பக்கம் எண் :

236கவிமணியின் கவிதைகள்

Untitled Document

60   விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொண்மின்
பழையன திரிதலாய்ப் படித்துக் கொண்மின்
புதியன புகுதலாய்ப் பொறுத்துக் கொண்மின்.
இன்னும்,
அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின்.

65   நாயேன்
கொண்ட கருத்தைக் குறைவறக்
கண்டு கொள்வது பெரியவர் கடனே.

1. குலமுறை கிளத்து படலம்
1391 68   என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்க முள்ளோரே என்கதை கேளும்;

70   நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்துமல்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே!
ஏழையென் துயரம் எல்லாம் கேளும்.
காசினி மீதென் கதைபோல் இல்லை

75   சீதையின் கதையும் சிறுகதை யாகும்
பாஞ்சா லியின்தை பழங்கதை யாகும்;
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை
உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம்
கேளும்! கேளும்! என்கதை கேளும்!

80   பதும நாபன் பாத பங்கயம்
அணிமுடி யாக அணிதிரு மூல
மன்னர் புரக்கும் வளமலி வஞ்சி
நாட்டிற் சிறந்த நாஞ்சில் நாட்டில்
தொல்லூ ராகும் நல்லுர ரதனில்

85   மேழிச் செல்வம் விரும்பும்வே ளாளர்
குலத்தில்ஓர் எளிய குடியிற் பிறந்தேன்.
தந்தைநோ யாளி, தாயுமோ ரேழை.
அண்ணன் தம்பிகள் ஐவரும் மாண்டார்.
அக்காள் தங்கையும் இல்லை, அடுத்தவர்