பக்கம் எண் :

தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு

[குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு]

புவியிற் சமூகம் இன்பம்
   பூணல் சமத்துவத்தால்
கவிழ்தல் பேதத்தாலடி -- சகியே
   கவிழ்தல் பேதத்தாலடி!

புவிவேகம் கொண்டு செல்லும்
   போதில்உடன் செல்லாதார்!
அவிவேகம் கொண்டாரடி -- சகியே
   அவிவேகம் கொண்டாரடி!

தாழ்வென்றும் உயர்வென்றும்
   சமூகத்திற் பேதங்கொண்டால்!
வாழ்வின்பம் உண்டாகுமோ? -- சகியே
   வாழ்வின்பம் உண்டாகுமோ?

தாழ்ந்தவர் என்றுநீக்கிச்
   சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி -- சகியே
   வாழ்ந்தது காணேனடி!

பிறப்பி லுயர்வுதாழ்வு
   பேசும் சமூகம்மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி -- சகியே
   சிறக்குமோ சொல்வாயடி?

பிறந்த முப்பது கோடிப்
   போரில் ஐங்கோடி மக்கள்
இறந்தாரோ சொல்வாயடி -- சகியே
   இறந்தாரோ சொல்வாயடி?

இதந்தரும் சமநோக்கம்
   இல்லா நிலத்தில் நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ -- சகியே
   சுதந்தரம் உண்டாகுமோ

பதம்பெறப் பணிசெய்வோர்
   பகைகொண்டார் எனில்எந்த
விதம்அஃது கொள்வாரடி -- சகியே
   விதம்அஃது கொள்வாரடி?

சோதர பாவம் நம்மில்
   தோன்றாவிடில் தேசத்தில்
தீதினி நீங்காதடி -- சகியே
   தீதினி நீங்காதடி! பேதம் பாராட்டி வந்தோம்
   பிழைசெய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு -- சகியே
   மீதம் உயிர்தானுண்டு!

அற்பத் தீண்டாதார் என்னும்
   அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ -- சகியே
   கர்ப்பத்தில் வந்தாரன்றோ?

பொற்புடை முல்லைக்கொத்தில்
   புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார்நம்புவார் -- சகியே
   சொற்படி யார்நம்புவார்!





( 5 )





( 10 )





( 15 )





( 20 )






( 25 )





( 30 )





( 35 )




( 40 )






( 45 )

தீண்டும் மக்களின் அன்னை
   தீண்டாரையும் பெற்றாளோ?
ஈண்டிதை யார்நம்புவார் -- சகியே
   ஈண்டிதை யார்நம்புவார்?

தீண்டாமை ஒப்புகின்றார்
   தீண்டாரிடம் உதவி
வேண்டாமல் இல்லையடி -- சகியே
   வேண்டாமல் இல்லையடி!

அடிமை கொடியதென்போர்
   அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி -- சகியே
   மிடிமையை எண்ணாரடி

கொடியோர் பஞ்சமர் என்று
   கூடப் பிறந்தோர்க்கிவர்
சுடும்பேர் வைத்திட்டாரடி! -- சகியே
   சுடும்பேர் வைத்திட்டாரடி!

தீண்டாதார் பழங்கீர்த்தி
   தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி -- சகியே
   வேண்டாதார் இல்லையடி!

ஆண்டார் தமிழர்,இந்நா
   டதன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் -- சகியே
   ஈண்டிக் குடியேறினார்!

வெள்ளை யுடம்புகாட்டி
   வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி -- சகியே
   கள்ளங்கள் செய்தாரடி!

பிள்ளைக்குக் கனிதந்து
   பின்காது குத்தல்போல்தம்
கொள்கை பரவச் செய்தார் -- சகியே
   கொள்கை பரவச் செய்தார்!

கொல்லா விரதம் கொண்டோர்
   கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி -- சகியே
   சொல்லுக் கிசைந்தாரடி!

