பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

கடவுளைக் கண்டீர்

தாய் --

    பாம்பு கடித்ததம்மா பச்சைக் குழந்தையினை
    மாம்பூ மலையில் மருந்திருக்கும் என்கின்றார்
    நீதான் மருத்துவச்சி நீயதனை நன்கறிவாய்
    தீது வருமுன்னே தேடிவந்து தந்திடுவாய்.

மருத்துவிச்சி --

    சிட்டாய்ப் பறந்திடுவேன் சேயிழையே அஞ்சாதே
    கட்டாயம் பிள்ளையினை காத்திடுவேன் அஞ்சாதே
    கூடக் கணவனையும் கூட்டிநான் போய்வருவேன்
    காடு செடிதாண்டிக் கடிதுநான் போய்வருவேன்

                                    [போதல்]
மருத்துவன் --

    எங்கேநீ சென்றிருந்தாய்என்னருமைக் கண்ணாட்டி?
    தங்கமே நீபிரிந்தால் தாங்கிடுமோ என்னுள்ளம்?

மருத்துவிச்சி --

    தெற்குத் தெருவினிலே செங்கேணி ஆச்சிபிள்ளை
    பற்கிட்டித் தொல்லைப் படுகின்ற நேரமிது!
    பாம்பு கடித்ததத்தான் பச்சிலைக்குப் போவோமே
    மாம்பூ மலைநோக்கி வாராய் விரைவாக

                                [போகிறார்கள்]
    வெய்யில் நடப்பாரை வேகடிக்கும் நேரமடி
    ஐயோ நடுவழியில் அல்லல் மிகுந்ததடி

மருத்துவிச்சி --

    அல்லல் மிகுந்தாலும் அத்தானே ஆச்சி்பெற்ற
    செல்வனைத்தாம் காப்பாற்றச் செல்வோம் விரைவாக
    செங்காடு தாண்டிச் செங்காட்டை நாமடைந்தோம்
    வெங்காயக் காட்டை விலக்கி அதோதெரியும்
    மாம்பூ மலையில் மருந்தெடுக்க மாட்டோமோ?
    பாம்புக் கடிவிலக்கும் பச்சிலையைத் தேடோமோ?

                                 [போகிறார்கள்]
மருத்துவிச்சி --

    அத்தான்என் காலிலே ஆணிமுள் தைத்ததுவே
    தைத்த இடத்தினின்று செங்குருதி சாய்ந்திடுதே

மருத்துவன் --

    கண்ணே மணியேஎன் கட்டிக் கரும்பனையாய்
    வண்ணாத்திப் பூச்சி இறக்கைபோல் வாய்ந்தஉன்
    மெல்லடியின்உட்புறத்தில்வேல்பாய்ந்தால்என்னாகும்?
    சொல்லடிநீ மேல்நடக்கத் தோதுபடு மோஎன்ன?
மருத்துவிச்சி --

    ஆணிமுள்ளை வாங்கிவிட்டேன் அத்தானே புண்வாயைப்]
    பேணத் துணிகிழித்துக் கட்டிவிட்டேன் பேச்சென்ன?
    இன்னும் விரைவாய் நடப்போம் இளையானைத்
    தின்னுமந்த நஞ்சுதனைத் தின்ன இலைபறிப்போம்

                                    [போகிறார்கள்]
மருத்துவன் --

    புள்ளிச் சிறுத்தைஒன்று போர்முரசு கொட்டியது
    அள்ளிச் சொரிந்ததுவே நம்மேல் அனல்விழியை

மருத்துவிச்சி --

    அத்தானே அத்தானே என்அண்டை வந்திடுவாய்
    செத்தாலும் சாகின்றேன் நீ எதிரே செல்லாதே
    பாயும் சிறுத்தைமேல் பாச்சிடுவேன் என்கத்தி!
    நாயின் விலாவின் நடுப்கும் என்கத்தி!

மருத்துவன் --

    சாக்காட்டுக் கஞ்சும் சழக்கன்நான் இல்லையடி
    நோக்காட்டுக் காலோடு நூலிழையே செல்லாதே
    வெள்ளரிக்காய் என்கத்தி வீச்சுக்கு நிற்குமா?
    தள்ளடிநீ அச்சத்தைத் தங்கடிநீ இவ்விடத்தில்!

மருத்துவிச்சி --

    கத்தியினை மேலெடுத்துக் காட்டினையோ இல்லையோ
    பத்தரிசிக் கோடுகின்ற பார்ப்பான்போல் ஓடிற்று!
    வந்த சிறுத்தையது வாலடங்க ஓடியது.
    முந்தநாம் சென்று முடிப்போம் நமதுபணி.

                                    [போதல்]
மருத்துவன் --

    செங்குத்தாய் நிற்குமலை! தேனேநீ பார்த்தேறாய்
    அங்குள்ள பள்ளத்தை ஆயிழையே பார்த்துநட!

