பக்கம் எண் :

218கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

1302 ஆயிரத்து நூற்றிருபத் தையா மாண்டில்
     ஆடியெட்டில் ஆதித்த வாரம் தன்னில்,
தூயகலை வளர்த்த தமிழ்த் தியாக ராஜன்
     சுவையொழுகு முத்தமிழ்நூல் பலவும் தந்தோன்
வாயில்லாப் பிராணிகளின் வாழ்வுக் காக
     வாதம்செய் துயிர்ப்பலியை மறுத்த வீரன்
மேயபுகழ் இலக்குமண நண்பன் எம்மை
     விட்டகன்று விண்ணவர்தம் விருந்தா னானே.

வேறு

1303 ஞானி வடலூர் வள்ளலையெந்
     நாளும் போற்றும் குணசீலன்
தேனைப் பாலை இசையமுதைச்
     சேர்த்தின் கவிகள் செய்திடுவோன்
ஊனை உண்ணேல் உண்ணேல் என்று
     ஓதும் அறிஞன் இலக்குமணன்
ஆன வயதெண் பத்தேழில்
     அமர வாழ்வை அடைந்தனனே!

244. பி. சிதம்பரம் பிள்ளை

1304 தேர்ந்த தமிழன் சிறந்த வழக்கறிஞன்
கூர்ந்தமதிவாய்ந்த குணசீலன் - ஆர்ந்தபுகழ்த்
தென்னாஞ்சில் நாகைச் சிதம்பரம் பிள்ளையின்
நன்னாமம் போற்றுவோம் நாம்.

245. அரவிந்தர்

1305 ஐயம் அறவே நூற்கடலில்
     ஆழ்ந்து மூழ்கி ஆராய்ந்து
பொய்யைப் போக்கி மெய்கண்ட
     புனிதன் புதுவை மாநகரில்