நல்ல தமிழர் சற்றும்    நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடி -- சகியே
   பொல்லாச்சொல் ஏற்றாரடி!

ஏச்சும் எண்ணார் மானம்
   இல்லாத ஆரியர்
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார் -- சகியே
   மிலேச்சர்என்றெண்ணப்பட்டார்!

வாய்ச்சாலத் தால்கெட்ட
   வஞ்சகத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி -- சகியே
   ஏய்ச்சாளவந்தாரடி!

மன்னர்க் கிடையில் சண்டை
   வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடுசேர்வார் என்றார் -- சகியே
   பொன்னாடுசேர்வார் என்றார்!

பொன்னாட்டு மாதர் போலும்
   பூலோகத் தில்லை யென்று
மன்னர்பால் பொய்கூறினார் -- சகியே
   மன்னர்பால் பொய்கூறினார்!

வான்மறை எனத்தங்கள்
   வழக்கம் குறித்தநூலைத்
தேன்மழை என்றாரடி -- சகியே
   தேன்மழை என்றாரடி!

''ஏன்மறை'' எங்கட்கென்றே
   இசைத்தால் ஆரியர் நீங்கள்
வான்புகத் தானென்றனர் -- சகியே
   வான்புகத் தானென்றனர்!

மேலேழு லோகம் என்றார்
   கீழேழு லோகம் என்றார்
நூலெல்லாம் பொய்கூறினார் -- சகியே
   நூலெல்லாம் பொய்கூறினார்!

மேலும் தமை நிந்திப்போர்
   மிகுகஷ்டம் அடைவார்கள்
தோலோதோல் கூடாதென்றார் -- சகியே
   தோலோதோல் கூடாதென்றார!

சுவர்க்கத்தில் தேவர் என்போர்
   சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார் -- சகியே
   அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்!

துவக்கத்தில் ஆரியரைத்
   தொழுதார் இறந்தபின்பு
சுவர்க்கஞ்செல் வார்என்றனர் -- சகியே
   சுவர்க்கஞ்செல் வார்என்றனர்!



( 50 )




( 55 )





( 60 )






( 65 )





( 70 )





( 75 )





( 80 )






( 85 )





( 90 )





( 95 )





( 100 )





( 105 )





( 110 )






( 115 )





( 120 )




( 125 )



தம்சிறு வேதம்ஒப்பாத்
   தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி -- சகியே
   நஞ்சென்று கொண்டாரடி!

வெஞ்சிறு வேதம்ஒப்பா
   வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி -- சகியே
   வஞ்சித்துக் கொன்றாரடி!

அழிவேதம் ஒப்பாதாரை
   அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார் -- சகியே
   பழிபோட்டுத் தலைவாங்கினார்!

பழிவேதம் ஒப்போம்என்ற
   பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி -- சகியே
   கழுவேற்றிக் கொன்றாரடி!

ஆரியர்தமை ஒப்பா    ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி -- சகியே
   சேரியில் வைத்தாரடி!

சேரிப் பறையர்என்றும்
   தீண்டாதார் என்றும்சொல்லும்
வீரர்நம் உற்றாரடி -- சகியே
   வீரர்நம் உற்றாரடி!

வெஞ்சமர் வீரர்தம்மை
   வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்றாரடி -- சகியே
   பஞ்சமர் என்றாரடி!

தஞ்சம் புகாத்தமிழர்
   சண்டாளர் எனில்தாழ்ந்து
கொஞ்சுவோர் பேரென்னடி! -- சகியே
   கொஞ்சுவோர் பேரென்னடி!

மாதர் சகிதம்தங்கள்
   மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி -- சகியே
   போதனை செய்தாரடி!

சூதற்ற மன்னர் சில்லோர்
   சுவர்க்கக் கதையை நம்பித்
தீதுக் கிசைந்தாரடி -- சகியே
   தீதுக் கிசைந்தாரடி!

உலகம் நம்மைப் பழிக்க
   உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி -- சகியே
   கலகங்கள் செய்தாரடி!

