பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு103

Untitled Document
639 கண்ணப்பன் பூசைகொளும்
     கடவுள் திருக்கோயிலிலே,
நண்ணக்கூடாதோ? நாங்கள்
     நடையில்வரல் ஆகாதோ?

640 என்பினையும் தோலினையும்
     ஏந்துகின்ற சிவபெருமான்
அன்பர்எமக் காலயத்தில்
     அருள்செய்ய மாட்டாரோ?

641 சிலந்திக்கும் வரம்அளித்த
     சிவபெருமான் திருவடியை
நலம்பெறவே கண்டுநாங்கள்
     நமக்கரித்தால் ஆகாதோ?

642 பெற்றான்எனும் சாம்பானுக்குப்
     பேறளித்த பெருமானை
வற்றாத அன்பொடு யாம்
     வணங்குதலும் வழுவாமோ?

643 நந்தனுக்குப் பதமளித்த
     நடராசன் எங்களுக்கும்
சொந்தம்எனக் கூறுவதில்
     சொல்லிழுக்கும் உண்டோ? ஐயா!

644 நந்தனுக்குப் பதமளித்த
     நடராசன் கோயிலிலே
வந்தனைகள் செந்துநாங்கள்
     வழிபடுதல் முறை அலவோ?

645 பண்ணமையப் பாடிவந்த
     பறைச்சிக்கும் பரிசளித்த
கண்ணபிரான் திருவடி யாம்
     கண்டுதொழல் ஆகாதோ?