பக்கம் எண் :

190கவிமணியின் கவிதைகள்

Untitled Document
புத்தக வாழ்த்து (12)
200. நாஞ்சில் வெண்பா
1175 செந்தமிழ் நங்கை திரைகொண்ட செல்வம்கை
வந்ததென உள்ளம் மகிழ்ந்தனளால் - முந்தும்என்
நண்பா சிவராஜ நாவலா நின்னாஞ்சி
வெண்பாவைக் கேட்டு வியந்து,

1176 முன்னைய நாஞ்சி முதுமகள்இப் பாவணிந்த
பின்னையொரு பேரிளம் பெண்ணானாள் - மன்னிரத
வாதியரின் ஆய்ந்தகவி வாணர் பெரியரென்று
ஓதுவதும் பொய்யுரையா மோ?

201. மகாகவி காளிதாசன்
1177 ஞாலத்தில் அரியகவி காளிதாசன்
     நாகடத்தில் அரியதொரு நாடகத்தைச்
சேலொத்த கண்ணிசகுந் தலையின் பேரால்
     தெய்வமொழி அணிபெறமுன் செய்தாஃதை
மூலத்தின் உயிர்நாடி யெழுந்தெ முந்து
     மொழி பெயர்ப்பில் விசையோடு பேசுமாறின்
பாலொத்த செய்தமிழின் சுத்தானந்த
     பாரத மெய்ஞ் ஞானியின்று பகர்ந்திட்டேனே.

202. செண்பகராமன் பள்ளு
1178 வள்ளலுயர் தென்கோவை மன்செண் பகராமன்
பள்ளினிமை யானும் பகருவதேன் - தெள்ளமுதப்
பாட்டிசைக்கோர் பச்சைப் பசலையுமே சாய்ந்தாடிக்
காட்டியதால் உள்ளக் களிப்பு.

203. மு. கதிரேசன் செட்டியார்
1179 ஆரா வமுத மனைய தமிழுக்கோர்
பேரா சிரியனெனப் பேர்பெற்றோன் - சீராரும்
கண்ணுதலுக் கன்பன் கதிரேசன் என்றென்றும்
மண்ணுலகில் வாழ்க மகிழ்ந்து.