பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

அவள் மேல் காதல்!


ஓடிவா ஓடிவா ஓடிவா
ஓடிவா வானம் 
வேடிக்கைக்  
வாடிக்கை  
தேடினேன்  
நாடினேன்

எண்சுவைக் 
செந்தமிழ்ப் 
கேட்டுக்  
;நல்வழி  

பெண் நடக்கு 
அன்னம்சொக்கு 
கண்சி மிழ்க்கு 
மின்னல் கக்கு 

இங்கு நிற்கின் 
எங்கு வைக்கின் 
அங்கு நிற்கின்  
அன்புகேட்கின்  
பாடியே!   -- 
காரி      --  
காரி      -- 
ஊரி      -- 
கோரி     -- 

கூட்டு     -- 
பாட்டு     --  
கேட்டு    --  
காட்டு     -- 

மாம்      -- 
மாம்      -- 
மாம்      --  
மாம்      -- 

றேன்     -- 
றாய்?     -- 
றாய்      --  
றேன்     --  

விரைவில் (ஓடிவா)
இங்கு
உன்னைத்
லின்பம்
விரைவில் (ஓடிவா)

நின்
நான்
வந்தேன்
விரைவில் (ஓடிவா)

கண்ட
இரு
அவை
விரைவில் (ஓடிவா)

கண்ணை
நீ
உன்
விரைவில் (ஓடிவா)




( 5 )





( 10 ) 






( 15 )

வந்தால் வரச்சொல் ...
... தந்தால் தரச்சொல்

கண்ணுக்கொரு வண்ணப் புறா
காதுக்கவள் கானக்குயில்
பெண்ணுக்கர சானவளை
வந்தால் வரச்சொல் -- எனக்கே
பேச்சுப்படி ஆசை முத்தம்
தந்தால் தரச்சொல்!

உள் நாட்டுச் சிற்றாடை
ஓரப்பட்டுப் பாவாடை
கண்ணாட்டி கட்டிப்போக
வந்தால் வரச்சொல் -- கணக்கில்
கண்டபடி ஆசைமுத்தம்
தந்தால் தரச்சொல்!

அண்டை வீட்டுச் சின்னகண்ணே
அன்புடைய பொன்னுக் கண்ணே
வண்டிக்கே தவறிடாமல்
வந்தால் வரச்சொல் -- மிகவும்
கண்டிப்பாய் வந்துமுத்தம்
தந்தால் தரச்சொல்!

கொண்டையிலே செங்கோங்கு
தண்டையிலே தென்பாங்கு
கொண்டவளைக் கண்டவுடன்
வந்தால் வரச்சொல் -- அவளைக்
கண்டிப்பாய் வந்துமுத்தம்
தந்தால் தரச்சொல்!

நாட்டுக்கு மீட்சியடி
நம் தமிழர் ஆட்சியடி
நாட்டச்செல் வேன்அதற்குள்
வந்தால் வரச்சொல் -- எனக்கே
நல்லபடி ஆசைமுத்தம்
தந்தால் தரச்சொல்!

காட்டுப் புலியடி நான்
கட்டி என்னைச் சிறையிடுவார்
கூட்டுக்குள் போகு முன்னே
வந்தால் வரச்சொல் -- பேசிக்
கொண்டபடி ஆசை முத்தம்
தந்தால் தரச்சொல்!


( 20 )





( 25 )




( 30 )





( 35 )





( 40 )





( 45 )





( 50 )

மருமகள் பூரிப்பு
 
(சிந்து கண்ணி)

                         
தென்றல் அடிக்கையில் பச்சிளங் கீற்றுச்
சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல்போல்
இன்றைக்கு நீகொண்ட பூரிப்பின் காரணம்
என்னடி மின்னல்இ டைச்சிறுக்கி?
நின்ற உன்கால்கள்நி லைக்கவில் லைகடல்
நீராய்த் தெளிந்தது பொன்னுடலும்
அன்றைக்குச் சென்றவன் என்மகன் வீட்டை
அடைந்த மகிழ்ச்சித்திருக்கூத்தோ?

மாற்றி அணிவதும் சேலையி னைமலர்
வாங்கி அணிவதும் கூந்தலிலே -- ஒரு
காற்றென ஓடிச்சி ரிக்கும்மு கத்துக்குக்
கண்ணாடி காட்டிப்பின் மீளுவதும்
நேற்றில்லையே இன்று பூரிப்ப தென்னடி?
நீள்புரு வத்துநி லாப்பிறைச்சி
வேற்றூர்க்குச் சென்றவன் என்மகன் வீட்டுக்கு
மீண்ட மகிழ்ச்சித்திருக்கூத்தோ?