                            [ஏறிப் போகிறார்கள்]
மருத்துவிச்சி --

    அத்தானே நாம்தோடும் அம்மருந்தைக் காணாமே.
    எத்தொல்லை பட்டேனும் இங்கதனைத் தேடுவமே!
                                [தேடுகிறார்கள்]

மருத்துவன் --

    பாராய் இளமானே பச்சைப் பசேலென்று
    நேரே இலைகள் நெருங்கப் படர்ந்தகொடி
    எட்டா உயரத்தில் உள்ளதடி என்மயிலே
    நெட்ட நெடும்பாறை நீளுச்சி மேலேறிக்
    கையால் பறிக்கையிலே கால்தவறி விட்டாலோ
    பொய்யாகிப் போகுமடி வாழ்வு புதுநிலவே!

மருத்துவிச்சி --

    நானேறு கின்றேன் நவின்றி நீயிருப்பாய்
    ஊனெடுத்தோம் என்ன பயன் ஊருக் குழைப்போமே!

மருத்துவன் --

    கட்டாணி முத்தேஎன் காதலியே நீபொறுப்பாய்
    எட்டா இலைதன்னை எட்டிப் பறித்திடுவேன்
                          [ஏறுகிறான், பறிக்கிறான்]
மருத்துவிச்சி --

    பாறை வழுக்கிடுதே பாவையே என்செய்வேன்
    வாராத சாக்காடு வந்ததடி வந்ததடி

[விழுகிறான், மனைவி முதுகால் தாங்குகிறாள். இருவரும்
தரையில் வீழ்ந்து அடிபட்டுக் கிடக்கிறார்கள் -- எழுகிறார்கள்]

    மெல்ல நடப்போம்நாம் வேளையுடன் வீடுசெல்வோம்
    சொல்லிய வண்ணம் சுருக்காக நாம்செல்வோம்
    பாம்பால் கடிபட்ட பச்சைக் குழந்தைக்கு
    நாம்போய் உயிர்மீட்போம் நல்லத்தான் வாராயோ?

                                  [போகிறார்கள்]
தாய் --

    வந்தீரோ ஐயா இலைகொண்டு வந்தீரோ?
    தந்தால்என் பிள்ளைத் தலையேறும் நஞ்சுதனை
    நீக்கலாம் இல்லைஎனில் நீங்குமே பிள்ளையுயிர்
    வாய்க்குள் இலைச்சாற்றை வார்க்கவோ
    சொல்லுகின்றீர்?
              [இலைச்சாற்றைப் பிள்ளைக்கு வார்க்கிறாள்]

மருத்துவிச்சி --

    பிள்ளை விழித்ததுவே பெற்றவளே பார்த்தாயா
    துள்ளி எழுந்ததுவே தூயவளே உன்பிள்ளை!
                   [சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி -- ]

    என்ன புதுமை இறந்தோன் உயிர்பெற்றான்
    சின்னஞ்சிறியோன் திடுக்கென் றெழுந்தானே!

மற்றொருவன் --

    செத்தார் பிழைக்கவைக்கும் சின்னஇலை கொண்டுவந்த
    இத்தூய் மருத்துவருக் கென்கொடுத்தா லுந்தகுமே!

தாடி நிறைந்த தள்ளாதவர் --

    அன்புடையீர் என்றன் அருமை மருத்துவரே
    என்பேரன் உம்மால் பிறந்தான் இறந்தபின்பு;
    பாடெல்லாம் பட்டீர் பகலெல்லாம் வெய்யிவிலே!
    காடெல்லாம் சுற்றிக் களைப்பில் மலையேறி
    வீழ்ந்துபுண் பட்டு விரைவில் குழந்தைநிலை
    ஆழ்ந்து நினைத்தேபின் அல்லலொடும் இங்குவந்தீர்
    காத்தீர் உமக்கென்ன கைம்மாறு வேண்டுமதை
    ஆத்தாநீ சொல்வாய்என் அன்பனே நீசொல்வாய்

மருத்துவன் --

    அப்பரே நீர்ஓர் அறிஞரென எண்ணுகின்றேன்
    ஒப்பார் இலாத உயர்புலவர் நீர்போலும்!
    உம்மைநான் கேட்பதெலாம் ஒன்றுதான் என்னவெனில்
    கைம்மேற் கனிபோல் கடவுளைநீர் காட்டிடுவீர்!

    உம்போன்றார் இந்த உலகில் கடவுளை
    எம்போன்றார் காண எதிரினிலே காட்டினராம்.
    நானும்என் காதலியாம் நங்கையும் காணும்வகை
    ஆனது செய்தால் அதுபோதும் போதும்!

தாடி --
    கடவுளைநான் உங்கட்குக் காட்டல் எளிதே
    நடையுலகில் நீங்களது நம்பல் எளிதாகும்.
    கோயிலி னுள்ளே குருக்கள்மார் காட்டுகின்ற
    தூய உருவங்கள் கல்தச்சர் தோற்றுவித்தார்
    கண்டீர் அவைகள் கடவுள்கள் அல்ல அல்ல.
    குண்டான் பெருவயிறு கொண்டிருக்கும் ஓர் உருவம்
    ஆறுமுகம் ஐந்துமுகம் நாலுமுகம் ஆகுமென்று
    கூறுமுகம் யாவும் கடவுளெனக் கூறாதீர்!

