மயிலம்
சுப்பிரமணியர் துதியமுது
தலைவி தூதுபோக்கல்
|
(தேவகி
மைந்தனான கண்ணனைத்தேடுவோம்
என்ற மெட்டு)
(இராகம் : இந்துஸ்த்தான் பியாக், தாளம் : ஏகம்)
பல்லவி
வானவர் போற்றும் வேலவனிடம்
மாது நீ ஓதடி [வா]
அநுபல்லவி
மா மயில நன் மலையிற் சென்று வஞ்சிஎன்னிலை தன்னை
இன்று
[வா]
சரணம்
நானவனுக்கும் அவனெனக்குங் கட
னாவதென உண்டு-சாசனம்-அதற்
கேனில்லை இன்னும்வி மோசனம்-என [வா]
தாளமுடிவதில்லை முருகன்மேல்
தையலெனக்குள்ள காதலை-மத வேளின் கணை பட்டுச் சாதலை-அந்த [வா]
ஆதியிலேசெட்டி வீதியிலேசொன்ன
சேதியெல்லாம்உள்ளம் மறந்ததோ-உன்
சாதியில் இக்குணம் பிறந்ததோ-என்று [வா]
பாசிமயில்மிசை மாசிமகத்தன்று
நேசியருடன் நீ வந்தனை-நின்று
பேசி டில் நேருமோ-நிந்தனை-என [வா]
வாதனை தீர மணப்பதின்றி யின்னும்
சோதனை செய்திட வேண்டுமோ-இந்த
மாதுபிறன் கையைத் தீண்டுமோ-என [வா]
கைப்பிடியிற் கொண்டுவரகு கனை-நயம்
காட்டியோமையல் கூட்டியோ
சுப்புரத்தினம் சொல் நீட்டியோ-அடி [வா] |
( 5 )
( 10 )
( 15 )
( 20 ) |
(மருவே
செறித்த என்ற மெட்டு)
மயிலா சலத்து முருகா எனக்கு
வரமே யளிக்க நினையாயோ
மயலார் தடக்கண் மடவார் தனத்தில்
மனதே செலுத்தி யழியாமே
வெயிலே துடித்த புழுகாகி நித்தம்
விஷயாதி கட்குள் உழலாமே
விரைவே கழற்று நமனார் கயிற்றை
யுடலோ டுசுற்றி யழையாமே
மயில்மே லினிக்க வருவாய் சுரர்க்கி
னமுதே பரைக்கு மகனே
நீ
மலரே நிகர்த்த பதநீழலுக்குள்
வகையே சுகிக்க அருள்தாராய்
வயவே லெடுத்த அறுமா, முகத்து
வலனார் பயத்து மகிபா
சிர்
வனமார் கொடிக்கண் மகவான் மகட்கண்
விளையா டியிக்கண் வருவாயே |
( 25 )
( 30 )
( 35 ) |
மனதுக்குஇனிதுரைத்தல்
(இராகம்: அடாணா, தாளம்: ரூபகம்)
|
பல்லவி
குமரனை நினை கோலமாமயில் (கும)
அநுபல்லவி
உமையாள் தரும் பாலசுப்ரமண்யம்
உலகத்து எதிரில் றரிசித் தருளைப் பெறவுற் றிடுமக் (கும)
மணியும் துகிலும் கரியும் பரிவும் சுவையும் புவியிங்கு
எவையும் தினையும் தனிபுன் கூடவராவாம்
வளமிக் குளநற் களியும் இளமைப் பருவப் பயனும்
வளர்கட் டுடல்மட் கலமும் வீடுதராவாம்
துணைபோ லணியா பரணா தியினால் மயலே தருமா
தரைநீ யடைவா யெனிலோ அதனால்
துயர் துயர் துயர் (கும)
குளிர்மதி அறுமுகம் ஒழுகிய அருளினைத் தெளிதமிழினிலொரு
துதிகவி உரைசெயச் சொரிபவன் ஆனபெருமான்
கோரிய கீரனி னார்துயர் தீரமுன் ஓடியவேலவ
னாமுனை ஆளவு நேரினில் ஓடிவருவான்
குகன் கடம் பணிந் தவன் பகம் பணித் ததும் பவம்