கறிகள் சமைத்தபின் தெருவினில் விற்றிடும்
காய்களை ஓடிஅ ழைப்பதுவும்
சிறுவிரல் மோதிரம் பார்ப்பதுவும் பார்த்து
மகிழ்வதும் செவ்விதழ் சேர்ப்பதுவும்
அறையினை கோக்கலும் நேற்றில்லை யேநீ
அப்படி பூரிப்ப தேதுக்கடி?
பிறநகர் சென்றவன் என்மகன் ஊர்வர
பெற்றம கிழ்ச்சித்திருக்கூத்தோ?

கச்சையை நோக்கலும் கண்கள் மலர்வதும்
கைவளை யைச்சரி செய்வதுவும்
மொச்சை உரிக்கையில் முன்கட்டில் ஓடி
முழங்கும் சிலம்படி மீளுவதும்
பச்சைப் பசுங்கிளி தானெனக் கொஞ்சலும்
பார்த்தில னேஇன்று பூரிப்பதேன்?
அச்சீமை சென்றவன் என்மகன் வீட்டை
அடைந்தமகிழ்ச்சித்திருக்கூத்தோ?



( 55)




( 60 )





( 65 )




( 70 )





( 75 )





( 80 )




( 85 )

அவன் கலங்கரை விளக்கடி

பட்டிமகன் போனவாரம்
கடற்கரை ஓரம் -- எனைக்
கிட்டிவந்தான் கெஞ்சி நின்றான்
ஒருமணி நேரம்.

கட்டழித்தான் தொட்டிழுத்தான்
கட்டி அணைத்தான் -- இளங்
காளையவன் என் உதட்டுப்
பாளை அவிழ்த்தான்.

முன்னிருப்பார் பின்னிருப்பார்
என்ன நினைப்பார்! -- வாய்
முல்லைக் காட்டின் அண்டையிலே
முத்தம் விளைத்தான்.

முன்னிலவும் எழுந்ததுவே
முடிமுடி என்றேன் -- என்
முகநிலவின் குளிரிலே தன்
முகத்தை நனைத்தான்.

கலைந்தகுழல் திருத்திவிட்டான்
கன்னத்தைத் தொட்டான்
குலைந்த ஆடை திருத்திவிட்டான்
இன்னமும் தெவிட்டான்.

விலங்கறுத்தே தமிழ்நாட்டை
மீட்க நடந்தான் -- அவன்
கலங்கரை விளக்கடி என்
காதல் நிலைக்கே.                      




( 90 )






( 95 )





( 100 )





( 105 )





( 110 )

அவன்மேல் நினைவு

நான்கு பக்கமும் வேடர்சுற்றிட
நடுவில் சிக்கிய மான்போல் -- இங்(கு)
ஏன் பிறந்தேன் இவர்கள் வீட்டில்
கரையில் இட்டதோர் மீன்போல்!

நீரை மொண்டிடப் போகையில்அவன்
நினைப்பு வாட்டிடும் நெருப்பு -- நல்ல
மோரை மொண்டிடும் மொந்தையிலேஅவன்
கலகல எனும் சிரிப்பு!

எடுத்த சுள்ளியில் அடுப்பெரிக்கையில்
எழில்எழில் அவன் எழிலே -- பின்
இடைக்கிடை எனைக் குலுக்கிடும் அவன்
இயற்றிய கலைத் தொழிலே!

அசைப்பினில்அவன் அவன்அவன்என
அருகிற் சென்றதும் உண்டு -- அட,
நிசத்தினில் அந்த கருக்கலில்தலை
நீட்டிய கதிர் கண்டு.

சிறக்க உண்ணடி பழங்கள் என்றெனைத்
திருத்த வந்தனள் அக்கை -- சீ
பறக்க மட்டிலும் சிறகெனக்கிலை
பழம் இதுவெறும் சக்கை!






( 115 )





( 120 )





( 125 )




( 130 )

அன்புத் திருமணம்

ஓட்டிப் போகமறந் தானா -- நம்மை
ஒன்று சேர்க்கநினைத் தானா

மாட்டுக் காரன்வந்து நம்மை -- இடை
மறிக்கு முன்னர்இரு நெஞ்சும்
கூட்டி அன்புபரி மாறி -- இன்பம்
கொள்க என்றுவெள்ளைக் காளை
பாட்டுப் பாடிநின்ற போது -- விடை
பகரும் நல்லதொரு கறுப்பு.

