் பன்முறை -- இந்திக்
கொம்பூதி வந்தனர் இம்முறை.

வேதம் வடமொழி என்றனர் -- தமிழ் வீண்மொழி என்றுபு கன்றனர்
ஏதும்செல்லாதெனக் கண்டபின் -- இன்
றிந்தியைக் கட்டாயம் என்றனர்.

ஆட்சியெலாம்அவர் கையிலாம் -- படை
அத்தனை யும்அவர் பையிலாம்
கோட்டை பிடித்ததும் இந்தியாம் -- நம்
கோடரிக் காம்புகள் கூற்றிவை.

தீந்தமிழ் காணாத சேய்களின் -- பெருஞ்
செல்வத்தை இந்தியின் வாய்களில்
ஈந்தனர் இம்மூட நாய்களின் -- செயல்
ஏற்குமோ இப்பெரு நாட்டிலே.

நாடு நலம்பெற வேண்டுமாம் -- வட
நாட்டிந்தி தான் அதைத் தூண்டுமாம்
பீடுறு செந்தமிழ் நாட்டிலே -- சில
பேடிப் பசங்களின் கூற்றிவை.


( 120 )

( 125 )


( 130 )

( 135 )
( 140 )

( 145 )


( 150 )

( 155 )

இந்தி ஒழிப்பதும் கட்டாயம்

தன்னையறிந்து இன்பமுறவெண்ணிலாவே
என்பதுபோல் பாடுக:


இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே -- நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம்கொ டுக்கவந்த இந்திமொழியே -- உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் -- நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் -- உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?

வடக்கர் அனுப்பிவைத்த இந்திமொழியே -- எம்
வாழ்வைக் கெடுக்கவந்த இந்திமொழியே
படைவலி உள்ளதென எண்ணியிருப்பாய் -- உன்
பகட்டுப் பலிப்பதில்லை இந்திமொழியே
அடக்கு முறைக்கும்உன் சிறைக்கும் அஞ்சோம்உன்
ஆட்சியை வேரினொடும் வீழ்த்தமுடியும்
படைக்கு நடுங்குபவர் நாங்களில்லையே -- முன்
பட்டதையும் மறந்தனை இந்திமொழியே

ஆரியம் என்னுமொரு செத்தமொழியின் -- மெய்
அழுக்கில் புழுத்த இந்திமொழியே
பாரியம் புந்தமிழர் குருதியிலே -- நீ
பாய நினைத்ததென்ன இந்திமொழியே?
கூரிய வாளுடைத்திராவிடமக்கள் -- தம்
கூட்டம் சிறியதல்ல இந்திமொழியே
கார்முகில் முழக்கென முரசொலிகேள் -- பெருங்
கடலெனத் திராவிடர் படையினைப்பார்!

( 160 )( 165 )

( 170 )

( 175 )
( 180 )
பிள்ளைகள் சொத்து
தாய் மொழிக்கே

ஆறுமுக வடி வேலவனே
என்ற காவடிச்சிந்து போலப் பாடுக,

நூற்றுக்குத் தொண்ணூறு பேர்க்குப் படிப்பில்லை
நோக்குவார் யாருமில்லை -- இந்தி
மாற்றலர் சொல்லினைக் கட்டாயம் கற்றிட
வைத்தனர் என்ன தொல்லை!

ஏற்ற தமிழ்மொழி யாகிய தாய்ப்பாலும்
இல்லாத பிள்ளைகட்கே இந்திச்
சேற்றைக் குடிப்பது கட்டாயம் என்றனர்
தீமை விளைப்பதற்கே

தாய்மொழிக் கல்வியைக் கட்டாயம் ஆக்கிடத்
தக்கதோர் செல்வத்தையே -- இந்தித்
தேய்மொழிக்கும்பிற செத்தமொழிக்கும்
செலவு செய்தார் மெத்தவே

ஒய்வறு நாட்டினில் பிள்ளைகட்கான
உரிமைஒன்றுண்டு கண்டீர் -- நம்
தாய்மொழி கட்டாயம் கொள்ளுவதாகும்
பிறமொழி தம் விருப்பம்.


( 185 )

( 190 )

( 195 )
இந்தி எதிர்ப்பார் இயம்பும் உறுதிப்பாடு

திராவிடப் பொதுமக்கள்:

தூயதாய் நாட்டில் தாய்மொழி நூற்றில்
தொண்ணூறு பேர்க்கிலா நிலைமையில், ஆள்வோர்,
வாயில்வாரா வடமொழியதாம் இந்தியைக்
கட்டாய பாடமாய் வைத்தனர் ஆதலால்
ஆயும்எம் திரவிட மொழியும், பண் பாடும்
அழிவுறும் என்றுயாம் நம்புவ தாலும்,
தீயதாம் வழியில் இந்தியின் பேரால்
திரவிடர் செல்வம் அழிகின்ற தாலும்,
அன்னையின் பால்நிகர் தம்மொழி கற்பார்
அயல்மொழி பலகற்பதான
இன்னலை நீக்கல் அறமென்ப தாலும்
யாம்இந்த உறுதியை மேற்கொள்ளு கின்றோம்
தன்மைதீர் இந்திதான் கட்டாயம் என்னும் ஓர்
சட்டத்தைக் கட்டுடன் யாம்எதிர்க்கின்றோம்
என்னதீங் குறினும், எமைச்சிறை சேர்க்கினும்
யாம்எதிர்த்திடுகின்றோம்இந்தி ஒழிகவே
( 200 )
( 205 )
( 210 )
வடமொழி எதிர்ப்பு

பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப்
பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம்
ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார்
ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார்
பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று
பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே?
வீசாத வாளுக்குப் படைவீடொன்றா?
வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே!
வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த
வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு
வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன
வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு
வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு

வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள்
வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான்
வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ
திரவிடரை அயலார்கள் என்பார் அந்தத்
திரவிடரைவ்வகையிலேனும் அண்டி
உருவடையும் நிலையுடையார் பேடிமக்கள்
உவப்படைய வடமொழிக்கே, ஆளவந்தார்
பெருமக்கள் வரிப்பணத்தால் சிறப்பும் செய்தார்
பிறர் காலில் இந்நாட்டைப் படையலிட்டார்
திரவிடரோ அன்னவர்தாம்? மானமுள்ள
திரவிடரோ? மக்களோ? மாக்கள்தாமோ!

( 215 )
( 220 )
( 225 )

( 230 )
( 235 )
இந்திக்கு உன்திறம் காட்டு

குழிப்பு

      நாதந்தி நாதந்தி
      நாதந்தி நாதந்தி
      நாதந்தி நாதந்தி நா
      திந்திநா
      நாதந்தி நாதந்தி நா

முந்தைத் தமிழ்ப்பூங் கொ
ழுந்தைப் பெருந்தாய் ம
ருந்தைப் புறம் தாக்கு மோர்
இந்திப்ப
ருந்தைப் பறந்தோடச் செய்!

முன்னைப்பெ ருஞ் சீர்த்தி
அன்னைத் தமிழ், வாய்த்த
பொன்னைப் புறந் தாக்குமோர்
இந்திக்குன்
வன்மைத் திறங் காட்டுவாய்!

மோனைத் தமிழ்த்தா யை
ஊனைத் துளிர்ப்பாக்கும்
தேனைப் புறந்தாக்குமோர்
இந்திக்கு
வானைக் கிடங்காக்குவாய்!

மயிலைத் தமிழ்த் தூய
வெயிலைப் பயன் கூவு
குயிலைப் புறந்தாக்குமோர்
இந்திக்குன்
அயிலைத் தெரிந்தோட்டுவாய்!

மேலைத் தமிழ்த் தாயை
மாலைத் தவிர்க்கின்ற
நூலைப் புறந்தாக்குமோர்
இந்திக்குன்
வேலைத் தெரிந் தோட்டுவாய்!
முத்தைப் பெருந்தூய
சொத்தை தமிழ்த்தாய்வ
ளத்தைப் புறந்தாக்குமோர்
இந்திக்க
ழுத்தைக் குறைப்பாயடா!

நாவைத் தெவிட்டாத
பாவைத் தமிழ்த்தாயை
மாவைப் புறந்தாக்குமோர்
இந்திக்க
டாவைப் பிளப்பாயடா( 240 )

( 245 )

( 250 )

( 255 )

( 260 )

( 265 )

( 270 )

( 275 )
இந்தி எதிர்ப்பார்

மேற்கொள்ளும் உறுதிப்பாடு

மாணவர்

திரவிட மென்னும் தனிப்பெரு நாட்டின்
திராவிடமொழியை உயிரெனக் கொண்ட
ஓரே இன மாணவர் சேயரும் மகளிரும்
உணர்வினால் மேற்கொளும் உறுதி இஃதாகும்:
திராவிட நாட்டில் இந்திகட் டாயம்
செய்தவர் சட்டத்தை எதிர்க்கின்றோம் நாங்கள்
வரமறுக்கின்றோம், இந்தியின் கூச்சல்
வரும்கல் விக்கழ கத்திற்கு நாங்கள்.

தாய்மொழிகற்கும் வகுப்புக்கள் இல்லை
தாய்மொழி வாத்திமார் பெருகிடவில்லை
ஆயஎம் நாட்டின் அருஞ்செல்வமெல்லாம்
அயல்மொழிக் கழிப்பதை யாம்ஒப்பமாட்டோம்
தீயன செயினும் ஆளவந்தார்கள்
சிறைசெய வரினும் யாமஞ்சமாட்டோம்
வாயிலும் நுழையா இந்தியை நாட்டின்
வாயிலில் எதிர்ப்போம் இந்தி ஓழிகவே!

( 280 )
( 285 )

( 290 )


( 293 )