பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு197

Untitled Document
  வந்த நினைவு மலரென்றும்
     வாடா மலராய் மணம்வீச
அந்தி வண்ணா! பிறை சூடீ!
     ஆடும் பித்தா! அருள்கவே.

211. மலரும் உள்ளம்

1210 'பாலும் பழமும் ஏனம்மா?
     பசியே இல்லை' எனக்கூறிச்
சீலச் சிறுவர் சிறுமியர்கள்
     சிறந்த 'மலரும் உள்ள' மிதைக்
காலை மாலை என்றென்றும்,
     சுற்று மகிழச் செய்யுமிந்த
ஜாலக் கவிஞன் வள்ளியப்பன்
     தழைத்து வாழ்க வாழ்கவே!

1211 பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்
     பாடிப் பாடி மகிழ்வெய்த,
தெள்ளத் தெளிந்த செந்தமிழில்
     தேனார் கவிகள் செய்துதரும்
வள்ளி யப்பா! நின்னினய
     'மலரும் உள்ளம்' என்றென்றும்
புள்ளி மயில்வா கனனருளால்
     புவியில் வாழ்க! வாழ்கவே!

1212 சின்னஞ் சிறுவர் சிறுமியர்க்குச்
     சிறந்த கருத்தைத் தெளிவாகக்
கன்னல் செந்தேன் முக்கனிகள்
     கலந்த இனிய சுவையோடு
மன்னும் கவிதை மணம்வீசி
     'மலரும் உள்ளம்' என்றென்றும்
பன்னற கரிய புகழ்பெற்றிப்
     பாரில் வாழ்க வாழ்கவே!