    இந்துமதம் சொல்லுகின்ற யாதும் கடவுளல்ல
    பிந்திவந்த ஏசுமதப் பேறும் கடவுளல்ல
    ஓதுநபி காட்டும் ஒலியும் கடவுளல்ல

    எவ்வுருவும் எப்பெயரும் இல்லை கடவுளுக்கே.
    அவ்வியமோ பற்றோ கடவுள் அடைவதில்லை
    ஊருக் குழைக்கும் உணர்வே கடவுள்ஆம்,
    ஊருக் குழைக்கும் உணர்வைஉம் முட்கண்டீர்
    கண்டீர்நீர் அந்தக் கடவுளையே மெய்யாகக்
    கண்ட கடவுள் தான் காட்டியதோர் இன்பத்தைப்
    பெற்றீர் அதைவிளக்கிப் பேசுகின்றேன் கேட்டிடுவீர்!
    தொல்லைஎலாம் ஏற்றீர்கள், தூயதாம் பச்சிலையால்
    அல்லல் அடைந்த அயலாரின் பிள்ளையின்
    ஆருயிர் காத்தீர் அகமார இன்புற்றீர்
    உம்மைநான் வாழ்த்துகின்றேன் நெஞ்சார ஒப்பிலா
    அம்மையே அப்பாஇனிது.









( 5 )








( 10 )









( 15 )







( 20 )










( 25 )







( 30 )











( 35 )







( 40 )







( 45 )












( 50 )








( 55 )










( 60 )












( 65 )








( 70 )














( 75 )







( 80 )







( 85 )





( 90 )







( 95 )





( 100 )




( 105 )




( 110 )




( 115 )
தச்சுக்காரனும் பிச்சைக்காரனும்!

   அரிஅரி அரிஅரி அரிசி போடுங்க
   அரிசி போடுங்க அம்மா அம்மா
   என்று சொல்லி என்வீ டேறினான்
   தின்று கொழுத்தஓர் திருநாமக் காரன்!

   வீட்டுக் குறட்டில் வேலைசெய் திருந்த
   தச்சன் அவனைத் தடுத்து நிறுத்திப்
   போடுவா ரில்லை போஎன் றுரைத்தான்.

   கொஞ்சம் போட்டால் குறைந்தா போகும்
   என்றான் பிச்சைக் காரன்

   கொஞ்சம் அளவு குறையு மல்லவா
   என்றான் தச்சன்
   பிடிக்குப் பிடியளவு புண்ணியம் பெருகும்
   என்றான் இரப்பவன்.

   ஊருக்குத் தொல்லை உண்டாக்கி உழைக்காது
   வயிறு வளர்ந்து வருவோய்
   உனக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பிடியும்
   நாட்டைப் பின்னே நகர்த்தும் என்று

   தச்சன் சாற்றினான்;
   நாமக் காரன் நவிலுகின்றான்

   வேதத்தி னின்றும் விரிந்த ஆகம
   பாதத்தி னின்றும் பற்பல புராண
   நூற்களி னின்றும் நுண்இதிகாசப்
   பாக்களி னின்றும் பகருவேன் காரணம்.

   அவைகள் எல்லாம் அறிந்திருக் கின்றேன்
   விளங்குமா உனக்கு வெறுந்தச்சுத் தொழில்

   செய்பவன் நீஎன்று செப்பிய அளவில்,
   தச்சன் சாற்றுவான்.

   வேதாக மங்கள்உன் வெள்ளைப் புராணம்
   எல்லாம் என்ன பயன்வி ளைத்தன?
   தச்சுத் தொழிலினேன் உன்போல்
   பிச்சை எடுத்துப் பிழைப்பே ன் இல்லையே!





( 120 )






( 125 )





( 130 )






( 135 )





( 140 )






( 145 )
கொடிய ஆட்சி

என்ன உரிமைஇது யாருக் குரிமை?
ஏதும் விளங்கவில்லை நாட்டு மக்களே
சின்ன நினைவுகளும் தீய செயலும்
தீர்ந்திடக் கண்டதில்லை நாட்டு மக்களே!

இன்னல் அடைகின்றனர் நாட்டின ரெல்லாம்
இன்பம் அடைகின்றனர் ஓரி னத்தவர்,
என்ன உரிமைஇது யாருக் குரிமை
ஏதும் விளங்கவில்லை நாட்டு மக்களே!

அடிமைப் படுத்திவந்த வெள்ளையர் சட்டம் -- இங்
ககன்றிடக் கண்டதில்லை நாட்டு மக்களே
அடிமைப் படுத்திஇந்த நாட்டினரையே -- இங்
கழித்திடக் கருதினர் ஓரி னத்தவர்

கொடுமைப் படுத்திவந்த வெள்ளையர் சட்டம் -- ஒரு
கோணலில் லாதபடி காப்பது மன்றி
கொடுமை அனைத்தும் ''இது கொடுமை என்னும் -- சட்டம்

கொடியவர்கள் புதிக்கினர் நாட்டு மக்களே
விடுதலை என்றனர் நாட்டுமக்களே -- அந்த
விடுதலை யாருக்கு நாட்டு மக்களே
கெடுதலை உங்கட்கு நாட்டு மக்களே -- ஒரு
கீழ்நிலை உங்கட்கு நாட்டு மக்களே!