நாளும் பார்த்துவரு கின்றோம் -- நம்
நாட்டு மனிதர்மன அழகை
மேள தாளத்துடன் ஐயர் -- மேல்
வெள்ளைக் கயிற்றினொடு குந்தி
ஆள னிடத்துமொரு கயிற்றை -- கொடுத்
தவளின் கழுத்திலிடச் செய்வார்
காளையே அருமை மாமா -- அந்தக்
கயிற்று மணம்புரிந்து கொள்வோம்.

உள்ளம் ஒப்புவது மணமாம் -- இந்த
உண்மை தனைஅந்த மனிதர்
எள்ளத் தனையும்உணர்ந் திலரே -- நம்
இனத்தைத் கண்டுமவர் திருந்தார்!
தள்ளி விடடிஅதை மச்சி -- என்று
சாற்றி நின்றதுநற் காளை
வெள்ளப் புனல்நடக்கும் ஓடை -- கரை
வீசிநடக்கும் குளிர் காற்றில்
அள்ளி இரண்டும்நுகர்ந்தனவே -- பேர்
அன்புத் திருமணத்தின் பயனை.






( 135 )





( 140 )




( 145 )





( 150 )




( 155 )

அவன் வரவில்லை

மங்கைமா ரோடு கூடி
மடுக்கரை செல்லு கின்றாய்
தங்கமே என்விண் ணப்பம்
தனித்துவா என்ப தாகும்.
இங்ஙனம் சொன்னான்; சொல்லி
எழிலுறு முகத்தை இங்கே
பொங்குதா மரையில் காட்ட
பொன்னுடல் மறைத்திட்டானே!

குடத்தினை இடையில் தாங்கிக்
குளிர்புனல் மடுவைச் சார்ந்த
இடத்தினை அழகு செய்ய
தனித்துவா என்று கூறித்
தடத்தில்நான் வருந்தும் வண்ணம்
தடந்தோளைக் குன்றில் வைத்தான்!
குடத்தேனை நிகர்த்த மெய்யைக்
கொண்டுபோய் மறைத்திட்டானே!

வெறுத்திட அயல்மங் கைமார்
மேவிட வந்தால், உன்பால்,
குறுக்கிட்டுப் பேச அன்பிற்
குளித்திட முடியா தென்றே
அறுத்துப்பே சியதால் வந்தேன்
அழகாடு நடையை அன்னோன்
தருக்குறு களிற்றில் வைத்தான்
தன்னுடல் மறைத்திட்டானே!

வரிப்புலி போன்ற நீழல்
மண்ணிலே காட்டும் ஆல
மரத்திடை தனித் திருந்தால்
வரத்தடை இல்லை என்று
விரிப்புறச் சொல்லி என்றன்
விருப்பத்தைப் பெருக்கி னான்;தான்
சிரிப்பைமுல்லைபால் காட்டித்
திருமேனி மறைத்திட் டானே!

சதிர்வரும் நடையும் உன்றன்
தனிமையும் இனிக்க அங்கே
எதிர்வரக் காத்திருப்பேன்
மடுக்கரை வாராய் என்றான் !
முதிர்தரு காதல் பொங்கி
முன்னங்கை வளையும் சோர்ந்தேன்
கதிரில்தன் பார்வை காட்டிக்
கனியுடல் மறைத்திட்டானே!




( 160 )





( 165 )




( 170 )





( 175 )




( 180 )





( 185 )





( 190 )




( 195 )

 

மதிமுகம்

மாலைப் பொழுதினிலே -- தேனை
வண்டு நுகர்கையிலே
சோலைக்குள் ளேபுகுந்தேன் -- என்
சுந்தரி அங்கில்லை!

பாலைப் பழிப்பதுவாம் -- அந்தப்
பாவையின் சொல் லெல்லாம்
வாலைக் குமரியவள் -- என்றன்
மாண்பினுக்கு ஏற்றவளாம்!

வாளினை வென்றகண்ணாள் -- வாளின்
வயிர நெஞ்சுடையாள்
பாளைச் சிரிப்பினிலென் -- மனமோ
பறிகொடுத் திருந்தேன்!