பறந்திடுமே பறந்திடுமே
மறந்திடுமே (கும)
போதன்தனை ஓதுஞ்சிறை போகும்படி ஏவுங்குரு
நாதன்வடி வேலன்புகழ் பாடு
நெஞ்சே
பொய்ப் பகட்டை விட்டுச்சுப்புரத்தினத்தின்
நற்றமிழ்ப்பண் செந்பியப்பன் மெய்ப்பதத்தைத் தேடும்நெஞ்சே
புலப்படும் பொருள் நசித்திடும்அதில்
கலப்புற இனித் தலைப்படுதைத் தொலை
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைத்
ததியடைந்தி டப்பனைத்
(கும)
|
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 ) |
தினந்
துதிப்பாய் நெஞ்சே என்ற மெட்டு
(இராகம்: செஞ்சுருட்டி, தாளம்: ஆதி)
|
பிரமனை
ஜயித்தகந் தா வரம் தந்தாள்
அரனருள் மகனே அரியின்ம ருகனே
(சரண)
சரணமல்லால் துணை ஏது மண் மீது
ஷண்முக வடிவே சதுர்மறை முடிவே (தாயும்)
தாயுந்தந்தையுமென வந்துள்ளு வந்து
தாவினோம் வாராய் சஞ்சலம் தீராய் (சாயும்)
சாயும் கிழவனென வனத்திலோர் தினத்தில்
தனி வள்ளி தோளே தரச்செய்யும் வேளே (கீர)
கீரனுக் கருளிய வீரா மயூரா
கீர்த்திகொள் வேலா காத்தருள் மூலா (சூர)
சூரன்கி ளையோடன்று தீர்த்தருள் மூர்த்தி
சுப்புரத்தினம் தரு ஒப்பிடும் சிவகுரு (பிர)
|
( 65 )
( 70 ) |
தலைவி
பாங்கியிடம் கூறல்
(இராகம்: சங்கராபரணம், தாளம்: ஆதி)
|
பல்லவி
மனமிருந்தால் வரலாம் மயில்வாகனன்
வந்தெனக்கின்பம் தரலாம்-என்
அநுபல்லவி
இனமே நம்பினேன் இல்லை
எல்லாம் மறந்தேன் தில்லை
வனநாதன் மகன் மேலே
வைத்தேன் மோகமக் காலே (மனமி)
சரணம்
புனையுங் கடப்பந் தாரும்
புன்னகை செய்யும் சீரும்
நனையும் மலர்க்கண் ணோரம்
நல்லரு ளோ அ பாரம்
எனையாளத் தகுமென்றே இவனை நம்பினேன் அன்றே
மனைமாருந் தானுமாகி மறைந்தான் மயிலமேகி (மனமி)
அன்று வந்தாற்போல் வந்தான்
அரைநொடியில் மறைந்தான்
நன்றோ அவன் செயல்தான்
நாலாவிதத்தும் கந்தன்
குன்றென்று நினைத்தென்னைக் கொடுமை புரிந்தான்
முன்னைச்
சென்று குறப்பெண் ஈயும் தேன்மாவுண்ட தோஞாயம் (மனமி)
அந்நாள் முதலிந் நாளாய்
அவன் மோகமே கூர் வாளாய்
மின்னலிடையைத் தூளாய்
வீசுதென் குறை கேளாய்
கன்னியவன் தெரிந்தே கருவில்வைத்தான் மருந்தே
அன்பன் சுப்புரத் நம்பண் இன்றேல் தேற்றுவார் ஆர்பின்
(மனமி)
|
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 ) |
பாரத
நாட்டின் விடுதலை வேண்டல்
(காவடிச்சிந்தில் பாலைவாய்க்கமுகில் என்ற மெட்டு)
|
வீழ்தலும் யாம் வாழ்தலுமே வேலவா உன் கையிலுண்டு
வீணில் நாங்கள் பட்ட தெல்லாம் சொல்லவோ-நின்பால்
