Untitled Document
| 1330 | | நெஞ்செரிய வயிறேங்க நினைக்கும்போது நித்தி ரைகள் விட்டொழிய வஞ்சஞ்செய் மாயாவி உருத்திராக்கம் வாங்கிவரம் பெற்றபணம் ஏப்பமிட்டாய் மிஞ்சிவாழாய் மிரட்டிடுவாய் புரட்டி டுவாய் மீண்டிங்கே கால்தூ க்கவைக்க மாட்டாய் சஞ்சலமே செய்திட வேசனித் திட்டாய் சா போற்றிக் கண்ணு நீயே |
| 1331 | | மந்தாரை மலர்ந்திருக்க மதுவுண்ணும் வண்டெங்கே? மாமுல்லைக் கொடிபடர, வளருங்கொள் கொம்பெங்கே? சிந்தாத மணியிருக்க ஒளி யெங்கே சென்றதெனத் தேரூரிற் பலர்கூடித் தெரிந்துகொளக் கேட்டதற்கு நந்தாத பரஞான அமுதுண்டு தெவிட்டெறியும் நற்பரமா னந்தனருள் பெறச் சென்ற நண்பா நீ வந்தாலே மறுமொழியும் வகுப்பமெனச் சோதிடநூல் வல்லாரும் கூறுகின்றார் வகையேதும் அறியேனே! |
| 258. சிதம்பர கிருஷ்ண அய்யர் |
| 1332 | | மன்னு மலையாள மடமானிளம் பயில்கரிய மாணிக்க நகரில் எதோ தன்னைய வலைவீசி உட்புகும் தருணமதி தாபமுதல் சூழ்வ தாலோ | |
|
|