ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!
கல்வி பயில
|
சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு
துட்டுக்கும், கண்ணயர்ந்து தூங்குதற்கும் -- கட்டத்
துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல
பணக்காரன் ஆக்கும் படிப்பு.
படிக்கையிலே தொல்லை இருக்கும் படித்து
முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி -- முடித்தபின்
தொட்டதெலாம் வெற்றி துயரின்றி வாழலாம்
கட்டாயம் கல்வி பயில்!
கல்லாத மூடனை 'வா' என்பார்; கற்றவனை
எல்லாரும் 'வாருங்கள்' என்றழைப்பார் -- செல்வம்
படிப்பானைச் சேரும்; படியான் கூழ்ப் பானை
அடிப்பானையும் வெறும் பானை. |
( 5 )
( 10 ) |
வண்ணச் சிறகுகள்
வாய்த்த மீன்கொத்தியாய்
விண்ணில் பறந்திடுவேன் நீரில்
வித்தைகள் காட்டுவேன்
எண்ணில் மலர்களின்
இன்ப நிறம் கொண்டு
மண்ணில் மல்ர்ந்திடுவேன் -- மக்கள்
மனத்தில் நிறைந்திடுவேன்.
நன்செயில் புன்செயில்
நாநிலம் காத்திடும்
அன்பின் விளைவாகுவேன் -- உழைப்
பாளர் துணையாகுவேன்.
தென்புறு ஞாயிற்றின்
தேன் ஒளிக் கதிர்களாய்
என்றும் நான் காய்ந்திடுவேன் -- இருள்
இல்லாமல் பாய்ந்திடுவேன்.
பழமைக் கழனியில்
புதுமை விளைந்திடும்
எழுத்தின் மலையருவி -- மனம்
இசைக்கும் கலைக்கருவி!
முழுமை வடிவினை
முற்றுகை இட்டிடும்
எழுதும் இலக்கியம் நான் -- கால
எதிரொலிக்கு இலக்கணம்நான்! |
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 ) |
சாதி ஒழித்தல் ஒன்று
மதத்தைச் சாய்த்தல் ஒன்று
ஓதிடும் என்மகன் இன்று -- போரில்
ஒன்றுபட்டானாம் நன்று -- என்
உள்ளம் மகிழ்வுக் குன்று!
தமிழை அழிக்கும் மொழியை
தறுதலையின்கைக் கழியைத்
தமிழ்க்குவரும் பழியைப் -- புறம்
தள்ளக் கொடுத்தான் விழியை -- மகன்
தரைக்கெல்லாம் ஒரு வழியைத்
தந்தான் என் சொல்வேன் மகிழ்வை!
வ.உ.சி போல் வீரன் -- வல்ல
வாஞ்சியைப் போல்தீரன்
பாரதிபோல் சூரன் -- எம்
பள்ளிக்குள்ளே மாறன் -- போர்
படையில் சேர் தமிழ்ப்பேரன் -- வெற்றி
படைத்தான் சங்கக் கீரன்! |
( 40 )
( 45 )
( 50 )
|
காக்கா காக்கா கத்திரி மூக்கா
தூக்கா தேஎன் சுற்று முறுக்கை.
அதற்கு காக்கா சொல்லிற்று;
நாய்க்கா நரிக்கா எனக்குத்தானே
நறுக்கா முறுக்கை எடுத்திட்டேனே-
இதைக்கண்ட சின்ன தம்பி சென்னான்;
ஏய்க்கா தேநீ முறுக்கைக் கொடுப்பாய்
எங்கப்பாவிடம் சொன்னால் துடிப்பாய்!
இதுகேட்ட காக்கை சின்ன தம்பியை
நோக்கிச் சொல்லிற்று;
காக்கா தூக்கிப் போனால் அப்பா
கழியால் உன்னை அடிப்பார் தப்பா?
|
( 55 )
( 60 )
( 65 ) |
முடியரசு வீழ்ந்து குடியரசு எழுந்தது
|
பாரசீகத் தொருமன்னன்
பாரின் செல்வம் எலாம் பெற்றுப்
பேரின்பத்தின் உச்சியிலே
பித்துப் பிடித்துச் செருக்குற்றான்,
ஒருநாள் மாந்தன் ஒருவனிடம்
''ஒப்பில் லாத பெருவாழ்வு
திருநாள் இந்நாள் வாழ்நாளில்
திகட்டா இன்பத் துள்ளேன் நான்.
