பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு203

Untitled Document
220. திருக்குறள் இன்பம்

1237 ஓதுநந் தாய்மொழிக்கு உயிரை யொத்தநூல்,
பூதல முழுவதும் புகழ்ந்து போற்றுநூல்,
பொய்யகம் போக்கிப் புனித மாக்குநூல்,
மெய்யகம் நாட்டிமேல் வீடு காட்டுநூல்,
ஒருமதம் ஒருநெறி ஒருபொரு ளுண்மையை
விரிநில மெங்கணும் விளங்க வைத்தநூல்,
தெள்ளிய தமிழ்மறை வள்ளுவர் நூலே;
ஒப்பற இந்நூற்கு உரை வகுத்தவர்
பற்பலர்; அவரெலாம் விற்பன ராயினும்,
உலகிருள் விலக்க உதித்தொளி வீசு
முழுமதி யினைத்தம் முன்றிலி னின்று,
நோக்கி "ஈ தெம்மதி நும்மதி யன்று" எனச்
செப்புஞ் சிறுமகார் செய்கையே போன்று அத்
தெய்வப் புலவனைச் செந்நாப் போதனைச்
சைவன், வைணவன், சமணன், பௌத்தன்,
எனக் கொண்டு அவரவர்க் கிசைந்த படிநூற்
செம்பொருள்முற்றுந் திரியச் செய்தனர்.
ஆதலின்,
உள்ளதை உள்ளவாறு உணர்ந்துளங் கண்டு,
நடுநிலை யமர்ந்து, நவிலுமிந் நல்லுரை,
எம்மதத் தவர்க்குஞ் சம்மத மாமுரை,
சிறியருங் கற்றுத் தேறத் திகழுரை,
பெரியவரும் விரும்பிப் பேணும் புத்துரை;
ஆழ்பொரு ளுள்ளே மூழ்கி யெடுத்து
நிரல்படக் கோத்து நித்தில மாலைபோல்
குறள்மணி யிடையே குயிற்றிய ஒள்ளுரை;
வாழ்வாங்கு வாழும் வழியைத் துலக்கும்
திருக்குற ளின்பத் தெளிவுரை; இதனைத்
தேனினும் இனிய செஞ்சொலின் அமைந்த
வசன நடையில் வழங்கினன்; அறமும்
உண்மை யறிவும் உலகெலாம் பரவ