கொலைக்கள மாக்கிவிட்டார்
   குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றாரடி -- சகியே
   நிலைக்களம் என்றாரடி!

சாதிப் பிரிவு செய்தார்
   தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி -- சகியே
   நீதிகள் சொன்னாரடி!

ஓதும் உயர்வுதாழ்வை
   ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம்ஏற்பதோ -- சகியே
   ஏதுக்கு நாம்ஏற்பதோ?

ஊர்இரண்டு படுங்கால்
   உளவுள்ளக் கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம் -- சகியே
   காரியம் கைகூடுமாம்!

நேர்பகை யாளிஎன்னை
   நீசனென்றால் என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி -- சகியே
   சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி.

வீரமில் ஆரியரின்   வீண்வாக்கை நம்பினால்நம்
காரியம் கைகூடுமோ? -- சகியே
   காரியம் கைகூடுமோ?

ஆரியர் சொன்னவண்ணம்
   ஆண்டுபல கழித்தோம்
காரியம் கைகூடிற்றா -- சகியே
   காரியம் கைகூடிற்றா?

எத்தால் வாழ்வுண்டாகும்! நாம்
   ஒத்தால் வாழ்வுண்டாகும் இஃது
சத்தான பேச்சல்லவோ? -- சகியே
   சத்தான பேச்சல்லவோ?

எத்தான பேச்சைநம்பி
   இரத்தக் கலப்பைநீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ -- சகியே
   சத்தின்றி வாழ்வாருண்டோ?

ஆரியப் பேர்மறைந்தும்
   அவர்வைத்த 'தீண்டார்' என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி -- சகியே
   பேர்நிற்றல் ஏதுக்கடி?

ஆரியர் பார்ப்பாரானால்
   அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? -- சகியே
   சேரியில் ஏன்தங்கினார்?

ஊர்தட்டிப் பறித்திட
   உயர்சாதி என்பார்இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி -- சகியே
   மார்தட்டிச் சொல்வேனடி!

( 130 )





( 135 )





( 140 )







( 145 )




( 150 )





( 155 )






( 160 )






( 165 )





( 170 )





( 175 )






( 180 )






( 185 )






( 190 )





( 195 )




( 200 )





( 205 )




( 210 )




( 215 )




( 220 )
ஓர்தட்டில் உயர்ந்தோர்மற்
றொன்றில் தாழ்ந்தோரை இட்டுச்
சீர்தூக்கிப் பார்ப்போமடி -- சகியே
சீர்தூக்கிப் பார்ப்போமடி!

தீண்டாதார் சுத்தமற்றோர்
என்றாலச் சுத்தத் தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? -- சகியே
தாண்டாதார் எங்குண்டடி?

தீண்டாதார் ஊனுண்டால்
தீண்டு மனிதர்வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம் -- சகியே
மாண்டன பல்கோடியாம்!

பறவை மிருகமுண்டோர்
பறையர் என்றால் மனுநூல்
முறையென்பார் பேரென்னடி -- சகியே
முறையென்பார் பேரென்னடி?

வெறிமது உண்போர்நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? -- சகியே
நிறைமுக்கா டேதுக்கடி?

சீலம் குறைந்தோர் என்றால்
சீலமி்லாச் சிலரை
ஞாலத்தில்ஏன் தீண்டினார் -- சகியே
ஞாலத்தில்ஏன் தீண்டினார்?

மேலைவழக்கங் கொண்டு
மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? -- சகியே
காலத்தில் தாழ்ந்தாருண்டோ?

சாத்திரம் தள்ளிற்றென்றால்
சற்றும் அதுதான் எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? -- சகியே
கோத்திரத் தார்செய்ததோ?

வாய்த்திறம் கொண்ட மக்கள்
வஞ்சம் யாவையும் நம்பி
நேத்திரம் கெட்டோமடி -- சகியே
நேத்திரம் கெட்டோமடி!
மனிதரிற் றாழ்வுயர்வு
வகுக்கும் மடையர் வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி -- சகியே
இனிச்செல்ல மாட்டாதடி!

