பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு243

Untitled Document

3. கடலாடு படலம்
1394 நேர்ந்த வெல்லாம் நெடுநா ளாகியும்

265 நெஞ்சைவிட் டின்னும் நீங்க வில்லையே!
இவற்றை,
இறந்து போகுநாள் அன்றி, இடையில்
மறந்து போய்விட மருந்தும் இல்லையே?
சென்ற

270 ஆடி மாதம் அமாவாசை யன்று
குடும்பத் தோடு குமரித் துறையில்
தீர்த்த மாடச் சென்று, நாங்கள்
பட்ட பாடும் பரிசு கேடும்
சொல்லி முடியுமோ ! சொல்லி முடியுமோ!

275 கரையில் தர்ப்பணக் கடனெலாம் முடித்து,
நீரில் இறங்காது நின்றனர் கணவர்,
நின்றனர், நின்றனர், நெடிது நின்றனர்.
கண்டவர், 'இதற்கென் காரணம்' என்றனர்.
அவரும்,

280 'ஏக காலத் திவர்களை எல்லாம்
அங்கை பிடித்துநீர் ஆடு தற்குநான்
பன்னிரு கரத்தப் பரமன் அல்லவே,
ஆயிரங் கரத்தவ் அண்ணலும் அல்லவே!'

285 என்று பலபல சொல்லி, இறுதியில்
மணந்த முறையாய் மனைவிய ரெங்களைத்
தனித்தனி யாகத் தடங்கை பற்றிக்
கடல்நீ ராடினர். கதையிது பெரிதே!
இங்ஙனம்,

290 ஐந்து முறைநீ ராடிவந் ததனால்,
ஐயோ! அவரும் அறுபது நாள்விடாச்
சுரத்தில் விழுந்து துன்பம் அடைந்தனர்.
அடையவே,
ஏட்டைத் திருப்பித் திருப்பி யிருந்தும்

295 பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும்,
நாட்டு வைத்தியர் நாளைக் கடத்தினர்.