''என்னை இன்பத் தாழ்த்துகிற
இறைவன் வாழ்க! என்னாடு
முன்னை யோரின் ஆட்சியினும்
முழுமை பெற்றது கருவூலம்!
''படைகள் எந்தப் பக்கத்தும்
பகைப்பூண் டழிக்க மிகவுண்டு
புடைசூழ் கோட்டை மாளிகைகள்
புகழும் புலவர் பலருண்டு,
"இதற்கு மேலே உலகத்தில்
என்ன உண்டு சொல்லுகநீ!
பதக்குப் பொன்னைத் தருவேன் நான்
பகர்வாய என்றான் மாமன்னன்.
மன்னன் பெருமை மொழிகேட்ட
மாந்தன் புகல்வான் "அன்பரசே
என்னென் பேன்யான் அனைத்திலுமே
ஈடும், இணையும் அற்றவன்நீ!
துன்பம் என்ற சொல்லறியாய்,
துயரம் என்ற பொருளறியாய்,
இன்பம் இன்பம் பேரின்பம்,
எங்கோ எங்கட்கு அப்பாலே
வாழ்கின் றாய்நீ கோவேந்தே
வாழும் இந்த நாட்டினிலே
சூழும் வறுமை சிறிதளவும்
தொலையா மக்கள் எண்ணிலவாம்.
உன்னைப் பொறுத்த வரையினிலே
உனக்கின்பந்தான் மக்களைப்பார், தொன்னைக் கூழுக் குப்பில்லை
தூங்கக் குடிசைக் கூடியில்லை.
மாடாய் நாளும் உழைக்கின்றோம்
மண்ணாய்ப் பலனை அளிக்கின்றோம்
ஓடாய்ப் போனோச்! வருமைக்கே
உறைவாய் போனோம் எங்களினைச்
சுரண்டிச் சுரண்டிக் கொழுப்பதுயார்?
தொல்லைப் படுந்தி நலம்பெறல்யார்?
அரசியல்பேர் அதிகார
அட்டைகள் என்பதறிவீரா?
பாடே படாத படைவீரர்,
பத்தாம் பசலி மதத்தலைவர்
போடா வாடா எனச்சொல்லும்,
போக்கில்லாத அலுவலர்கள்
இவர்கள் எல்லாம் எங்களினை
இறுக்கிப் பிழித்துச் சுரண்டியதின்
குவியல் அன்றோ நின்செல்வம்
கூத்தாட்டன்றோ நின்வாழ்வு,
உனக்குத் துயரம் தெரியாது,
வறுமை, உழைப்பு புரியாது,
எனக்கும் என்னைச் சேர்ந்தோறும்
இப்படியேவா இருந்திடுவோம்.
அதிகா ரிகளின் கொட்டங்கள்
அலுவலாளர் கங்காணிக்
குதிர்கள் சாயும் நாள் விரைவில்
கூடி வருவது உரைக்கின்றேன்.
இளைத்த உடம்பில் ஒற்றுமையின்
எழுச்சித் தீக்கோல் உழல்கிறது.
திளைக்கும் இந்தப் பேரின்பம்
திக்கு முக்காடிப்போகும்.
ஒருதாய் மண்ணின் மக்கள் நாம்,
ஒருபால் இன்பம், மற்றொருபால்
வறுமை என்றால் என்னாகும்
வருநாள் அதனைப் புகட்டி விடும்!"
என்றுரைத்தான்; மாமன்னன்
இமைப்பில் முடியை எடுத்தெறிந்தான்,
என்போல் இன்பம் பெறவேண்டும்
எழுக என்றான் குடியரசே!
|
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 ) |
பஞ்சம்போனால் படிப்புவரும்
|
இரண்டுதங்கை ஒருதம்பி
ஏணையிலே கைக்குழந்தை
இருங்கள் என்று சென்றுவிட்டார்
எம்மைப் பெற்ற அருமை அம்மா.
அரங்க சாமி வீட்டினிலே
அப்பா வேலை செய்திருந்தார்
அவர் கொடுக்கும் கூலியிலே
ஆறுபேறும் பிழைக்க முடியுமா?
சிரங்கு வந்தால் மருந்துக்கில்லை
செலவுக்கொரு காசும் இல்லை
இருந்திருந்தும் அப்பா போடும்
இரவுணவோ இஞ்சிப் பச்சடி!
இருக்கும் குடிசை சொந்தமில்லை
எடுக்கும் தண்ணீர் வசதியில்லை
இரண்டு மரத்தில் ஒன்று மொட்டை
இன்னொன்றில் நிழலில்லை!