கனிமா மரம் வாழைக்காய்
காய்க்காதெனில் இரண்டும்
தனித்தனிச் சாதியடி -- சகியே
தனித்தனிச் சாதியடி!

எருமையைப் பசுச்சேர்தல்
இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி! -- சகியே
ஒருசாதி இல்லையடி!

ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
ஒப்பக் கருங்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? -- சகியே
இருசாதி மாந்தர்க்குண்டோ?

உழைப்பால் உயர்ந்தவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி -- சகியே பிழைப்பைக் கெடுத்தாரடி!

தொழிலின்றிச் சோறுண்ணாச்
சுத்தர் அசுத்தர்என்ப
தெழிலற்ற வார்த்தையடி -- சகியே
எழிலற்ற வார்த்தையடி!

உடல்நோய்கள் அற்றபேரை
ஒழுக்கமில்லார் என்பவர்
கடலைஉளுந் தென்பரோ? -- சகியே
கடலைஉளுந் தென்பரோ?

தடைற்ற அன்பினரைச்
சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? -- சகியே
கடையர்க்கு வாழ்வேதடி?

பழிப்பவர்க்கும் உதவும்
பாங்கர் பறையர் என்பார்
விழித்துத் துயில்வாரடி -- சகியே
விழித்துத் துயில்வாரடி?

தழைக்கப் பிள்ளைபெறுவோர்
தாழ்வாம்! பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம் -- சகியே
அழைப்போர்கள் மேலோர்களாம்!

தோள்தான் பொருள் என்போர்கள்
தாழவாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம் -- சகியே
கூடாதோர் மேலென்பதாம்!

மாடா யுழைப்பவர்கள்
வறியர்; இந்நாட்டுத் தொழில்
நாடாதோர் செல்வர்களோ? -- சகியே
நாடாதோர் செல்வர்களோ?

ஏரிக்கரையினில் வாழ்ந்
திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? -- சகியே
சேரியர் தாழ்ந்தார்களோ?

ஊருக்கி ழிந்தோர் காவல்
உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின்
வேருக்கு வெந்நீரடி -- சகியே
வேருக்கு வெந்நீரடி!

அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே?
எங்கேனும் மாற்றமுண்டோ; -- சகியே
எங்கேனும் மாற்றமுண்டோ?

புங்கவர் நாங்கள்என்பார்
பூசுரர் என்பார்நாட்டில்
தங்கட்கே எல்லாம் என்பார் -- சகியே
தங்கட்கே எல்லாம் என்பார்!

ஆதிசைவர்கள் என்பார்,
''ஆதிக்குப் பின் யார்'' என்றால்
காதினில் வாங்காரடி! -- சகியே
காதினில் வாங்காரடி!

சாதியில் கங்கைபுத்ரர்
என்பார்கள் சாட்சி, பத்ரம்
நீதியில் காட்டாரடி -- சகியே
நீதியில் காட்டாரடி!

வேலன்பங் காளியென்பார்
வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார் -- சகியே
காலன்தான் என்றஞ்சுவார்!

மேலும் முதலி; செட்டி;வேளாளப் பிள்ளைமுதல்
நாலாயிரம் சாதியாம் -- சகியே
நாலாயிரம் சாதியாம்!

எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி! -- சகியே
பஞ்சாகிப் போனாரடி!

நெஞ்சில் உயர்வாய்த் தன்னை
நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால் -- சகியே
கொஞ்சமும் எண்ணாததால்!

செட்டி உயர்ந்தோன் என்பான்
செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால் -- சகியே
குட்டுக்கள் எண்ணாததால்!

செட்டிகோ முட்டிநாய்க்கன்
சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி -- சகியே
கட்டுக் குலைந்தாரடி!

சேர்ந்துயர் வென்றிவர்கள்
செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி -- சகியே
சூத்தி்ரர் ஆனாரடி!