விடுதலை அடைந்தவர் ஓரினத்தவர் -- உம்மை
விழுங்கிடத் தடையில்லை அன்ன வருக்கே?
இடுதலைத் தம்மவருக் கிடுத லின்றி -- ஓர்
இம்மி இடுவதுண்டா உங்களுக் கெலாம்?

என்னருந்தி ராவிட நாட்டு மக்களே -- இங்
கேழ்மை உமக்குரிமை இன்பம் அவர்க்காம்!
மன்னர் தமைநிகர்ந்த அதிகாரம் -- மற்றும்
வாழ்வை உயர்த்துகின்ற பேரலுவல்கள்,

இன்ன பிறவுமவர் தமக்குரிமை -- இங்
கீடழிந் திடல்மட்டும் உமக்குரிமை!

என்ன உரிமைஇது நாட்டுமக்களே?
இன்பத்திராவிட நாட்டு மக்களே!      




( 150 )






( 155 )





( 160 )





( 165 )





( 170 )






( 175 )

இழந்த காந்திக்கு இரங்கல்

காந்தியார் இறந்தார் என்று
கழறினார் கலங்கிற் றுள்ளம்!
ஏய்ந்தஇம் முப்பா னாண்டில்
எழுந்தஅவ் வுணர்வின் ஊற்றால்
மாந்தரின் வறண்ட நெஞ்ச
வாயெல்லாம் விளைச்சல் கண்டோம்!
வீழ்ந்தநாட் டெழுச்சி கண்டோம்!
வையகம் வியக்கக் கண்டோம்.

இறந்தனர் காந்தி யாரென்
றியம்பினார் எரிந்த துள்ளம்!
சிறந்தனர் எவரும் ஏத்தச்
சிறந்தனர் நாம்சி றக்கப்
பிறந்தனர்! வாழார் வாழும்
பெருநெறி காணக் காட்டிப்
பறந்தனர்; இசை முழக்கப்
பறந்தது வானம் பாடி!
     
உயிர்நீத்தார் காந்தி யார்என்
றுரைத்தனர் துடித்த துள்ளம்!
துயர்நீக்கும் விடுத லைப்போர்
தொடங்கிட வேண்டி நாட்டை
நயமுற அழைத்தார் அன்றே
நாற்பது கோடி மக்கள்
புயலெனக் கிளம்பக் கண்டோம்
தனித்ததோர் புலமை கண்டோம்!

சுடப்பட்டார் காந்தியார்என்
றுரைத்தனர். துயர்ந்த துள்ளம்!
உடல்உயிர் பொருள் உழைப்பை
நாட்டினுக் களித்தார்; நாட்டின்
கடல்நிகர் அன்பை யேதம்
காணிக்கை யாகப் பெற்றார்
கெடல்உண்டோ அன்னார் கொள்கை?
கிடைத்தது கேட்ட வெற்றி!
     
மாண்டனர் காந்தி யாரென்
றுரைத்தனர் வருந்திற் றுள்ளம்
ஈண்டெண்ணம் வேறு பட்டே
இன்றுள் தலைவர் தாமும்
ஆண்டகை எனும் விளக்கில்
ஏற்றிய அகல் விளக்கே!
ஆண்டாண்டுத் தம்தோ ழர்க்கே
ஆம்புகழ்க்கு அவர் மகிழ்வார்!
     
வீடுற்றார் காந்தி யாரென்
றுரைத்தனர் விம்மிற் றுள்ளம்!நாடுற்ற பழிக்குத் தம்மை
நலிவுக்குள் ளாக்கும் செய்தி
ஏடுற்ற கதையாய்க் கேட்டோம்
இன்னார்பால் எளிதிற் கண்டோம்
ஆடுவார் நெஞ்சந் தோறும்
அவர்பெயர் வாழ்க நன்றே!


( 180 )




( 185 )





( 190 )





( 195 )




( 200 )





( 205 )




( 210 )





( 215 )





( 220 )



( 225 )
வெளிப்படை விண்ணப்பம்

முதல் அமைச்சர் ஓமந்தூரார்க்கு

நம்பெருமான் காந்தியினைக் கொலை புரிந்த
கோட்சேக்கள் நாடெங்கும் இருக்கின்றார்கள்!
வம்பகன்ற நம்மருமைத் திராவிடத்தும்
மறைந்தேவாழ்கின்றார்கள் அவர்கள் நோக்கம்
உம்போன்ற திராவிடரின் மேன்மை தன்னை
ஒழிப்பதுதான் விழிப்பாக இருத்தல் வேண்டும்!
எம்பெரிய அண்ணலே அஞ்ச வேண்டாம்.
இருக்கின்றோம் உங்களுடன் பிறந்தோம் நாங்கள்!

ஓமந்தூர்த் திராவிடனா முதல்அமைச்சன்?
ஒழித்துவிட மாட்டோமா எனநினைக்கும்
தீமாந்தர் இருக்கின்றார் இதுஉமக்குத்
தெரியாதா? தெரிந்திருக்கும் மிகநன்றாக!
யாமுமக்குச் சொல்வதுதான் என்ன வென்றால்
இப்பெரிய திராவிடத்தில் உம்மைக் கொல்லப்
பாழ்மக்கள் கோட்சேக்கள் தூக்கும் கையைப்
பல்கோடித் திராவிடர்கை முறித்துப் போடும்!