வெள்ளத்தில் மிதக்கும் குடிசை
வெளிக் கதவோ தென்னங் கீற்று
வள்ளியம்மா மொத்தக் குத்தகை
வாடகையோ நாலு வெள்ளி!
உள்ளே வந்தார் சட்ட மன்ற
உறுப்பினராம் ஒரு மனிதர்
ஓடிடுவீர் பள்ளிக் கூடம்
உணவுண்டு பகலில் என்றார்.
பள்ளிக் கூடம் வைத்தவரே!
படிக்கும்படி செய்தவரே!
படித்துவிட்டுத் திரும்பிவந்து
படுக்க வீடு வைத்தீரா?
பள்ளிக் கூடம் வைத்தவரே!
படிக்கும்படி செய்தவரே!
பஞ்சம் போக்கும் நெஞ்சமுண்டோ?
பகரும் என்றேன் நகர்ந்துவிட்டார்!
|
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
|
மாட்டை நினைத்தவன்
மனிதனை நினைக்கவில்லை
|
பாரதிப் பாட்டில் வீரியம் ஏற்றிய
நேரிய நெஞ்சும் கூரிய அறிவும்
கொண்ட பெண்ணின் பெருந்தகை, ஈடிலா
நிவேதிதா போற்றிய விவேகானந்தரைப்
பார்க்கச் சென்றனர், பார்ப்பனர் ஐவர்.
"பசுப்பாதுகாப்பு சங்கத்தினராம்
விசும்பிலிருந்து விழாத மழையினால்
பசுமாடுகள் எலாம் பட்டினி ஆயின
பசுவினைக் காப்பது பரமனைக் காப்பதாம
என்றொரு விளம்பரத் தாளினை எடுத்தே
"அன்புடன் நன்கொடை அருளுக" என்றனர்.
அறிஞரின் விழிகள் நெருப்புப் பொறிகளைத்
தெறித்தன; சினத்தினை அடக்கியவாறு
"நாட்டிலே எங்கும் வாட்டிடும் வறுமை,
வானம் மழையை வழங்கா ததினால்
கானல் பரந்து கருகின யாவும்
தண்ணீர் இல்லை, தகுஉண வில்லை
கண்ணீர் விட்டுக் கவல்கிறார் மக்கள்
கொடிய வறுமை குழந்தைகள் தம்மை
மடிய வைக்கின்றது; மக்கள் படும்துயர்
நோயிலும் நொடியிலும் கோயிலின் இறைவனைக்
கூவிக் கூவிப் பாவிஎன்றேசினர்.
பசிப்பிணியாலே பரிதவிக் கின்ற
நசிவினை என்னும் நல்லுளம் இல்லையா?
உடன் பிறந்தவர்கள் உயிருடன் சாகையில்
கடமை கருதி அவர்கள் உயிரினைக்
காக்க ஒருபிடி சாப்பாடு கொடாமல்,
நோக்கம் இலாமல், ஊக்கம் இலாமல்
மாந்தர்மேல் பரிவு ஏந்திடாமல் நீர்
கறவை கட்கும் பறவைகட்கும்
சங்கம் வைத்துச் சாதிப்ப தென்ன?
உயிர்களில் மனிதஉயிர் உயர் வில்லையோ?
பயிர்பாது காப்பு சங்கம் இல்லைஏன்?
என்று துறவியார் சொன்னதும், ஆங்கொரு
நன்று கொழுத்துப் பன்றிபோல் இருந்த
ஊர்ப்பொருள் விழுங்கும் ஒருவன் சொன்னான்:
பூர்வ ஜன்மத்தின் பாவ கருமமே
பஞ்சமாய் மனிதரைப் படுத்திய தென்றான்,
குணக்குன் றானவர், கணத்துள் சினமிகு
தணல் பொழி எரிமலையாக எழுந்தார்
பறவையும் கறவையும் பாவ கருமத்தில்
உறவுற வில்லையோ? உடன் பிறந்தோருக்கு
இரங்கா நெஞ்சுள அரக்கர் உங்களை
மனிதர் என்பதும் மனிதர்க் கிழிவு,
நாளும் நாளும் ஆடும் மாடும்
கசாப்புக்காரன் கையிலகப்பட்டு
வெட்டப் படுவதும் அவற்றின் கருமமே
என்றுநீர் சும்மா இருங்களேன்
என்றதும் குன்றினர் ஏற்கவந் தோரே
|
( 170
)
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 ) |
வானம் அறுந்து விழுந்ததாய் பரந்த நீலப்
பெருங்கடல்
ஆன திசையை அளந்திடும் அளவில் இருந்த ஆழியில்
பென்னம் பெரிய சுறாமீன் பின்னும் பசியால் அலைந்தது;
சின்னஞ் சிறிய மீனினை விழுங்க வாயைத் திறந்தது.
