பக்கம் எண் :

132கவிமணியின் கவிதைகள்

Untitled Document
858 வேறுவேறு புண்ணியங்கள் செய்யவேண்டுமோ - கதர்
     வேட்டிவாங்கி அணிவது போதாதோ? ஐயா!
நூறுபேருக் கன்னம்நிதம் அளித்தபலன் - இந்த
     நூலாடை கட்டுபவர்க் குண்டோ, ஐயா!

107. வட்ட மேசை மாநாடு
'ஆண்டிப் பண்டாரம்' மெட்டு
859 குறத்திப் பெண்ணேநீ - எனக்கோர்
குறியுரைப்பாயோ?

860 வட்டமேசை மகாநாடு
     மங்களமாய் முடிந்திடுமோ?
திட்டமாகச் சுதந்திரத்தின்
     தீர்மானம் பழுத்திடுமோ?

861 கற்றவர்கள் பெரியோர்கள்
     கப்பலேறிச் சென்றவர்கள்
வெற்றிகொண்டு வருவாரோ?
     வெறுங்கையாய்த் திரும்புவரோ?

862 இந்து மக்கள் மகமதியர்
     இணங்கிமனம் பொருந்துவரோ?
பந்தமறக் கோட்டைக்குள்ளே
     படைகள் வெட்டி நிற்பாரோ?

863 ஒட்டிவரும் இந்துமுஸ்லிம்
     ஒற்றுமை உறுதியாமோ?
மொட்டைத்தலை குடுமியோடு
     முடிக்க முயன்றது வாமோ?

864 மன்னவர்கள் இசைவாக
     வருவாரோ? மாறி அவர்
தந்நயமே கருதிநம்மைத்
     தனி வழியே விடுவாரோ?

865 தீதான அடிமைநிலை
     தீர்ந்திடவே நம்மவர்கள்
வாதாடிச் செயிப்பாரோ?
     வாய்பேசா திருப்பாரோ?