வேண்டி நிற்ப தெல்லாம் இன்ப மல்லவோ- இந்த
ஆழ்கடல் புவிமேல்எமக்கினி
தான பாரத பூமியை நீ்
அட்ட திக்கும் போற்றும் வண்ணம் ஆக்குவாய்-வானில்
எட்டவே உரிமைக்கொடி தூக்குவாய்
பாழ்படச்செய்தார்இந்நாட்டை ஊழ்வினைதானோ அறியேம்
பாரதத்தார் கொத்தடிமை ஆயினார்-சிலர்
பசி தொலைக்க வேறுதேசம் போயினார்-அந்தேரீ்
ஏழ்கடல்செலும் கீர்த்தி போயின
தீனர் யாமெனும் பேருமாயின
திக்கணம் கடைக்கண் பார்த்தால் ஓர்நொடி-தனில்
எங்குலப் பகையனைத்தும் மண்பொடி
மாக்கடல் நீர் தீப்படக்கை வேல்விடுங் கந்தனே உன்னை
அழிபடும்போதும் குறை நேர்வதோ - வீரர்
அனதிலும் பொல்லாத சோர்வு சேர்வதோ-கெட்ட
வறுமை நோய்கள் அச்ச முதலாம்
வழிமறிக்கு மிக் கலி தவிர்த்தினி
வர விடாதே எமது நாட்டிற் கெடுதலை-சுக
வாழ்க்கையில் நல் வாழ்க்கையாகும் விடுதலை
(இராகம்: செஞ்சுருட்டி, தாளம்: ஆதி)
சூரர்குலம் வேரறுக்க ஒரு வேலும் நான்
துணையெனப் பிடித்திடஇரு காலும் எண்ணும்
காரியத்தை முன்னிட்டுவிற் கோலெடுத்து வேடர்புனம்
மானைவிட்டுன் மெய்யுருவம் வேறுபட்டு நீமணந்த
ஏர்குறத்தி யணைத்திட அறுதோளும் தெய்வ
யானையும் அணைத்திடமற் றதுதோளும் எண்ண
எந்த நாளும் என்
துயர் மாளும்!
ஓர்குடிமற் றோர்குடியைக் கெடப்பார்க்கும் இந்த
உலகத்தை நினைத்திடில் உளம்வேர்க்கும் கொடு
மாரன்விடும் பாணமதி லேமனது நோகஇள
மாதர்வச மாகியலை யாதுசுகமே பெருகச்
சீர் கடப்பந் தார் குலுங்க
மயில் மேலே அலை
சீறு கடல் மேலுதித்த வெயில்போ லே
வர
இது வேளை குகப்
பெரு மாளே.
மா தர்வச மாகியலை யாதுசுகமே பெருகச்
கற்பகப் பொதும்பரிடைக் குயில்பாடும்.க
லாபமயி லோடிஅங்கு நடமாடும் உயர்
சீறு கடல்
பொற்பொடியைச் சூரையிடும் அற்புதங்கொள் வான்மயிலம்
சுற்றிவரு வார்குடியி லுதிப்பேனோ உனைச்
சுப்புரத்தினம் தமிழில் துதிப்பேனோ எக்
கதி தானோ அருள்
முரு கோனே |
( 100)
( 105)
( 110)
( 115)
( 120)
( 125)
( 130)
( 135)
( 140) |
நெஞ்சுக் குறுதி கூறல்
(இராகம்: இந்துஸ்தான் பியாக், தாளம்: ஏகம்)
|
கெடுதலைச்
செய்யும் அசுரர்கள் தம்மைப் படுகொலைசெய்யும்
வயிரவேல்
கீர்த்திகொள் புயம் தூக்கியபடி குகன் எழுந்தனன்
மயிலின்மேல்
சுடுமணற்பொரி அறுமுகனைத்
திரிபுரமெரித்தனன் மகனைத்
தொடுகழற்பணிவாய் மனமே
விடுதலைஇனி விடுதலை எங்கும் (கெடு)
நிதம் தரும் சுகம் அவன் மலர்ப்பதம் எனநினைத்திடு நெஞ்சமே
நிசத்தினி லந்தச் சுரர்க்கதிபதி தனக்கு நீயென்றும் தஞ்சமே