தென்னாப்பி ரிக்காவில் அண்ணல் காந்தி
திருத்தொண்டு வெள்ளையர்க்கு வேம்பாயிற்று!
சொன்னாலும் உளம்பதறும் காந்தி தன்னைச்
சுட்டான்ஓர் கோட்சேஅக் குண்டு தன்னைத்
தென்னாட்டுத் தமிழச்சி மார்பில் ஏற்றாள்.
செத்தொழிந்தாள்; காந்தியினை உலகுக் கீந்தாள்.
இன்னசெயல் அறிவீரோ? கோட்சே கூட்டம்
இவ்விடத்தில் வாலவிழ்த்தால் வேரறுப்போம்!

எங்கேஎன்றால்நடுங்கும் கோட்சே கூட்டம்
இதுநமக்குத் தெரிந்ததுதான், எனினும் நீங்கள்
உங்களருஞ் செல்வாக்கை இந்த நாட்டின்
உயர்வுக்கும் நன்மைக்கும் செலவழிப்பீர்!
அங்கங்கே கோட்சேக்கள்! எதிலும் அன்னார்
அடக்கிடுக அவர்க்குள்ள அதிகாரத்தைக்!
கொங்குமலர்ச் சோலைசேர் திராவி டத்தில்
கோட்சேக்கள் அதிகாரம் குறைதல் வேண்டும்!

கும்பிட்டான் துப்பாக்கி தனைஎடுத்தான்
கோட்சேயை அங்கிருந்தோர் மறித்த துண்டா!
எம்மண்ணால் ஓமந்தூர் இராமசாமி,
இதைநினைத்தால் சிரிப்புவரும். அண்ணல் காந்தி
இம்மண்ணிவ் சாய்ந்ததனை எண்ணும் போதே
இனந்துடிக்கும் இனத்தாரின் மனம் துடிக்கும்!
நம்பிடுக; வடநாட்டான் தன்மை வேறு:
நாம்அவரின் ஒட்டுறவை அறுத்தல் வேண்டும்.

உயர்நிலைக் காமராசர்க்கு:

பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப்
பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில்
கருவேலின் முள்போல உறுத்தும். நீவிர்
கடுகளவும் அஞ்சாதீர் கோட்சே கூட்டம்
திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும்
வெளிப்புறத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த
விரிவுதனை நீர் அறிவீர் அஞ்ச வேண்டாம்
கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்.

ஏழைக்கும் செல்வனுக்கும் பன்ம தத்தார்
எல்லார்க்கும் எதிலும்நலம் புரிய எண்ணி
வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல்
மார்புபிளந் தார்;காம ராச ரே,எம்
தோழரே! திராவிடரே! உமது மேன்மை
தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்!
ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத்
ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!






( 230 )





( 235 )




( 240 )





( 245 )




( 250 )





( 255 )





( 260 )




( 265 )







( 270 )





( 275 )




( 280 )

கொன்றவன் பார்ப்பான்

காந்தியை கொன்றலன் பார்ப்பான் -- எங்கள்
கண்ணை அவித்தவன் பார்ப்பான்.
வாய்ந்துள ஏழைக்கி ரங்கும் -- அருள்
வள்ளலைக் கொன்றவன் பார்ப்பான்.
தாழ்ந்தவர் மக்களில் இல்லை -- எனில்
யாவர்க்கு மேசரி நிதி
ஈந்திட எண்ணிஉ ழைத்தான் -- அந்த
ஏந்தலைக் கொன்றவன் பார்ப்பான்.

"வெள்ளையன் ஆட்சிதொ லைத்தோம் -- இனி
வேற்றுமை உற்றுக்கி டந்தால்
எள்ளி நகைபுரி யாரோ? -- நமை
இப்பெரும் வையத்தி லுள்ளோர்
கொள்கை திருந்திடு வீரே -- உங்கள்
குள்ள நினைப்பினை எல்லாம்
தள்ளுக என்றனன் எங்கள் -- அன்பின்
தந்தையைக் கொன்றவன் பார்ப்பான்.

சட்டைகள் ஆகும் மதங்கள் -- அந்தச்
சட்டைக்குள் எல்லாரும் மக்கள்
வெட்டி மடிந்திட வேண்டாம் -- படு
வீழ்ச்சியைத் தேடிக்கொள் ளாதீர்.
குட்டைக் கருத்துக்கள் ஏனோ -- எனக்
கூறிய எம்தவப் பேற்றைச்
சுட்டுத் தொலைந்தவன் பார்ப்பான் -- எங்கள்
தூயனைக் கொன்றவன் பார்ப்பான்!





