பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு209

Untitled Document
  எஞ்சிலிலா எவ்வளமும் பெருகி இந்நாடு
     இமையவரின் திருநாடு ஒத்து இலங்கி வாழ
பஞ்சவர்க்குத் துணைபுரிந்த பரந்தாமா! நின்
     பாதமலர் இணை போற்றிப் பணிகின் றோமே!

1260 ஜாதி சமயவெறி தளரக் கலைவளர
நீதி வளர அறம் நிலைத்த நிதிவளர
ஆதி பகவனடிக் கன்பு வளரச் செய்த
மாதவப் பயனென வாய்த்த குடியரசு

1261 வெற்றி விளங்கும் விரோதிநல் லாண்டதனில்
பற்றுதை மாதம் பதிமூன்றில் - பெற்றபுகழ்
இந்திய நாட்டில் எழுந்த குடியரசு
சந்ததம் வாழ்க தழைத்து.

233. கம்பன் விழா

1262 வையகத்து நல்வாழ்வு வாழும் வழிகளெல்லாம்
ஐயமறக் காட்டும் அருட் புலவன் - செய் தமிழ்
பாக்கடலைத் தந்தமுதம் பாலித்த கம்பன்சீர்
நாக்கமழப் பாடுவோம் நாம்.

1263 ஆரிய யத்தோ ரியதமிழ்
ஆழம் கண்ட பேரறிஞன்
தேரும் பிரமன் படைப்பையெலாம்
திருத்தி யழகு செயவல்லோன்
யாரும் புகழக் கவியுலகில்
இராஜ ராஜன் எனத்திகழ்வோன்
பாரில் எங்கள் கம்பனெனப்
பாடிப் பாடி மகிழ்வோமே.

1264 கங்கை பெருகி அலைமோதிக்
     கரைபு ரண்டு வருவதெனக்
தங்கு தடையில் லாதொழுகும்
     தமிழின் னமுதம் ததும்பியெழப்
பொங்கு புகழ்வோ ராமகதை
     புகன்ற கம்ப நாடன் சீர்
எங்கும் பரவி யிவ்வுலகில்
     என்றும் வாழ்க வாழ்கவே