சதுர்முகத்தனைத் தோற்கடிக்கும்
ஷண்முகனே காப்புனக்கே
அதர்மமிங்கினித் தலையெடாது
சுதந்தரம் இனிச் சுதந்தரம் எங்கும்
(கெடு)
சமயம் வருதல்மெய் எனதுறவினர் சரவண பவ ஓம் எனச்
சாற்றினர் பகை நாற்புறம் வளைத்தே நொறுக்கிடுவோ மினிக்
கையில் அவனருள் உண்டு கண்டாய்
கந்தன் படைச்செங் குந்தர் களாய்த
துயர் ஒழித் தெழுவோ மினிமேல்
பயமிலை குலம் உய்யும் உய்யும்
உய்யும் (கெடு)
மலையெனப்பெரு முடலெடுத்திடு கிரவுஞ்சனுயிர் மாய்ப்பவன்
மயில நற்றல மதிலிருந்துநம் குலமுழுவதும் காப்பவன்
தலையணிந்தவன் குருவுமவன்
சகல உயிர்க்கும் வேருமவன்
நிலையெனது சொல்
பார்மனமே
புலையும் மறமும்
தொலையும் தொலையும்(கெடு) |
( 145)
( 150)
( 155)
( 160)
( 165) |
நெஞ்சுக்கு
நீதி கூறல்
(இராகம்: தேசிகதோடி, தாளம்: ரூபகம்)
|
பல்லவி
ஒன்று கேள் மனமே
அநுபல்லவி
இன்றுதொட்டு நீ ஒருவழி நின்று நல்ல
சுகமணுகிட (ஒ)
சரணம்
சென்று சென்று பழி பாவத்தில் விழாதே
செல்வாக்கை யெண்ணிப் பிறர் கையில்
தாழாதே
சகல உயிர்க்கும் வேருமவன்
விகசித மலரடி இணைகளை உனதொரு புகலிட மெனநினை (ஒ)
அந்நிய மாதரைத் தாய் என்பாயே கண்டு
அந்தகனை வாட்டக் குமரன்கை வேலுண்டு
சின்னமிழைத் திடுநோய்களும் பாசமும்
சிதறக் குமரக் குரிசிற் பெயரைத் தினமுச்
சரியினி
கானக் குறத்தியிடம் கெஞ்சிப் பேசுவான்
கட்டொடு சூர்குலம் வேல்கொண்டு வீசுவான்
ஞானக் குறுமுனிக்கு இன்னருள் செய்தவனை
நத்திச் சுப்பு ரத்தினத்தி
னற்ப தத்தி னைப்பு கலுவை (ஒ)
|
( 170 )
( 175 )
|
தலைவி
வண்டினைத் தூதூபோக்கல்
(ஐயா கணபதி உன்றன் அடிமலர் துதிசெய்தேனே
என்ற மெட்டு)
(இராகம்: உசேனி, தாளம்: ஆதி)
|
பல்லவி
மயிலேறி
வரச் செய்குவாய் எழில
மதுகரமே
குமரனை நீ (மயி)
அநுபல்லவி
வெயிலில்
வாடும் புழுவாய் மிகவும் துடிக்கிறேனே
விரைவில்
முருகன் வரா விடிலோ பிழைக்கிலேனே (மயி)
சரணம்
தொல்லை அடைகின்றதைச் சொல்லிக் குமரன்மனக் கல்லைக்
கரைத்து இனது நல்லிசையின் வல்லமையினால்
பல்லக்கில் ஏறிவரிற் பலநாழிகை கழியும்
வில்லிற் நொடுசரம்போல் விரைந்து பறந்தவரும்
(மயி)
வள்ளி தந்திரம்கற்ற கள்ளி வனத்திலன்று புள்ளி
மயில் வாகனன் நள்ளிருளில் உள்ள மயங்கித்
துள்ளி வரமருந்தே உள்ளிச்செய் தாளதுபோல்
எள்ளத் தனையிருந்தால் சள்ளைக்கு வழியுண்டோ (மயி)
சாரும் குகனைச்சென்ற
வாரம் தழுவி வெகு
தூரம்
சொல்லிம் அந்த நேரமே அதனை மறந்தான் ஆரம்ப நாள்முதல் கு மாரன் செயலிதுவே