தூற்றிட இவ்வுயர்ந்தோர்
சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி -- சகியே
காற்றினில் விட்டானடி!

தம்மை உயர்த்தப் பார்ப்பார்
சமூகப் பிரிவுசெய்தார்
இம்மாயம் காணாரடி -- சகியே
இம்மாயம் காணாரடி!
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி -- சகியே
நம்மில்நாம் காண்போமடி

நான்கு வருணம் என்று
நவிலும் மனுநூல்விட்டு
ஏனைந்து கொண்டாரடி -- சகியே
ஏனைந்து கொண்டாரடி!

நான்கு பிரிவும் பொய்ம்மை
நான்குள்ளும் பேதம் என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம் -- சகியே
ஊனத்தில் உள்ளூனமாம்!

சதுர்வர்ணம் வேதன் பெற்றான்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்றுப் போட்டதடி -- சகியே
எது பெற்றுப் போட்டதடி?

சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில்ஐந்தாம் நிறமாயினார் -- சகியே
அதில்ஐந்தாம் நிறமாயினார்!

மனிதரில் தீட்டுமுண்டோ?
மண்ணிற் சிலர்க்கிழைக்கும்அநீதத்தை என்சொல்வதோ? -- சகியே
அநீதத்தை என்சொல்வதோ?

"புனிதர்என் றேபிறத்தல
"புல்லர்என் றேபிறத்தல
எனுமிஃது விந்தையடி -- சகியே
எனுமிஃது விந்தையடி!

ஊரிற் புகாதமக்கள்
உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி -- சகியே
பாருக்குள் நாமேயடி!

நேரிற்பார்க் கத்தகாதோர்
நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி -- சகியே
பாருக்குள் நாமேயடி!

மலம்போக்கும் குளம்மூழ்கா
வகைமக்களை நசுக்கும்
குலமாக்கள் நாமேயடி -- சகியே
குலமாக்கள் நாமேயடி!

மலம்பட்ட இடம் தீட்டாம்
மக்கள் சிலரைத் தொட்டால்
தலைவரைக்கும் தீட்டாம் -- சகியே
தலைவரைக்கும் தீட்டாம்!

சோமனைத் தொங்கக்கட்டச்
சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி -- சகியே
தீமக்கள் நாமேயடி!

தாமூழ்கும் குளம் தன்னில்
தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி? -- சகியே
போமாறு தானென்னடி?

பாதரட்சை யணிந்தாற்
பழித்துச் சிலரைத் தாழ்த்தும்
காதகர் நாமேயடி -- சகியே
காதகர் நாமேயடி.

ஓத வசதியின்றி
உலகிற் சிலரைத் தாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? -- சகியே
சூதர்க்கு வாழ்வேதடி!

தீராப் பகையுமுண்டோ
திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
தேராகிப் போனாலடி -- சகியே
நேராகிப் போனாலடி!

ஓரைந்து கோடிமக்கள்
ஓலமிடுங்கால் மற்றோர்
சீராதல் இல்லையடி -- சகியே
சீராதல் இல்லையடி!

தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி -- சகியே
வாழ்வெல்லை காண்போமடி!
சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம் -- சகியே
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்!





( 225 )





( 230 )





( 235 )





( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )





( 265 )






( 270 )





( 275 )



( 280 )







( 285 )





( 290 )





( 295 )





( 300 )






( 305 )






( 310 )





( 315 )





( 320 )







( 325 )



( 330 )





( 335 )





( 340 )







( 345 )





( 350 )





( 355 )






( 360 )





( 365 )





( 370 )






( 375 )





( 380 )






( 385 )



( 390 )






( 395 )





( 400 )







( 405 )





( 410 )






( 415 )





( 420 )





( 425 )




( 430 )





( 435 )



( 440 )

ஆலய உரிமை


( ஆறுமுக வடிவேலனே -- கலியாணமும்
செய்யவில்லை என்ற காவடிச்சிந்தின்
மெட்டு )
கண்ணிகள்

எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் -- எனில்
அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம்
அழகிய நேத்திரங்கள்?