( 285 )





( 290 )




( 295 )





( 300 )


பலி விலக்கு மசோதா சட்டமாக வேண்டும்

உருவிலா ஒன்றுக் குருவ மைத்தது
பெரியதோர் மடமைஅவ் வுருவங் கட்கு
விலங்கு பறவைகள் வெட்டுவ தென்பது
கலப்பட மற்ற கயமை யாகும்.
மடமையை நாட்டில் மலிவு செய்தால்
உடைமையை லேசாய் உறிஞ்சலாம் என்பது
பூசாரி எண்ணமும் ஆசாரி எண்ணமும்!
இந்து வேதம் என்பதி லிருந்தே
இந்தக் கொலைகள் இவ்வாறு பரவின;
யாகப் பேரால் வேக வைத்தே
ஆடு மாடுகளை அவர்கள் உண்பார்!
தெய்வத் திற்குத் தீக்கொலை விலக்கு மோர்
செய்தி அந்தணர்க்குச் சிறிதும் பிடிக்காது.
காந்தி அண்ணலார் "கடவு ளுக்கு
விலங்கு பறவைகள் வெட்டவேண்டாம என்று
சொன்னார் அவரைச் சுட்டுக் கொன்றவன்
இன்னான் என்பதை யாரும் அறிவார்.

அறிஞர் ஆதித்தர் அன்பு கூர்ந்தே
பலிவிலக்கு மசோதா பகரும் சென்னைச்
சட்ட சபையில் சட்ட மாக்கிட
இட்டார் நாட்டின் எண்ணம் அறிந்தே.
சட்டம் ஆக்குதல் சரியே என்போம்
அந்தச் சட்டம் அந்தணர் யாகச்
செந்தீ உயிர்களைத் தீயவைப் பதையும்
தடுக்க வேண்டும்! தடுக்க வேண்டும்!!

பலியிட்டுயிர்களை நலிவுசெய் யாதீர்!
என்ற கருத்தை இத்தென் னாட்டில்
நாடொறும் நாடொறும் ஏடுகள் விடுத்தும்
வீடுகள் தோறும் விழாக்கள் தோறும்
சிற்றூர் தோறும் செழுநகர் தோறும்
சென்று பரப்பினோன் சீபால்! அடடா
என்னென்ன இன்னல் ஏற்றான். அவற்றை
இன்னல் என்னான் இன்பமென்று எண்ணினான்.
தன்னல மற்ற பெருந்தகைக்கு
நன்றி நவிலுக போல் வாழ்கவே!

( 305 )



( 310 )




( 315 )




( 320 )





( 325 )




( 330 )




( 335 )




( 340 )
தழிழர் பண்பாடு

வைய கத்திற் சிறந்த பண்பாடு
வாய்ந்த நாடு செந்தமிழ் நாடு (வைய)

உய்யத் தமிழன் பிறன்பொருள் நண்ணிடான்
உயிரைப் புகழுக்கும் பெரிதென எண்ணிடான்    (வைய)

தெய்வம் இல்லை மெய்யுணர் வுண்டு!
சிவன்முதல் உருவமெலாம் மெய்யென்று கொண்டு
நையும் மக்களின் நிலையினைக் கண்டு
நாளும் உழைப்பதே தமிழனின் தொண்டு!       (வைய)

கற்பு, மாதர்க் குயிரினும் பெரிது,
கன்னி ஒருத்திக் கொருவனே தெய்வம்!
வெற்பு வந்து குறுக்கில் மறிக்கினும்
விருந்தோம்பி வாழ்பவன் மேன்மைத் தமிழ்மகள்!  (வைய)

மக்கட் பிறப்பில் வேற்றுமை பேசும்
மாக்கள் தம்மை வெறுப்பவன் தமிழன்;
கைக்க நெஞ்சு செய்பாவத் திற்குக்
கழுவாய் உண்டெனல் கயமை என்பான்        (வைய)

அன்றைத் தமிழ்நான் மறைஉயிர் என்பான்
ஆரியர் பொய்ம்மறை ஒப்பான் தமிழன்:
நின்ற ஆடுதேவர்க் குவப் பெனும்
தீய வேள்வியைக் கான்றுமிழ் கின்றவன்.        (வைய)

தொடர்ந் தெடுத்த பல்படை எடுப்பிலும்
துயரு றாமல் தன்னுயிர்த் தமிழை
அடைந்து காத்தவன், ஆயிரம் படைகள்
அடைந்திட் 
டாலும் அஞ்சிடான் தமிழன்        (வைய)

ஒருகு லத்துக் கொருநீதி சொல்வதும்
ஒருத்தி ஐவரை மணந்துயிர் வாழ்வதும்
பெருகு பொய்ம்மையை மெய்யெனப் பிதற்றலும்
பிறர் நூற் கொள்கை; ஒப்பிடான் தமிழன்        (வைய)

திருக்குறள் முதலெனக் காட்டிய நன்னெறி
செந்தமிழ் நாட்டான் பெற்ற தன்னெறி
இருப்பின் எல்லாரும் இன்புற் றிருக்க
எண்ணி வாழ்வான் இன்பத் தமிழ்மகன்         (வைய)



( 345 )






( 350 )





( 355 )





( 360 )





( 365 )






( 370 )