அடுத்திரண்டு மூன்றுநாள் அகத்தினிற் றங்குகிலான் (மயி)
நாட்டி லிருந்திடுசீ மாட்டிகள் என்றனைப்போல்
வீட்டினதிபதியைக்
கோட்டுமலை மங்கையரிடம்
கூட்டி யனுப்பி விட்டுக் கூகூவென் றழுவாரோ
கேட்டிலிருந் தென்றனை மீட்டிட விரைந்துபோய் (மயி)
ஏதுகுகன் நினைத்தபோது வருவதெனல்தீது
நொடிக்குநொடிமாது கந்தன் மீது மயலாய்த்
தாது கலங்குவதால் தாஸன் சுப்பு ரத்தினம் ஓதும்
பண்பாடியக
மீதே நிலைத்திருக்க (மயி)
(இராகம்:
சஹானா, தாளம்: ஆதி)
பொன்னடியைத் தத்தருளப்பா
இப்போ தொப்பாய் நான்
உன்னடிமை யல்லவோ செப்பாய்
செப்பாய் செப்பாய்
சின்னமங்கையர்செய்
மனப்பே திப்பால் இப்பால் நான்
செய்வ தறியேன் மனக்கொ
திப்பால் அப்பால் எனாதுனது
(பொ)
பூதலத்தை
எண்ண இதயம் பயம் செயும் இதிற்
புலை நடை
கொள்விலை நயம் நயம் நயம்
ஆதலினின்
சீ தவிழியும் புயம் பெயும் நல்
அருள்தர
வேண்டுமிச்ச மயம் உயும் வயந்தெரிந்து (பொ)
ஏறுமயில் கார்கடல் என்னும்
வன்னம் துன்னும் அதில்
இதங்குகண் மீனென மின்னும்
மின்னும் மின்னும்
ஆறுகதிர் போல்முகம்
மன்னும் என்னெஞ் சின்னும் அதில்
ஆவல்கெடச் சேவைசெய
உன்னும் பின்னும் உன் அன்பனுக்கும்
(பொ)
சுந்தரி பராபரி மைந்தா
எந்தாய் கந்தா அர
விந்தனை ஜயித்தவா வந்தாள்
வாந்தாள் வந்தாள்
தந்தைக்கு மந்திர முவந்தே
தந்தோய் அந்தோ இங்குத தாஸன் சுப்புரத்தினம்
நலிந்தேன் சிந்தா குலந்தவிர்க்கப்
(பொ)
(பாலாபிஷேகம் பழநிமலைப்பன்
என்ற மெட்டு)
(இராகம்: இந்துஸ்தான்
பியாக், தாளம்: சாப்பு)
மாசி மகோத்ஸவ மாமிந்த
நாள் எங்கள்
மாயிலா ன னேவந்தனன்,
பாசாதி பந்தம் கடந்தோம்
கனித்தோமவ்
வீசன் தரிசனம் பெற்ற
தினால்
பராபரன்
மயூரன் பார்வதி குமாரன்
தரா
தலா தாரன் ஜெயவீரன் உதாரன்
பரிந்த குஞ்சரிவள்ளிக்
கதிய ஒய்யாரன்
பகையசுரரை வெல்லும்
சுரரதிகாரன்
பாலன்
வடிவேலன் ஞாலம்புகழ் மேலோன்
பகரும்
சதுர்மறை யுறையுநன் மூலன் (மாசி)
மயில்வாகனன்
கருணைப்ரவாகவி லோசனன்
மகாசீலன்
அனுகூலன் ஸாஜ்வல்யன் மிகுகோலன்
மதியணிந் தவன்மகன்
அதிக வைபோகன்
அதிகுண நிதிபதி கதிரும்
ஏகன்
அத்தன்பரி
சுத்தன்மிவு வித்தைப்ரசித்தன்
நித்தம்
புகழ் சுப்பு ரத்தின மிஷ்டன் (மாசி)
(நன்னபியா
ராமா என்ற மெட்டு)
(இராகம்:
தேசிய தோடி, தாளம்: ஏகம்)
கந்தப்பா வந்திப்போ தர
விந்தபா தங்கள் நீ தர
எந்தப்போ நாகுமென் றே
ஏங்கிமனம் வாடுகின் றேன்
சந்தப்பண் ஓதி நின் றேன்
சாருமயூர!