சின்னஞ் சிறிய மீனதைச் சிலிர்ந்து மருண்டு கேட்டது;
என்னை விழுங்க வேண்டுமா? இந்த கடலில் உயிர்ப்புடன்
உன்னைப் போல எனக்குமே உரிமை உண்டு வாழ்ந்திட
கன்னங் கறிய ஆழியுள் கருதும் அறத்தின முன்சமம்.
சிரித்துச் சுறாவும் கேட்டது; சின்னஞ் சிறிய மீனமே
ரிநிகர்ப்பைப் பற்றியா சாற்ற வந்தாய் ஒன்றுசெய்!
என்பசிக்கு நீ உனை இரையாய் ஆக்க விரும்பலை;
உன்பசிக்கு நான்இரை உடன்பட் டேன்நீ உண்டிடு,;'
என்று சுறாமீன் முடிக்குமுன் இயலும் வரையில் வாய்திறந்
தின்று விழுங்குவேன் என சுற்றுச் சிறுமீன் திரிந்தது.
பிறகு களைத்துச் சுறாவிடம் பெருமூச்சு ஒன்றுவிட்டுமே
அறம் உணர்ந்தேன் சுறவுநீ எனைவிழுங்குவாய் என்றதே.
|
( 220 )
( 225 )
( 230 )
|
பெரியார் முன்
சிறியார் பெற்ற பரிசு
|
வந்தேறிகளால் வாழ்நாள் எல்லாம்
அறியாமை இருட்டில் ஆழ்த்திய தமிழர்க்கு
அறிவொளி கூட்டிய அன்புடை பெரியார்
சீர்திருத் தத்தால் செம்மை நெறியினை
ஆர்வத் தோடும் மக்கள் அணைக்கையில்
சாதிஎன்னும் சழக்கு தகர்ந்தது;
சமயம் என்னும் தடைச்சுவர் இடிந்தது;
மதத்தின் நரித்தனம் மடிந்தொழிந்தது.
இவற்றைத் தாங்கிய என்றும் இலாத
கடவுள் என்னும் கயமையும் மறைந்தது.
அறியாமைக் கெலாம் அரணாய் இருந்த
வெறித்தனம் மிகுந்த சாதியும் சமயமும்
மதமும் கடவுளும் மண்ணில் உண்டாக்கிக்
கதைகளை வளர்த்தவர் -- உழைக்கா துண்ணும்
சோற்றால் அடித்த சோம்பேறிகள் எலாம்:
ஆட்டம் கண்டனர் அறிஞர் பெயரால்.
உண்மை ஒளியினை மக்களுக் கூட்டிய
பெரியார் தம்மை ஏசினர் பேசினர்.
குட்டி நாய்கள்போல் குரைத்தப் பார்த்தனர்;
மோழை நரிகள்போல் ஊளை இட்டனர்.
நெருப்பின் முன்னர்ப் பருத்திப் பொதியா?
வெள்ளத்தின் முன் உப்பு மூட்டையா?
ஊற்றை மண்ணால் அடைக்க முடியமா?
புல்லேந்து கையால் வில்லேந்துவதாய்ச்
சொல்லேந்திப் பார்த்துச் சோர்வடைந்தனர்
பீடண மரபில் பிறந்த ஒருவனைக்
கேடய மாக்கிக் கீழ்அறுப்பவர்கள்
ஒருமுறை பெரியார் திருமுன் சென்றனர்.
உழைக்கா துண்டு பிழைக்கும் வாழ்வினில்
மண்ணைப் போட்டதால், மக்கள் கண்ணைத்
திறந்ததால், தீண்டாமைத்தீ அவித்ததால்,
சுரண்டலை, திருட்டு வழிகளை அடைத்ததால்,
தாக்கு தாக்கெனத் தாக்கிப் பேசினர்.
பூசனை மொழியால் ஏசிச் சலித்தனர்;
இன்னாச் சொற்களை இன்புடன் கேட்டுப்
புன்னகை பூத்தார் நன்னலப் பெரியார்.
"ஏசுகின்ற என்னுடைய நண்பர்காள்
கூசுகின்ற மொழி கொஞ்சம் இருப்பின்
அதனையும் நீர் அர்ச்சனை செய்க;
எதற்கு நிற்கிறீர் எதிரில் வந்தமருக
என்ன குறையின்னு எடுத்துச் சொல்லுக"
என்று கேட்டதும், நின்றவர் வேர்த்தனர்.
