கதர்
இராட்டினப்பாட்டு
ஜன்ம பூமியின் சிறப்பு
வெண்பா
|
தேர்நின்ற
வீதிச் செயபேரிகை முழங்கப்
போர்நின்ற வீரர்குலம் பூத்தநிலம்-பார்நின்று
அடல்வளர்த்துப் பாரதநற் புத்திரன்நான் ஆக
உடல்வளர்த்த நாடு என்உயிர்.
குறிப்பு: அடல் வளர்த்து-(என்தேக) பலத்தை வளரச் செய்து |
|
காந்தியடிகளும்
கதரும்
பறை முழக்கம்
சுவை: வீரம்
|
"அன்னியர்
நூலைத் தொடோம என்ற சேதி
அறைந்திடடா புவி முற்றும்-எங்கள்
அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும்-சுற்றும்-சுற்றும்
இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு-அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
கொட்டு-கொட்டு-கொட்டு
இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும்-எங்கள்
ஏதமில் காந்தியடிகள் அறச்செயல்
வெல்லும்-வெல்லும்-வெல்லும்
கன்னலடா எங்கள் காந்திடிகள் சொல்
கழறுகின்றேன் அதைக் கேளே-நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே-தூளே-தூளே
பால்நுரை போலப்பருத்தியுண்டு சொந்தப்
பாரததேசத்தில் எங்கும்-எனில்
பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்
சிங்கம்-சிங்கம்-சிங்கம்
வானம் புனல் சுடர் நாணும்படி உடை
வர்ணமும் சொர்ணமுங் கொண்டு-பெரும்
வையம் களித்திட நெய்யும் திறம்எமக்
குண்டு-உண்டு-உண்டு
ஆன இந்நாட்டினைச் சந்தையென் றாக்கிய
அந்நியர் போக்கையும் கண்டோம்-எனில்
ஆக்கந் தருவது சக்கரம் ஆம் எனக்
{
கொண்டோம்-
கொண்டோம்-
கொண்டோம் }
பானல் விழியுடையாளெங்கள் தாயிந்தப்
பாரினை யாள்பவள் என்றே-நெஞ்சில்
பாயும் எழுச்சிக் கனல் சொன்னதாகச்சொல்
நன்றே-நன்றே-நன்றே
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 ) |
சுதந்திரதேவியும்
கதரும்
சுவை: சிங்காரம்
இராகம்-பியாக் தாளம்:சாப்பு
|
ஆளை மயக்கிடும்
மாதொருத்தி-உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள்-அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே-என்னைப்
பார்த்துரைத்தாள் "எந்த நாளையிலே-உன்றன்
தோளைத் தழுவிடக்கூடுமஎன்றே-"அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதென்றேன்-அவள்
"காளி யனுப்பிய கன்னி"யென்றாள்-என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
"இந்தத் தினம் இந்த நேரத்திலே-நல்ல
இன்ப மிகுக்கக் கலந்திடுவோம்-இதில்
பிந்தி யெதற்கடி மாதரசீ இங்குப்
பேசிய நேரமும் வீண்கழித்தோம-என்று
சிந்தை களிக்க உரைத்து நின்றேன்-"ஒரு
சேதியிருக்குது கேள்'? என்றனள்-அந்த
விந்தையைக் கேட்கவும் ஆவலுற்றேன்-என்
வேட்கை பொறுக்கவும் கூடவில்லை-பின்பு (ஆளை)
கன்னியுரைத்தது கேட்டிடுவீர்'-உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ-அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய்-அதில்
தீட்டின்றி நெய்தஉடை உடுப்பாய்-வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய்-அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய-என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள்-அவள்
கட்டளைதன்னை மறைப்பதுண்டோ-அந்த (ஆளை)
குறிப்பு:-இராட்டினத்தில் நூலிழைத்து நெய்து உடுத்த
வேண்டும். அந்நியர் நூலைத் தொலைக்கவேண்டும்
அதன்பின்புதான் சுதந்தரம் பெறமுடியும் என்பது
இதன் கருத்து. |
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
|
தேசத்தாரின்
பிரதான வேலை
சுவை: சாந்தம்
|
நாடகங்களில்
"கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு"
என்று பாடுவதுண்டு. அந்தக் குறத்திப் பாட்டின் மெட்டு.
பால்நுரைபோல் பாரதத்தில்
பஞ்சு விளைப்பீரே-நல்ல
பஞ்சு விளைப்பீரே-அந்த
பஞ்சுதனைச் சுத்தி செய்வீர்
பனிமலைபோல் நீரே.
ஃ ஃ
தேனருந்தும் ஈக்களெல்லாம்
சேர்ந்து மொய்த்தல்போலே-மிகச்
சேர்ந்து மொய்த்தல்போலே-முழுத்
தேசமின்று ராட்டினத்தைச்
சேர்ந்து சுற்றுவீரே.
ஃ ஃ
ஆனமட்டும் சிலந்தியிழை
போல மெலிதாக-அது
போல மெலிதாக-உம்
ஐந்துவிரல் தேர்ச்சியிலே
அழகிழை நூற்பீரே.
