பக்கம் எண் :

226கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மை
     களிப்பொடுநீ வரவேற்கும் குறிப்கைக் கண்டேன்
வள்ளலுன்றன் திருக்கழலின் ஒலிஎன் னுள்ளம்
     மலிய நிறைந் தானந்தம் அளிக்கு தையா!

260. சுசீந்திரம்

1337 ஆற்றங் கரையுண்டு,
அழகான சோலையுண்டு;
நந்த வனமுண்டு,
நன்செய்கள் சூழவுண்டு;
சத்திரங்கள் உண்டு,
தமிழ்க் கல்விச் சாலையுண்டு;
தெப்பக்குளமுண்டு,
தேரோடும் வீதியுண்டு,
மாளிகைகள் உண்டு,
மடங்கள் பல உண்டு,
நான்கு மதில்கள் உண்டு,
நடுவிலொரு கோவிலுண்டு,
கோபுர வாசலுண்டு,
கொடிமரம் இரண்டுண்டு்;
சித்திரையும் மார்கழியும்,
திருவிழாக் காட்சி உண்டு;
பார்த்திடக் கண்கள்
பதினாயிரம் வேண்டும்;
தொன்னகரம் ஆன
சுசிந்தைச் சிறப்பெல்லாம்
என்னொரு நாவால்
எடுத்துரைக்க ஏலாதே.

261. நாஞ்சில் நாடு

1338 மாமதில் போல்மலை சூழும் நாடு - வளம்
மாதமும் மாரி பொழியும் நாடு;
பூமக ளின்முக மாகும் நாடு - சேரர்
பொன்முடி சூடிப் புரக்கும் நாடு.