பக்கம் எண் :

168கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1061 சீருயர் குணங்கள் வாய்ந்து
     சிறந்தமா தரசி யென்றித்
தாரணி புகழும் செல்வி
     சகுந்தலை மனத்திற் கொண்ட
நேரிய நினைப்பின் மாட்சி
     நிகழ்த்துமிந் நிலையம் வாழ
வாரண முயர்த்த செவ்வேள்
     மலரடி வணங்கு வோமே.

150. தஞ்சைக் கலைக்கூடம்

1062 பண்டைத் தமிழரின் பண்பாட்டை மக்களின்று
கண்டறிய வந்த கலைக்கூடம் - மண்டுபுகழ்
ஓங்குஎழும் தஞ்சை யுடையார் திருவருளைத்
தாங்கிநிதம் வாழ்க தழைத்து.

வேறு

1063 முற்றா மதியை அழகுபெற
     முடியிற் சூடும் முதல்வாநின்
பெற்றாள் மலரை அன்போடு
     புகழ்ந்து போற்றிப் பணிகின்றேன்;
கற்றார் தஞ்சை மாநகரில்
     கண்ட கவினார் கலைக்கூடம்
வற்றாப் பொன்னி நதிபோல
     வாழ வரம்நீ வழங்குவையே!

1064 சீத மதிபுனையும் தேவாதி தேவாநின்
பாதமலர் போற்றிப் பணிகின்றேன் - ஓதுபுகழ்
செந்தமிழ்த் தஞ்சையிலிச் செல்வக் கலைக்கூடம்
சந்ததமும் வாழவரம் தா.

151. தஞ்சை தேவி நாடகசபை

1065 கன்னல் ஒழுகும் இன்னிசையால்
கண்ணைக் கவரும் அபிநயத்தால்
பன்னற் கரிய அரங்கமைப்பால்
பாரில் மக்கள் மகிழ்வடைய