சோலையில் எவ்விடத்தும் -- அந்தச்
சுந்தரி காணவில்லை

காலை வலித்ததல்லால் -- என்றன்
கண்பெற்ற தொன்றுமில்லை!

அந்தி இறுதிகண்டேன் -- என்றன்
அன்பினைக் காணவில்லை
வந்த இருள்தனிலே -- வானில்
வந்தது வட்டநிலா!

மாசில் முகங்கண்டேன் -- அவளின்
மதிமுகம் கண்டேன்
பாசம் அதிகரித்தே -- விண்ணில்
பாய்ந்ததென் காதலுள்ளம்!




( 200 )






( 205 )





( 210 )






( 215 )





( 220 )

உண்மையில் கசப்பா?

குறும்புடன் அவள் பார்த்த பார்வை
குலுக்கி விட்டதென் அகத்தை -- அந்த
நறுமலர்க்கொடி மறைத்து விட்டது
நகைத்திடுமவன் முகத்தை!

வெடுக்கென என்றன் சடைப்பின் னல்தனை
இழுத்த திக்கினைப் பார்த்தே -- அத்
துடுக்கன் அங்கொரு மரத்தில் தன்னுடல்
தோய்தல் கண்டுளம் வேர்த்தேன்!

தவித்து நிற்கையில் அலரி மொட்டினை
தலையில் விட்டெறிந் திட்டால் -- விரல்
குவித்த கையினை முழுதும் கண்டிட
குளிர் விழிக்கவன் எட்டான்!

பூவும்பு தர்களும் தோளிற்ப டும்படி
போயினன் அந்தமட் டோடு -- என்
நாவும் துடித்தது தோளும்துடித்தது
நான்தனி யானபிற்பாடு.






( 225 )





( 230 )





( 235 )

விடியுமுன் குறுநகை

விடிந்தது! தங்க வெய்யில் வந்தது!
மடிந்தது! காரிருள் மடிந்தது பனிப்புகை!
பசும்புல் கதிரொளி பட்டு விளங்கின
விசும்பிற் காக்கைகள் பெண்ணென விளங்கின!

சேவற் கோழி தெருவில் பெடையினை
ஆவற் கொருமுறை அணையும் தேவைக்குத்
தீனி பொறுக்கித் திரியும் அடடா
வானம் பரிதி!'' ஆயிரம் வண்ணம்
கண்ணெதிர் காட்ட வந்ததோ என்னவோ!

தெருவில் நன்னிழல் சேர்க்கும் மரங்கள்
இருபுறம் தளிரொடு தங்க மெருகு
பெருக நின்றன. குருவிகள் பாடின
அருகில் தென்னைகள் பாளைகள் அவிழ்ந்தன.

ஒளிபடும் காலையில் ஒலித்தது சிற்றூர்!
எளிய உழவர்கள் ஏரொடு மாட்டொடு
தம்மில் இனிமைத் தமிழற் பேசி
அம்மருங்கு வரிசையில் அகன்றனர்! பெண்கள்
முன்றா னையினைமுன் னிழுத்துச் செருகி,
அன்றாடத் தொண்டிற் சென்றனர்; ஆயினும்
இன்னும் படுக்கைவிட் டெழாத பொன்னி
தன்னுளம் பறித்த பொன்னனை எண்ணி
வெயிலிற் புழுப்போல் மின்னிடை ஓடிய
அயில்விழி நீர்பெற அழுது புரண்டாள்!

இன்னும் பொன்னி எழாத தென்ன?
நன்னீர் எடுக்க நாடாத தென்ன?
நீராடி வந்து நாரோடு பூக்கள்
சீரோடு கட்டிச், சீவிக் குழலில்
சூடாத தென்ன? தோழிமா ரோடுசென்
றடா தென்ன? அன்னைஇவ் வாறு
கருதி எதிர்வந்து கண்ணே என்றாள்
நடுங்குடல் காட்டாது நங்கை எழுந்து
மயக்கம் என்றாள்; மங்கைமெய் சொன்னாள்.

