| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 109 |
Untitled Document | 687 | | பட்டப் பகல்வரும் பேயாம் - ஒரு பக்கமே பார்க்கப் பழகிய பேயாம்; முட்டிக் குனிந்திடும் பேயாம் - அது முன்னேற்றம் கண்டு முடமாகும் பேயாம் |
| 688 | | கண்ணிலே காணும்பேய், ஐயா! - இரு காலும் நிலத்தில் பதியும்பேய், ஐயா! நிண்ணய மில்லாப் பேய், ஐயா! - நடு நீதி நெறிகாணா நீசப்பேய், ஐயா! |
| 689 | | கோயிலின் வாசற் படியில் - நிதம் கும்மாளி கொட்டிக் குதித்தாடி நிற்கும்; வாவிக் கரையிலும் நிற்கும் - அங்கு வந்த மனிதரை ஓட்டித் துரத்தும். |
| 690 | | பிள்ளைமார் வீட்டிலும் தங்கும் - உயர் பிராமணர் வீதியில் எங்குமே சுற்றித் துள்ளி விளையாடி நிற்கும் - அவர் சோமன் புடவைகளிற் சுற்றிக் கிடக்கும்; |
| 691 | | மண்கலத் துள்ளே இருக்கும் - அதில் வைத்த பண்டத்தில் மறைந்தும் இருக்கும்; வெண்கலம் வெள்ளிபொன் கண்டால் - உடன் வெட்கம் அடைந்து வெளியேறிப் போகும். |
| 692 | | வேதக் கடலைக் கலக்கும் - அதில் வேண்டும் விதிவலை வீசிப் பிடிக்கும், சாதிப் பிளவை உண்டாக்கும் - எங்கும் 'சண்டாளா! ' 'சண்டாளா! ' என்றே முழங்கும். |
| 693 | | வஞ்சம் பொறாமைகள் எல்லாம் - அதை வட்டமாய்ச் சுற்றி வரும்பரி வாரம்; நெஞ்சம் நடுங்குதே, ஐயா! - அதன் நிட்டூரம் சொல்லி முடியாதே, ஐயம்! |
| 694 | | கூடியிருக்க வொட்டாது - நண்பர் கொண்டு தருவதை உண்ண வொட்டாது; தேடி வருவோரை அன்பாய் - வீட்டுத் திண்ணையில் உட்கார வைக்க வொட்டாது. | |
|
|