பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு193

Untitled Document
1190 வங்க மகளின் திருமுகமாய்
     வாய்த்த காளி கட்டத்தில்
பொங்கு புகழ்சேர் பாரதிபேர்
     போற்றி வளரும் தமிழ்ச்சங்கம்
தங்கும் அன்பால் தந்தமலர்
     தரணிமீது வாடாமல்
எங்கும் அறிவின் மணம்வீசி
     இனிது வாழ்க வாழ்கவே

1191 சீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும்
பாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர்
சூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா
வாரிது சூழுகில் வாழுகவே.

206. பூசைபிள்ளை காவடிச் சிந்து

1192 ஈசன் குமரன் ஆறுமுகன்
     எமையாள் முருகன் திருவருளால்
பாச பந்தம் அறநீங்கல்
     பரமானந்த நிலைகாணப்
பூசைப் பிள்ளை செந்தமிழில்
     புனைந்த இனிய பாமாலை
வசம் வீசி இவ்வுலகில்
     வாடா தென்றும் வாழ்கவே.

207. குலேச வெண்பா

1193 நாடும் அவதானியென நாடுபுகழ் ஆறுமுகன்
பாடுங் குசேலவெண் பாவினிலே - பீடுபெறு
செந்தமிழ்ச் செல்வி திருநடங் கண்டுநான்
வந்தனம் செய்தேன் மகிழ்ந்து.

208. பாரதி ஜயந்தி மலர்

1194 ஆரியத்தில் செந்தமிழில் ஆங்கி லத்தில்
அரியபல நூல்கள் ஆய்ந்து கற்ற
பேரறிஞர் எழுதுமெழுத் தோவி யங்கள்
பெற்றபெரும் செல்வமெனப் பேணுமிந்தப்