கெம்பீர! உதார குண! (கந்த)
உலகம் கனவெனில் அதிலும்
கலகம் மலையெனப் பயிலும்
தொலையா விசார முற்றேன்
தூயநிலைக் காசை வைத்தேன்
தலைமேல் கரங்குவித்தேன்
சரவணபவ குகநினதுச முகமிக உரைத்தேன் (கந்த)
மனமே குரங்கெனத் திரியும்
தினமே பவத்தொழில் புரியும்
தனமாதைச் சேர்க்க எண்ணும்
தாய்க்கிழவி வீட்டின் கண்ணும்
இனிமேற் புகாத வண்ணம்
ஈ கநற் போதம் உற்சாகம் ஐயா விரைவாய் (கந்த)
வள்ளிமேல் சிந்தைகொண் டன்பாய்ப்
புள்ளிமான் வந்ததோ என்பாய்
கள்ளத்தன
மாக வஞ்சி!
காதடைக்கு தென்று கெஞ்சி
அள்ளித் தருமாவைக் கொஞ்சி
அத்தனையிற்சுப்பு ரத்தின நற்கவி மட்டுக்கலந்துண்ணுவாய் |
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200)
( 205)
( 210 )
( 215 )
( 220)
( 225)
( 230)
( 235)
( 240)
( 245)
( 250)
( 255) |
நெஞ்சுக்குத் தெளிவு கூறல்
(இராகம்: நாட்டை, தாளம்: ரூபகம்)
|
வனிதையர்
தரு சுகமது பெரிதா? நெஞ்சேயுரைசெய்
தினமடியரை யடை வது பெரிதா?
கனமையல் தன்னில் அழுத்தல் சுகமா?
கலைகொண் டவிவே கமதைத் தொலையப் புரிவது
சுசுமா? [வனிதையர்] மகளிர் ஊட வருந்தல் இனிதோ,
மயிலவன் கழல் வாழ்த்தல் இனிதோ?
தொகைப் பொருள் நிலம் உடன் வருமோ?
தூய்மைப் படவே நீசெயும் ஒர் நற்றவமே வருமோ?
கற்பக நீழற் குளிர் ஓர் பால்-அரம்பையாதி
பொற்புடையார் நற் களி ஓர் பால்-சுரர் மனிதர்
ஒத்தெவரும் சொற்புகழ் ஓர் பால்-தினம் புசிக்கும்
புத்தமுதத் திற்சுவை ஓர் பால்-மிகவேதுலங்க
ஐரா வதமதன் பீடர்தனில் அமரவுற அமரரும் முனிவரும்
கைதாம் தொழுதிட ஒருகுடை அழகுடன் நிழலிட
அனையதோர்
இந்திர போகம் தரிலோர் முந்திரிநே ரந்தனில் வீ
ழுந்தரமாம் சொந்தளமுள தோ?-அந்தங்கடைதீர்
கந்தனையே சிந்தைசெயின் எந்தவித முந்தனியா
நந்தமிதிற் சங்கையுளதோ?- அருளாலென் அப்பன்
உலகத்தினை உண்டாக்கிடல்
உலகத்தையிர க்ஷித்திடல்
உலகத்தை மறைத்திடல்இப்
பலபற் பல அற்புதமிடு
கங்கைவைத்த வான்சடைமேல் திங்கள்வைத்து
மங்கையையோர்
பங்கில்வைத்தன் மகனைக்-குற
நங்கையணை மார் பகனை-ஷண்
முகனைக்-குகனை
இப்பவத்தினைத் தொலைத்திட இமையளவும் உளமலைவறச்
சுப்புரத்தினத்தி னற்ப தத்தினிற்று திப்பதைவிட (வ)
(இராகம்:
தேசிகம்; தாளம் ஆதி)
(குமாரா
குருபராசிவனே என்ற மெட்டு)
(எனினும்
அதன் முன் கஜலும் துரிதமும் சேர்க்கப்பட்டிருக் கின்றன-)
உளமொத்த ஒருவனிடம் ஒருத்தி போகம்