சட்டி பானை தவலை செம்புகள்
தொட்டவ ரில்லை, துலக்கியோர் இல்லை!
அடுக்களை பெருக்கா தழகிலா திருந்தது.
எடுக்க வில்லை அடுப்புச் சாம்பல்
அன்னை தன்மகள் அருகில் நின்றவள்
பொன்னியே 'குந்துநீ' என்று புகன்று
தானும் அமர்ந்து தலைசாய்ந் திருந்தாள்
மயக்கம் என்று மங்கைமெய் உரைத்தாள்.
என்ன மயக்கம்? என்ன மயக்கம்?
என்ன மயக்கம்? என்றுகேட் டாள்தாய்.
காரணம் சொல்லக் கார ணத்தால்
தாய்உளம் துவளத் தலைசாய்த்திருந்தாள்

அஞ்சல் அஞ்சல் என்ற ஒருகுரல்
வஞ்சியின் காதில் வீழ்ந்தது; வஞ்சி,
அஞ்சல் அம்மா அஞ்சல் என்று
விரைவில் எழுந்து வெளிப்புறம் ஓடி

அஞ்சலைப் பெற்றாள் அதனைப் படித்தாள்.
பொன்னி படிக்கையில் சின்ன விழிகள்
மின்னக் கடையுதடு கட்ட விழ்ந்து
முத்துக் காட்ட முன்னின்ற தாயை,
மங்கை நோக்கி உன் மருமகன் நாளைக்
காலையில் கட்டாயம் வருமாம்! அம்மா!
புகைவண்டி நிலையம் புதுமாட்டு வண்டியை
அனுப்ப வேண்டுமாம் அறிக என்று
கூறிப் பறந்தாள் கொல்லை நோக்கி!
துலக்கின பானை தூக்குச் சட்டிகள்
குடங்கள் செம்புகள்! கொட்டில், அடுக்களை
பெருக்கி அடுப்பை எரிக்கச் சமையல்
முடித்துத் தாயிடம் முடிவு கூறினாள்.
கடிதில் தாய்தன் கணவனுக் காகக்
கொல்லைக்குச் சோறு கொண்டு போனாள்!

எப்போ தன்னை இங்கு வருவாள்?
எப்போது மாலை வேளை ஏகிடும்?
அழகிய மணியிருள் எப்போ தகலும்?
விடியுமுன் அப்பா விழிக்க வேண்டும்
வண்டி ஓட்டியை வாஎனல் வேண்டும்
அண்டைக் குடிசையில் அவனோ தூங்குவான்!
கூச்ச லிட்டுக் கூப்பிட வேண்டும்
பேச்சுக் கொஞ்சம் பேச வேண்டும்
புதுமாட்டு வண்டி புகைவண்டி நிலையம்
இடக்கில் லாமல் ஏக வேண்டும்!
அத்தான் வண்டிவிட் டங்கே இறங்கி
மெத்த விரைவாய் இவ்வண்டி மீது
குந்துவார் கழுத்து மணிகள் குலுங்க
இந்தா இந்தா என்றவன் அதட்ட,
வண்டி வந்து வாயிலில் நிற்கும்!
அண்டி வந்தெனை ஆரணங் கேஎன்
அழைக்கும்! நானோ அறையிற் பதுங்கி
இழுப்பும் பறிப்புமாய் ஏனென்று சொல்லுவேன்
என்று பொன்னி எண்ணிக் கிடந்தான்.

மறுநாள் விடியுமுன் மங்கை
குறுநகை காட்டினாள் கொழுநனுக்கெதிரே?




( 240 )




( 245 )






( 250 )




( 255 )





( 260 )




( 265 )





( 270 )




( 275 )




( 280 )







( 285 )




( 290 )




( 295 )





( 300 )




( 305 )




( 310 )




( 315 )





( 320 )

முது மாலைப் போதில் ... !


மலர்ந்ததடி அல்லி -- அதோ
வந்ததடி நிலவு
குலைந்ததடி என்பொறுமை கொல்லாதே!
கொஞ்சிவிளையாட அட்டி சொல்லாதே

விலகிற்றடி வெப்பம் -- இதோ
வீசுகின்றது தென்றல்
தலைசுற்றிடும் என்னாசை தட்டாதே!
தாவுங்கையை விலக்கிஎன்னைத் திட்டாதே!

கமழ்ந்ததடி முல்லை -- இதோ
காணடிநம் தனிமை
அமிழ்துகொடு நின்உதட்டை ஆட்டாதே!
அன்புமறைத்து வன்முகமும் காட்டாதே!

நமக்கென்னடி குறைவு -- இது
நல்லமுதிய மாலை
தமிழ்உண்டு காதலுண்டு தள்ளாதே!
தழுவுந்தோறும் மகிழ்ச்சிபொங்கித் துள்ளாதே!







( 325 )





( 330 )





( 335 )