என் தாயே ... கண்ணி

{ பழிப்புறு தமிழனை விழிப்புறச் செய்வ }

செந்தமிழா உன் நாட்டின் பேரென்ன செப்பென்றால்
இந்தியா என்றே இனிக்கின்றான் என் தாயே!
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம்என் றும்சொல்வான்
எந்தவகை இச்சேய் உருப்படுவான் என்தாயே!
தாயைத்தாய் என்றறியாமல் தாய்நாட்டைத் தீய்க்கின்ற
தீயைத்தாய் என்பான் திருந்தானோ என்தாயே!
தமிழ்மொழிதான் தாய்மொழி என்னும் தமிழன்
தமிழ்நாடு தான் தனது தாய்நாடென் றெண்ணானோ
தமிழ்நாடென் தாய்நாடு தமிழ்மொழி தான்என்றன்
தமிழென் றுணரான் சழக்கனன்றோ என் தாயே!
கலைமுறைகா ணான்நாட்டைக் காட்டிக் கொடுப்பான்
தலைமுறைச்சீர் காணான் தலைவனென்பான் தொண்டின்
தொலையாச் சுரண்டல் தொலையாமல் தொண்டின்
விலைகேட்கும் வீணன் தலைவனா என்தாயே!
செந்தமிழ் நாட்டின் திருவிளக்கை மாய்க்கின்ற
இந்திவரக் கையொப்பம் இட்டான்ஓர் பேதையன்றோ!
நம்தாய் அடிமை வடநாட்டான் நம்ஆண்டான்
இந்தநிலை மாற்றாதிருந்தென்ன என்தாயே!



( 375 )




( 380 )




( 385 )




( 390 )

திருக்குற்றால மலை நீர்வீழ்ச்சி

அழகிய இயங்கிஎம் அனைவர் தம்மையும்
தழல்பெயும் கோடைக் கொடுமை நீக்கச்
சுமந்து விரைந்து பலகல் தொலைவைக்
கடந்ததும் கனலினின்று புனலில் குதித்த
ஒருநிலை கண்டோம் திருக்குற்றாலம்
இன்னும் அரைக்கல்லே என்ற னர்பின்
பசுந்தழை அடர்மரப் பந்தல் கீழ்குளிர்
பிசைந்த வழியேகி நின்றது இயங்கி
இனியாம் நடந்தே எழுதல் வேண்டும்
நானும் நேயரும் சிறிது நடந்ததும்
வான்கீழ் வெளியே அழகால் மறைத்த
திருக்குற்றால மலைநீர் வீழ்ச்சி
இதோபார் என்றனர் எதிர்நின்று நோக்கினேன்
பொன்வெயில் தழுவிய நன்மேனியுடன்
நின்றி ருந்தாள் நெடியோள் ஒருத்தி
அன்னவள் மென்குழல் அணிமலர்ச் சோலையாய்
விண்ணிடை விரைந்து நறுமணம் விரிக்கும்
ஆடவில்லை அசைகிலள் விடாது
பாடிக் கொண்டே இருந்தாள் பண்ணொன்று!

"தமிழ்வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்.
சாதிநோய் தவிர்க தமிழனே, என்றும்
தமிழ்மீண்டால்தான் தமிழ்நாடு மீளும
என்ற முழக்கம் எழுச்சியைச் செய்ததால்
தூய்தமிழ் மக்கள் தொடர்ந்தனர்! சூழ்ந்தனர்!
சுடர்படு முதியோள் தோளினின்றும்
அடிமிசை வீழ்ந்து புரளும் சலசலப்
பொன்னாடைதனில் ஆடினர்
"அன்னாய் அகம்புறம் குளிர்ந்தோம்!" என்றே!




( 395 )




( 400 )




( 405 )




( 410 )





( 415 )



வானவில்

{ விண் எழுது கவிதை }

மண்ணுலகு கடல்மலை அனைத்தும் உள்ளாக்கியே
வளைந்தது வானவில்! என்னென்ன வண்ணங்கள்!
விண்முழுதும் கருமணல் அதன்மீது மாணிக்கம்,
வீறிடு நிறப்பச்சை வயிரத் தடுக்குகள்
உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்
உயிரொடும் அள்ளியே செல்கின்ற தல்லாமல்
எண்ணற்ற அழகினால் இயற்கைவிளை யாடலின்
எல்லைகா ணேன், அதைச் சொல்லுமா றில்லையே!
புதுமைஇது வாளிடைக் கண்டஅவ ளோவியம்
போய் முகிழ் புனலிலே நொடிதோறும் கரைந்ததே
இ(து)அது எனச்சொல்ல ஏலா தொழிந்ததே!
இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம்
கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும் என்பதைக்
கண்ணெதிர்க் காட்டவரும் விண்எழுது கவிதையாம்.
அதுநமக் குத்தெரியும் அன்றியும் கவிஞருளம்
அவ்வான விரிவிலும் பெரிதென்பதறிவமே!


( 420 )




( 425 )




( 430 )




( 435 )
ஆடல் பாடல்

{ பச்சைப் பட்டரங்கில் }

நான் ஓர் வரப்போடு போனபோது
நன்செயை அடுத்ததோர் சின்னத் திட்டு
நில்என்று சொன்னது நின்றேன், வரிசை
மிஞ்சாது நீண்டு வளராது தரையை
மறைத்த வண்ணம் மண்டிய புற்களின்
நிறத்தையும் நிறத்திடை, நிறைத்த பொன்வெயில்
ஒளியையும் கண்டேன் உள்ளம்அவ் வழகில்
குளித்துக் களித்துக் கூத்தடித் திருந்தது
மற்றோர் இன்னொலி வந்தது காதில்
ஒற்றை நீல ஒளிச்சிறை வண்டு
பாடியது தும்பைச் சிரிப்புடன்
ஆடியது பச்சைப் பட்டடு அரங்கிலே!







