பக்கம் எண் :

170கவிமணியின் கவிதைகள்

Untitled Document
நகரசபை

1072 சொல்லற் கரிய கலைவளரத்
     தொழில்கள் வளரப் பொருள்வளரத்
தொல்லை தருநோய் அறநீங்கிச்
     சுகமாய் மக்கள் வாழ்ந்துவர
நல்ல நல்ல நெறிகண்டெந்
     நாளும் போற்றிப் பணியாற்றி
நெல்லை நகர சபையுலகில்
     நீடு வாழ்க வாழ்கவே!

சபைத்தலைவர்

1073 அல்லும் பகலும் உழைத்திடுவோன்
     அன்பு கனிந்த உரைதருவோன்
நெல்லை நகர சபைத்தலைவன்
     நேர்மை காணும் நெறியுடையான்
நல்லன் நல்லா ரெல்லார்க்கும்
     நண்பன் ராம சாமிநிதம்
முல்லை முதல்வன் துழாய்மார்பன்
     முகுந்தன் அருளால் வாழியவே!

154. பாளையங்கோட்டை நகரசபை

1074 தென்னாட்டில் கல்வியினால் செல்வம் தன்னால்
     சீருயர்ந்த நகரமென் றறிஞர் போற்றி
முன்னாட்டுப் பாளையமா நகரை யாளும்
     முறைதேர்ந்த நகரசபைக் கினிது வாய்த்த
சொன்னாட்டு வைரவிழாச் சிறப்புற் றோங்க,
     தொண்டருக்குத் தொண்டாற்றித் துணையாய் நிற்போன்
மின்னாட்டு விரிசடையான் பாதப் போதை
     மெய்யன்போ டெப்போதும் வணங்கு வோமே!

சபை வாழ்த்து

1075 பீட பெறவே நல்வாழ்வு
     பேணும் வழிகள் பலகண்டு
பாடு பட்டுத் தளராது
     பணிகள் புரியும் சபையென்ன