விளைவித்த விந்துசுரோணிதமேற் பாயக்
களிமொய்க்க அவள்வயிற்றில் கருநிறைந்து
வளர்பத்து மாதத்தில் மதலையாகி
(துரிதம்)
மலர்புலி தனிற்பிறந் தனுதினம் பிணிகளில்
உலவியைந் துவயதை யடையுமிச் சிறுவனைத்
திருவுளத் தெண்ணா-திருந்தால்
செய்வ தேதெண்ணா!-உமையாம்
பரை தருந்தேனே-மயில்மேல்
பவனிவரு வோனே-என்கோனே
(கஜல்)
குருவையடைந்துயர்கலைகள் கற்றுத் தக்க
பருவமுறு மங்கையர்கள் மோகம் கொள்ளும்
உருவமொடு திருவனையாள் தனைமணந்து
மருவிடுசு கோததியில் ஆழ்ந்து பின்பு
(துரிதம்)
வளநிதி வருவித மதில்மன தினைவிட
விளைவன கெடுதி கள் பலபல வாகுமிந்
நலியினாலுருகா - திருக்கும்
நிலையருள் முருகா!- தமிழ்த்தேன்
குலவுமலர் வாயா! - என்நேயா!
குளிர்செய் காங்கேயா! - நற்றூயா!
(கஜல்)
வாலிபம்போய் வலிவெலாம்போய் நரைமிகுத்துக்
காலிருந்த இடநோக்கித் தலையும்சாய
மூலைவிட்டு நகர்வதெனில் முனைந்துகையிற்
கோலையெடுத் தூன்றநடை கோணிவீழச்
(துரிதம்)
சிறுவய தினரிதை நகைபுரி கையில்மன
முறுசின மதில்வசை மொழிவர் இவை பலவும்
வருவதன் முன்னே-நின்பார்வை
வசத்திலாக் கென்னை-கயிலா
புரியினோன் பாலா!-நன்மூலா
பூணுங் கதிர்வேலா!-நற்சீலா
(கஜல்)
நாச் சற்றும் நிலைநிற்க மாட்டாது நனிகுழறப்
பேச்சற்று விழியினிலே ஒளியற்றுப் பிரக்ஞையற்றுப்
போச்சுதுயிர் என்உற்றார் பிடிப்பற்று வாடுமுடல்
மூச்சற்றுப் போகுமுன்னே இவ்வேழை மகனுக்கு
(துரிதம்)
முழுமதி நிகரறு முகமொடு விழி மலர்
அழகொடு பெருகிய அருளோடு விரைவிலென்
அப்பனே வந்தாள்-இப்போதே
மெய்ப்பதந் தந்தாள்-உன் தாஸன்
சுப்புரத்நந் தான்-தருந்தேன்
ஒப்புமாறே நான்-சொரிந்தேன். (அப்பனே)
(இராகம்:
அசாவேரி. தாளம்: ஆதி)
பச்சைமயி லேறிவருவான்-அன்பர்கள் குறை
அத்தருண மேகளைகுவான்-ஷண்முகனொரு (பச்)
நிச்சயமி தேததியி
ணிற்சரண மேயடைவிர்
அச்சமிலை வேலவனி
னிச்சையினை நீர்பெறிலோர் (பச்)
நச்சுவடி வேலுமுடையான்-வெம்பகைவரைப்
புய்த்துடலை வாரியெறிவான் ஷண்முகனொரு (நச்)
மெச்சுவிக் கீரனது
பத்தியினி லேயிளகி
மொய்த்தொரக்கன் சிரநி
லத்தினில்வி ழச்செய்யுமொர் (நச்)
தொத்துகிளி போல் விரைகுவான்-உண்மையிலவன்
பத்தருளமே யுறைகுவான்-ஷண்முகனொரு (தொத்)
முத்துநிகர் வாய்க்குறவர்
பெற்றகுற மாது தரும்
அத்தினைதே னோடுமவள்
பொற்றனமு மேயுணவொர் (தொத்)
கொத்தடிமை யாய் நலிகுவார்-விண்ணவர்சிறை