( 440 )




( 445 )

ஆடும் மயில்

தக தக
என்றாடுமாம் மயில்
நன்றாடுமாம் களிப்பீர்
நின்றாடுமாம்             (தகதக என்றாடுமாம்)

மாலை வெயில் தனிமலர்ச்
சோலை தனில் நடமிடும்
நீல மயில்               (தகதக என்றாடுமாம்)

கண்ணாயிரம் ஒளிவிடும்
மின்னாயிர மயில் அது
பெண்ணாய் வந்தே        (தகதக என்றாடுமாம்)

பின்வாங்குமாம் அடகொடு
முன்வாங்குமாம் நடைமுறை
தென்பாங் கென்றே        (தகதக என்றாடுமாம்)

மெச்சும்வகை மேனி
தச்சுக்கலை காட்டும்
பச்சை மயில்            (தகதக என்றாடுமாம்)

பொன்னால்முடி புனைமயில்
மின்னால்விழி! அலகினில்
என்னே எழில்           (தகதக என்றாடுமாம்)

மணிமா முகில் வளைகழுத்
தினைச் சூழவே அழகுற
அணிமா மயில்          (தகதக என்றாடுமாம்)

அதிரும் படம் தங்கக்
கதிர் தூவிடும் உலகினை
மகிழ்வித் திடும்          (தகதக என்றாடுமாம்)


( 450 )





( 455 )






( 460 )






( 465 )






( 470 )

தென்றல்

மலர்மணம் கொண்டுவந்த தென்றலே -- என்
வாழ்வில் இனிமைவைத்த தென்றலே
நிலவைப் பகலில்கண்ட தில்லைநான் -- குளிர்
நிலவைத்தழு வவைத்த தென்றலே
பலஇசை கொண்டுவத்த தென்றலே -- தென்
பாங்கின் தனிப்பிறவித் தென்றலே

இலகும் தளிரினிலோர் அசைவினை - நேரில்
எழுதிக் காட்டுகின்ற தென்றலே!
பேரைக் கேட்டதுண்டு தென்றலே -- உனைப்
பேசாப் புலவரில்லை தென்றலே
நேரிலுனைக் கண்டதில்லை தென்றலே --
நினைக்கப் பெருவியப்பு தென்றலே -- உன்
ஊரிடைப் பாடிவரும் தென்றலே -- உன்
உதடு மணந்ததோ தென்றலே?

பூந்துகள் கொட்டுகின்ற தென்றலே -- உன்கை
பூவோ பொழில் என்பதோ தென்றலே? -- நீ
நீந்தும் வானப்புனல் எங்கணும் -- உன்
நிழலையும் கண்டதில்லை தென்றலே
சாய்ந்தாடும் பூங்கிளையில் தென்றலே -- நின்று
தட்டுப்பந்து ஆடுகின்ற தென்றலே
தீய்ந்து கருகவைக்கும் கோடையில் -- நீ
செய்தது மறப்பதில்லை தென்றலே!


( 475 )





( 480 )




( 485 )





( 490 )



முகிலுக்குள் நிலா

தெருவறைச் சன்னல் தன்னைத்
திறப்பாள்என் வரவு பார்ப்பாள்.
திருமுகம் காண்பேன் முல்லைச்
சிரிப்பினிற் சொக்கி நிற்பேன்!
ஒருநொடி தனிலே அன்னாள்
ஒளிமுகம் மறைந்து போகும்.
அரிவையின் முகநி லாவை
அடுத்தநாள் காண்பேன் அங்கே!

( 495 )




( 500 )

தமிழர் யார்?

மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழைஎன
இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் -- பன்னும்இந்த
வாய்ப்பில்லார் தம்மை, அவர் வைப்பாட்டி மக்களை
ஏற்கமாட்டோம்தமிழர் என்று.



( 505 )

செஞ்சாமந்தியும் தும்பைச் செடியும்!

செஞ்சா மந்தியும் தும்பைச் செடியும்
கொஞ்சிப் பேசிக் கொண் டிருந்தன.
செடியில் நிறைந்த செம்மலர், இளையோன்
புதுவகைச் சட்டை போலி ருந்தது.
தும்பையும் பூவும் தோகையும் சிரிப்பும்
உள்ளம் இரண்டும் ஒன்றே யாகி
இருப்ப தென்ற இவர்களின் முடிவை
யார்தாம் எதிர்க்க எண்ணுவர்? காற்றோ
இலவசம் பழுப்பை எடுத்து வந்து
கலகம் செய்யும் ககத்தால் அந்தச்
செஞ்சா மந்தியின் தலையிற் சேர்த்தது
தும்பை கேலியாய்ச் சிரித்தது!
செம்மலர் சினத்தால் மேலும் சிவந்ததே!




( 510 )




( 515 )



பந்து விளையாட்டு

கரடிகள் கீழிருந்து கைஏந்த ஏந்த
மரக்கிளை ஆடரங்காகக்
குரங்கு பந்தடித்தது விளாம்பழம் கொண்டே!
( 520 )

`