ஃ ஃ
ஏனத்தினிற் சோறுகேட்கும்
ஏழையரும் யாரும்-நம்
ஏழையரும் யாரும்-பஞ்
சிழையைநூற்றுத் தரிநெய்வதால்
கொத்தடிமை தீரும்.
ஃ ஃ
தாய் நிலம் போய் மற்றவரைத்
தலைவணங்க லாமோ.-தன்
தலைவணங்க லாமோ.-இனித்
தரித்தொழிலின் நன்மைவினை
மறப்பதுண்டோ நாமே?
ஃ ஃ
காய் நினைத்துக் கனியிழக்கும்
கதை மறப்பீர் நீரே-அந்தக்
கதை மறப்பீர் நீரே-உங்கள்
கதி நினைத்து வறுமை யென்னும்
கனல் அவிக்க வாரீர்
ஃ ஃ
போயழிக்கும் நமதுரிமை
போக்க நினைப் போரை-மெல்லப்
போக்க நினைப் போரை-மிகப்
போற்றுகநீர் இப்பணி யெப்
போது மறவாமே
ஃ ஃ
தோய்மது வாய்க் காதில்வந்து
வீழ்ந்ததொரு வாக்கு-வந்து
வீழ்ந்ததொரு வாக்கு-அது
தொல்லைகெட வந்துதித்த
காந்தி அண்ணல் வாக்கு
ஃ ஃ
"கதரணிவீர்?' என்றுரைத்த
காந்தியண்ணல் ஆணை-எழிற்
காந்தியண்ணல் ஆணை-அதைக்
கருதிடுவீர் அது நமக்கு
நாரதனார் வீணை
ஃ ஃ
கதரணிவீர் என்றமொழி
அடிமையுற்ற நேரம்-நாம்
அடிமையுற்ற நேரம்
கருதிடுவீர் அது நமக்கு
நான்மறையின் சாரம்
ஃ ஃ
கதரணிவீர் எனும் அடிகள்
காந்தியின் வாய்க்குமுதம்-நம்
காந்தியின் வாய்க்குமுதம்-மிகக்
கருதிடுவீர் அது நமது
வாழ்வினுக்கோர் அமுதம்
ஃ ஃ
கதரணிவீர் என்னும் வார்த்தை
யுடனொழுகும் அன்பும்-அத
னுடன் ஒழுகும் அன்பும்-நம்
காந்தியண்ணல் அன்புமொழி
யால் விளையும் இன்பம்
ஃ ஃ
சதுர் நமக்குத் தோளிலுண்டு
மானமுண்டு பாரீர்-நல்ல
மானமுண்டு பாரீர்
சதைவருத்தித் தாயடிமைத்
தனம் அகற்ற வாரீர்
ஃ ஃ
விதி நமக்கு வாய்த்ததுண்டோ
வேற்றுவர்கை பார்க்க-நாம்
வேற்றுவர்கை பார்க்க
விளையும் பஞ்சில் விரல்பொருந்த
விடுதலை நீர் காண்பீர்
ஃ ஃ
அதிகமுண்டு விளைவுநிலம்
அதிகமுண்டு மக்கள்-இங்
கதிகமுண்டு மக்கள்
நிதிக ளெலாம் பிறருக்கிட்டு
வறுமைகொள்ள வேண்டாம்
ஃ ஃ
கதரணிவோம் ஒன்றுகூடிக்
கலிதொலைக்க நாமே-தீக்
கலிதொலைக்க நாமே-தீக்
கலிதொலைத்துக் கிருதயுகம்
காணப் பெறுவோமே
ஃ ஃ |
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 ) |
இராட்டினச்
சிறப்பு
சுவை: சிங்காரம்
தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே என்ற மெட்டு
|
கூட்டமுதம்
நானுனக்கு
ராட்டினப் பெண்ணே-அடி
கொஞ்சுகிளி நீ எனக்கு
ராட்டினப் பெண்ணே
பாட்டினிக்கப் பாடுகின்ற
ராட்டினப் பெண்ணே-பண்டு
பாரதத்திலே பிறந்த
ராட்டினப் பெண்ணே
ஊட்டமுறத் தோளுரமும்
உடலழகும்-எனக்
கூக்கமும் கொடுத்துவரும்
ராட்டினப் பெண்ணே
காட்டுமலர்த் தேனுருசி
வண்டறிதல்போல்-நாம்
கைகலந்த பின்புசுகம்
கண்டு மகிழ்ந்தேன்,
தொட்ட கைகள் விட்டதில்லை
மாதமும் பல-உன்னைச்
சூல்படுத்தி என்னை இன்பம்
தோய வைத்தன
எட்டுத்திசை யோர் அடையும்
இன்பமனைத்தும்-நமக்
கின்றளித்த தெய்வமதை
என்றும் மறவோம்
சுட்டி சுமை வாழ்த்துதடி
இந்த உலகம்-நாம்
துள்ளிவிளை யாடஒரு
பிள்ளை பெற்றதால்
இட்டு வழங்கும் படி செய்
இவ்வுல கெங்கும்-நாம்
ஈன்ற சுதந்தரப் பிள்ளை
காப்பரிசியே.
|
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
|
அன்னைக்கு
ஆடை வளர்க
சுவை: சோகம்
|
பஃறொடை
வெண்பா
"ஆவி இழக்கலாம
"ஆடை இழப்பதுண்டோ"
"கூவிக் குரல் இழக்கும
"கோதை துயர் கண்டிருந்தும
"வீரர்களும் மன்னர்களும
"மீட்கக் கரு தீரோ!"