திவ்விய அன்பினிற் செகத்தையெல் லாம்ஒன்று
சேர்த்திடலாகும் அன்றோ? -- எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும் ஒன்றே?

ஏக பரம்பொருள் என்பதை நோக்க
எல்லோரும்உடன் பிறப்பே -- ஒரு
பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி
லேஉள்ளதோ சிறப்பே?

''தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை'' என்று
செப்பிடும் தேசத்திலே -- பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம்; மதி
போயிற்று நீசத்திலே.

என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக்கிழிவாய்த் தெரியும் -- சாதி
தன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூகநிலை புரியும்.

என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
ஏழையர்க் கோர் கடவுள் -- எளிதில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
முளைக்கும் பொதுக் கடவுள்

உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென்பீர் மிகத்
தாழ்ந்தது தாழ்ந்த தென்பீர் -- இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
பேசிடுவீர் அன்பீர்.

உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளி மறைவில் தரத்தான் -- மிகப்
பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணினதோ அறியேன்.

சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ -- ஒரு
சாதியை நீக்கினார்; தலையையும் வாங்கிடச்
சதியா லோசனையோ?

ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர் என்று மதித்ததுவோ -- சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ?

மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடுவார் என்றீரே -- அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித்தே நின்றீரே.

ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
அங்கம் சிறந்தாரோ? -- சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ?





( 445 )





( 450 )




( 455 )





( 460 )





( 465 )






( 470 )





( 475 )





( 480 )






( 485 )



தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? -- இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ?

தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ -- எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்தில்லையோ?

தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே -- அன்றி
முன்னை யிருந்த கல்லொடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே.

இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
இனத்தினில் பல்கோடி -- மக்கள்
தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவதுவோ ஓடி?

குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டிலையோ -- நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ?

திக்கெட்டுமே ஒரு கோயிலன்றோ? அதில்
சேரி அப்பால் இல்லையே -- நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே?

தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுதற்குத்
தனிக் கோயில் காட்டுவதோ? -- அவர்
வாழ்ந்திடுதற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ?

தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் -- அவர்
வாழ்த்தி அழைக்கும் ''சுதந்தரம தன்னை
மறித்திடும் நாசமக்கள்

தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் இத்
தாழ்நிலம் சொந்தம் அன்றோ? -- இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதி நன்றோ?

''தாழ்ந்தவர்'' என்றொரு சாதிப்பிரிவினைச்
சாமி வகுத்ததுவோ? -- எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ?

முப்பது கோடியார் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரே சமூகம் -- என ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்ன சுகம்?

இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
'யார்' என்ற தற்புகழ்ச்சி -- சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலில் -- நம்
இனத்தைச் செய்வார் இகழ்ச்சி.



( 490 )




( 495 )





( 500 )







( 505 )





( 510 )




( 515 )





( 520 )






( 525 )





( 530 )




( 535 )
மாடுண்பவன் திருக் கோயிலின் வாயிலில்
வருவதற்கில்லை சாத்யம் -- எனில்
ஆடுண்ணுவோனுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற் பாத்யம்.

நீடிய பக்தியில் லாதவர் கோயில்
நெருங்குவதால் தொல்லையே! -- எனில்
கூடிஅக் கோயிலில் வேலை செய்வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே.

''சுத்தமில்லாதவர் பஞ்சமர்!'' கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ -- எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பீரே.

நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே -- கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே.

கூறும் "உயர்ந்தவர தாழ்ந்தவர என்பவர்
கோயிலின் செய்திவிட்டுப் -- புவி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவீர்ஒன்று பட்டு.
வீறும் உயர்ந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றிஇந் நாட்டில் உண்டோ -- இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாது கொண்டோ?



( 540 )






( 545 )




( 550 )




( 555 )



( 560 )