பக்கத் தழைத்தே உட்கார வைத்தார்.
"யாரையாவது காணச் சென்றால்
ஆர்வத்துடன் நீர் அங்கையில் என்ன
எடுத்துச் செல்வீர், இயம்புவீர என்றார்.
"குழந்தைகள் இருத்தால் பழங்களுடனும்
நண்பர்கள் என்றால் திண்பண்டங்களுடனும்
மாண்பினர் என்றால் மாலையுடனும்
"காணச் செல்வோம என்று கூறினர்.
காணச் சென்றவர் ஏற்க மறுத்தால்
மாண்புப் பரிசினை என்னசெய் வீர்கள்?"
என்று கேட்டார், ஈடிலாப் பெரியார்.
திருப்ப எடுத்து வீடு திரும்புவோம்
இழப்பில்லா நாள்என எண்ணி மகிழ்வோம்.
"அதுபோலத்தான் ஐயா, உங்கள்
ஏச்சையும் பேச்சையும் ஏற்கவில்லைநான்,
பரிசுப் பொருள்களைத் திருப்பக் கொண்டே
இழப்பிலா மகிழ்வில் எடுத்துச் சொல்லுவீர என்று பெரியார் இயம்பினார்; ஏசினோர்
எரிமலை வீழ்ந்த சருகாயினரே.
|
( 235
)
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 ) |
சிறிய குட்டை ஒன்று -- வெயில்
சித்திரையின் போது
வறண்டு வயிறே வாயாய் -- வெடித்து
வான் மழைக்கே ஏங்கி
நிறம் மாறிப் போச்சு -- தன்
நெஞ்சுலர்ந்து போச்சு.
கோடையிலே ஒரு நாள் -- முகில்
குளிர்ந்த காற்றைப் பெற்று
வாடையிலே செல்வன் -- சிறு
கஞ்சி வார்ப்பதைப்போல்
கோடை மாரி கொஞ்சும் -- மழை
கொடுத்துவந்து சென்றான்.
குட்டையப்பன் தனது -- சிறு
கும்மி நிறைந்த தாலே
அட்டகாசம் செய்தான் -- தவளை ஆரவாரத் தோடு
கொட்டாவியும் விட்டான் -- பசிக்
கொடுமை தீர்ந்ததென்றே.
குட்டைப் புத்திக்காரர் -- மக்கள்
கூட்டத்தையும் நினையார்,
கிட்டியதுபோதும் -- என
கேளிரையும் மறப்போர்
மட்டிலாத உலகம் -- நிறை
மகிழ்ச்சி கொள்ள வாழ்வாய்.
|
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
|
கொள்ளை வனப்பு கூடிய குழந்தைகள்
குள்ள வாத்துகள், கிள்ளைக் கூட்டம்!
பள்ளி வகுப்பில் பிள்ளைகட்குக்
கணக்குப் பாடம் விளக்கினார் ஆசிரியர்.
"ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்
இரண்டும் ஒன்றும் மூன்றாகும்
ஒன்றும் மூன்றும் நான்காகும்
நான்கும் ஒன்றும் ஐந்தாகும்."
"ஐந்தோடு ஒன்றைக் கூட்டினால் என்ன?"
ஐந்தருவிபோல் இசைத்த பிள்ளைகள்
வினாப்புலி முன்னர் மான்குட்டி யாயினர்,
மீண்டும் ஆசிரியர் விளக்கம் உரைத்தார்.
"ஈண்டொரு தெளிவால் இயம்புவீர் விடையை;
உங்கள் இடத்தில் உங்களைப் போன்ற
மயிற்புறா ஐந்தினை முதலில் தருகிறேன்
மயிற்புறா மற்றொன்று மீண்டும் தருகிறேன்
இப்பொழு தெத்தனைப் புறாக்கள் செப்புவீர்?"
"ஏழு" என்றான் யாழ்ஒலி எழுந்தே.
எப்படி என்றார் வியப்புடன் ஆசிரியர்.
"ஐந்து புறாக்களை முதலில் தந்தீர்
அடுத்தொரு புறாவினை அதனுடன் தந்தீர்
எங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு
புறா இருக்கின்றது. இராதா ஏழு?"
என்றதும் வகுப்பாம் வானில்
இடிஒலி போல சிரிப்பொலி வெடித்ததே.
|
( 320
)
( 325 )
( 330 )
( 335 )
( 340 ) |
|
|
|