"காரிகை என் மானமுங்கள
"கண்முன் இழப்ப துண்டோ?"
என்று துடித்த ழுதாள்
அன்றந்தப் பாஞ்சாலி
சென்று துர்ச்சாதனன் தான்
சேலை பறித்திடுங்கால்
ஃ ஃ
முப்பத்து முக்கோடி
மொய்ப் புடைய மைந் தர்களை
இப்புவியிற் பெற்ற
எழில் பாரதத்தாளின்
ஆடை தறித்தார்
அதிகாரம் கொண்டவர்கள்
ஓடி அவளின்
உடை மீட்க வேண்டாமோ!
பஞ்சு விளை விக்கப்
பறந்தோட வேண்டாமோ
மிஞ்சு பொதி பொதியாய்
மெல் இழைதான் நூற் கோமோ
நெய்து நெய்து வேறு
நிலத்தார்க்கும் நாமுதவச்
செய்து குவியோ மோ
சிறந்த கதராடை
ஒகோநம் பாரத்ததாய்
உற்றதன் மைந்தரிடம்
சோகத்தால் வாய்விட்டுச்
சொல்லுவதும் கேளீர் :-
"ஆவி யிழக்கலாம
"ஆடை இழப்பதுண்டோ"
"கூவிக் குரலிழக்கும
"கோதை துயர்கண்டிருந்தும
"வீரர்களும் மன்னர்களும
"மீட்கக் கருதீரோ"
"காரிகை என் மானமுங்கள
"கண் முன் இழப்பதுண்டோ"
கேட்டீரோ
நம்மவரே
கீர்த்தியுள்ள
பாரதரே?
வாட்டுகின்ற
தந்தோ நம்
மாதாவின் இம்மொழிகள்
ஃ ஃ
"தீயார் துகில் படுத்துத
"தீர்க்கின்றார் என் மானம
"மாயா மலர்க் கண்ணா"
"வந்து துயர் தீர்த்திடுவாய
என்று
பாஞ்சாலி
இசைக்க
அதுகேட்டுச்
சென்று
மலர்க் கண்ணன்
சித்திரஞ்
சேர் ஆடை
வளர்ந்திடுக
என்றான்
அறம்
வளர்க்க வந்தோன்-
வளர்ந்ததுவாம்
வண் கடல் போல்
வான்
போல் மலையைப்போல்-
இங்கது
போல் தேசம்
இளமைந்தர்
நம்மிடத்தில்
சிங்கம்
கதறுதல் போல்
தேம்பி
அழு தழுது
"தீயர் துகில் பறித்துத
"தீர்க்கின்றார் என் மானம
"மாயா மலர்க் கண்ணா"
"வந்து துயர் தீர்த்திடுவாய
என்று
ரைத்திட்டாள்
இதனைச்
செவியுற்றுச்
சென்று
கண்ணக் காந்தி
சித்திரஞ்சேர்
ஆடை
வளர்ந்திடுக
என்றான்
அறம்
வளர்க்க வந்தோன்-
வளர்க
வளர்கநம் வாழ்வு |
( 175)
( 180)
( 185)
( 190)
( 195)
( 200)
( 205)
( 210)
( 215)
( 220)
( 225)
( 230)
( 235)
( 240)
|
விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய்-மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்த "தாய வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு. |
( 245) |
அகவல்
பொன்னிறக் கதி விளை நன்செயிர் புத்தொளி
வடிவமர் அன்னாய் நின்னெழில் வாழ்க!
கணுவகல் கரும்பின் இனிநற் சாறும்!
கதலியும் செந்நெலும் உடையைநீ வாழ்க
தென்றலின் குளிரும் தேன்சுவைப் பழமும்
நன்றியல் சோலை நலத்தினாய் வாழ்க!
வானுயர் பனிமலை வண்புனல் கங்கையென்று
உலகெலாம் உரைக்கும் பெரும்புகழ் உடையைநீ
முப்பது கோடியர் முனிவராய் வீரராய்ப்
பெற்றிடும் தேவிநீ வீறுகொள் பெற்றியாய்,
கலிப்பகை வென்றே தலைநிமிர் குன்றனாய்,
கடையுகம் முற்றினும் திறல்கெடாக் காளிநீ,
அறமெனும் வயிரக் குலிசத் தோளுடை
அன்னைநீ வாழ்க! அன்னைநீ வாழ்கவே!
|
( 250)
( 255)
( 260) |
|
|
|