முற்றுமவர் மீள அருள்வான்-ஷண்முகனொரு (கொ)
பொய்த்த ஒரு சூரர்குலம்
அத்தனை ஒரேநொடிவி
டுத்துநிரு மூலமிடு
சுப்புரத்தினம் புகலும் (பச்) |
( 260)
( 265)
( 270)
( 275)
( 280)
( 285)
( 290)
( 300)
( 305)
( 310)
( 315)
( 320)
( 325)
( 330)
( 335)
( 340)
( 345)
( 350) |
வேல்
வண்ணம்
(இராகம்: இந்துஸ்தான் பியாக், தாளம்-ஏகம்)
|
தருமங்
குன்றுந் தருணங் கண்டன் றே நே ரே
தவிரென் கந்தன் பகைகண் டஞ்சும்
கூர் வேல் வேல்
எரிபஞ் சுங்கண் புவியஞ் சுந்திண்
சூர் மார் பே
இருதுண் டங்கண் டுயிர்சித் தும்பைந்
தார்வேல் வேல்
கிரவுஞ் சன்றன் பெருமங் கந்துண்
டா மா றே
கேடவும் பண்டங் குமைதந் தின்பங் கூர் வேல் வேல்
திருவும் பண்புங் கலையுந் தந்திங்
கே வாழ் வே
செயவென் றன்பங் கினில்வந்
தண்டுஞ் சீர் வே லே
வரைதங் குஞ்செங் கதிரும் பொங்கும்
பா ரீ ரோ
வளரண் டங்கண் டுயருஞ் செம்பொன்
தோய் வேல் வேல்
அரிதென் றண்டும் கருமம் பஞ்சென் றோ டா தோ.
அலைபொங் குந்தண் கடலுண் குந்திண்
கூர் வேல் வேல்
பரைமைந் தன்கந் தனுரந் தங்குந்
தோள் மே லே
பழகுஞ் செஞ்சந் தனமிஞ் சுந்தண்
சீர் வேல் வேல்
மரையென் குங்கஞ் சமுகந் தங்கும்
தூயோர் வாழ்
மயிலந் தங்கும் சுரர்தம் பங்கம் தீர் வேலே
|
(
355)
( 360)
( 365)
( 370) |
மயில்
(இராகம்: அசாவேரி, தாளம்: சாப்பு)
|
குகனேறும்
மாமயிலே-ஷண்
முகனேறும் மாமயிலே
குளிர்வா னிடையே குவிதா ரகைபோ
லொளிர் தோ கையிலே சுடர்கா சுக ளார் (குக)
இறகின்
விரிவிங் ககிலம் ககனம்
பிறவும் புகஅங் கிடமின் றெனுமென் (குக)
நவரத் தினமுற் றிடுபொற் பணிபெற்
றுயர் நர்த் தனமிட் டபத துடன்ற (குக)
கொந்திடும் சஞ்சலம் கண்டதும் சென்றிடும்
சுத்தரம் தன்வணம் சுந்தரம் சிந்துறும் (குக)
அணி வயி ரவலகு தலைமிசை எழில்முடி
மணியென ஒளிவிழி மரகத மலைநிகர் (குக)
மணிமா முடிமீ தினி னீள் உலகே
அணிசே டனைஓர் புழுவா யெணுவாய் (குக)
மயிலமே உரைசுரா திப எனாதெ திரில்வா
வெயிலிலே புழுவெனா உருகினே னருளவா (குக)
சுப்புரத் தினற் சொற்குவப் புற்றெனக்
கிக்கணத் திற்சுகத் தைக்கொடுத்துக்கொணற்
(குக) |
( 375)
( 380)
( 385) |
வாழ்க
குகன் பாத மலர்வேல் மயில் சேவல்
சூழ்க
நனியின்பம் தொல்புவிவான்-வீழ்கபுனல்
மல்கவளஞ் செந்நெல் வளர்க அறம் வேள்வி
வெல்கஇனி மைத்தமிழின் வீறு
|
( 390)
|
|
|
|